என் மலர்
முகப்பு » elderly woman death
நீங்கள் தேடியது "elderly woman death"
காரைக்காலில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த நிரவியைச் சேர்ந்தவர் அமீர்மரைக்காயர் (வயது57). இவர் காரைக்கால் நகரில் பொருட்களை வாங்கிகொண்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். காரைக்கால் முல்லையாறு பாலம் அருகே அமீர் மரைக்காயர் சென்றபோது, இவரது பின்னால் வந்த தமிழக அரசு விரைவு பஸ் இவர் மீது மோதியது. இதில் பஸ்சின் கீழே சிக்கிய அவர் அதே இடத்தில் தலை நசுங்கி உயிரிழந்தார்.
தகவல் அறிந்த திருமலைராயன்பட்டினம் போக்குவரத்து போலீசார் அமீர்மரைக்காயர் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.
×
X