என் மலர்
நீங்கள் தேடியது "Ed Sheeran"
- டி20 உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பைனல் அடுத்தடுத்தாண்டுகளில் நடைபெறுகின்றன.
- இந்திய அணிக்காக உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறேன் என ரோகித் தெரிவித்துள்ளார்.
மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை, இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பைனல் ஆகியவற்றில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி மோதியது. இரண்டிலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது.
வருகிற ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்த அணியையும் இவர்தான் வழி நடத்துகிறார்.
இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் 36 வயதான ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது, குறிப்பாக ஒயிட்பால் (டி20) கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது.
ஆனால், நான் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவேன் என ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில்தான் ரோகித் சர்மா இங்கிலாந்து பாடகர் எட் ஷீரன் உடன் கவுரவ் கபூர் நடத்தும் "பிரேக்பாஸ்ட் ஆஃப் சாம்பியன்ஸ்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது எட் ஷீரன் ஓய்வு குறித்து ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ரோகித் சர்மா பதில் அளித்தார்.
எட் ஷீரன் ஓய்வு எப்போது எனக் கேட்ட கேள்விக்கு,
ரோகித் சர்மா: "இந்த நேரத்திலும் நான் நன்றாக விளையாடி வருகிறேன். ஆகவே, இன்னும் சில வருடங்கள் விளையாடும் வகையில் சென்று கொண்டிருக்கிறேன்" என்றார்.
எட் ஷீரன்: இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் வரைக்கும்?
ரோகித் சர்மா: "ஆமாம். இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புகிறேன். 2025-ல் இங்கிலாந்து ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைபெறுகிறது. இந்திய அணி அதற்கு தகுதி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. தோல்விகள் உங்களுக்கு நிறைய கற்றுக்கொடுக்கிறது." என்றார்.
- சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று மாலை எட் ஷீரனின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- இசை நிகழ்ச்சிக்கும் வரும் பார்வையாளர்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் பிரபலமானவர் இங்கிலாந்தை சேர்ந்த பாடகர் மற்றும் இசையமைப்பாளரான எட் ஷீரன். இவர் உலகம் முழுவதும் பயணம் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்.
அந்தவகையில் கடந்த வருடம் மார்ச் மாதம் மும்பையில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தினார். அது இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த இசை நிகழ்ச்சியில் ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். அதனை தொடர்ந்து இந்தியாவில் எட் ஷீரனின் இசை நிகழ்ச்சி எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருந்தனர்.
அதன்படி, கடந்த வாரம் முதல் இந்தியாவின் ஆறு நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தும் பயணத்தை எட் ஷீரான் தொடங்கினார். முதற்கட்டமாக பூனேவில் இசை நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று மாலை எட் ஷீரனின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இசை நிகழ்ச்சிக்கும் வரும் பார்வையாளர்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னையில் நடைபெறும் எட் ஷீரனின் இசை நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, இந்த இசை நிகழ்ச்சிகாக இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானையும், அவரது மகன் ஏ.ஆர். அமீனையும் எட் ஷீரன் சந்தித்து பேசியது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மற்றொரு புகைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசைக்கும் போது எட் ஷீரன் புகைப்படம் எடுக்கிறார். மேலும் எட் ஷீரன் குழு சென்னையில் முகாமிட்டுள்ள புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.