search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elected"

    • 5-வது முறையாக மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்ட திருப்பத்தூரில் அமைச்சர் பெரியகருப்பனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • அமைச்சர் பெரிய கருப்பனுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளராக அமைச்சர் பெரியகருப்பன் 5-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து திருப்பத்தூர் அண்ணா சாலையில் ஒன்றிய, பேரூர் சார்பில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அமைச்சர் பெரியகருப்பனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதனை தொடர்ந்து திருப்பத்தூர், சிங்கம்புணரி, நெற்குப்பை, எஸ்.புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஒன்றிய தலைவர்கள், நகர செயலாளர்கள், பேரூராட்சி தலைவர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் அமைச்சருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். சில தினங்களுக்கு முன்பு ஊரகத் வளர்ச்சி துறையை அகில இந்திய அளவில் தமிழகம் 3-வது இடத்தில் வருவதற்கு சிறப்பாக செயல்பட்டதற்காக அமைச்சர் பெரிய கருப்பனுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஈராக் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய அதிபராக பர்ஹாம் சலேவை தேர்வு செய்துள்ளனர். #BarhamSalih
    பாக்தாத்:

    ஈராக்கில் சதாம் உசேன் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. அங்கு திடீரென ஐஎஸ் பயங்கரவாதிகள் எழுச்சி பெற்று பெரும் பகுதியை கைப்பற்றி தனிநாடு அமைத்தனர். தினமும் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தனர். எனவே அமெரிக்க கூட்டுப் படையின் உதவியுடன் கடந்த டிசம்பரில் அவர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டனர். 

    அதைத் தொடர்ந்து ஈராக்கில் ஜூலை 12-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மதகுரு மக்தாதா தலைமையிலான சயிரூன் கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்றது.

    இதற்கிடையே, வாக்குகளை எந்திரங்கள் மூலம் எண்ணாமல், நேரடியாக கைகளால் எண்ணும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதற்கான சட்ட மசோதா பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, வாக்குகள் அனைத்தையும் கைகளால் எண்ண வேண்டும் என பாராளுமன்றம் உத்தரவிட்டது.



    ஈராக் அதிபர் தேர்தலில் நடத்தப்பட்ட மறு வாக்கு எண்ணிக்கையிலும் மதகுரு மக்தாதா சதாரின் கூட்டணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், ஈராக் நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான பாராளுமன்ற கூட்டம் நேற்று நடந்தது. இதில் குர்தீஷ் இனத்தைச் சேர்ந்த குர்தீஷ் தேசபக்த யூனியன் கட்சியின் வேட்பாளராக பர்ஹாம் சலேவும், குர்தீஷ் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக பவுட் ஹூசைனும் போட்டியிட்டனர்.

    இந்த தேர்தலில் பர்ஹாம் சலே பெரும்பான்மையுடன் ஈராக்கின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். #BarhamSalih
    கர்நாடக சட்டப்பேரவையில் இன்று குமாரசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், சபாநாயகராக காங்கிரசைச் சேர்ந்த ரமேஷ்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். #KarnatakaAssembly #KarnatakaSpeaker
    பெங்களூரு:

    சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பா.ஜ.க.வை முதலில் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதன்படி எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். ஆனால் அவரால் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாததால், பதவி விலகினார். இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.  

    விதான் சவுதாவில் மஜத தலைவர் குமாரசாமி முதல் மந்திரியாக பதவியேற்றார். அவருடன் துணை முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவும் பதவியேற்றார்.

    இவர்கள் இருவரை தவிர மேலும் 32 பேர் மந்திரிகளாக பதவியேற்க உள்ளனர். இதில் காங்கிரசுக்கு 22 மந்திரி பதவிகளும், மஜதவுக்கு 12 மந்திரி பதவிகளும் அடக்கம்.



    இந்நிலையில், குமாரசாமி தலைமையிலான அரசுக்கு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்காக சட்டப்பேரவை இன்று கூடியது. முதலில் சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் சார்பில் ரமேஷ்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பா.ஜ.க. சார்பில் சுரேஷ்குமார் நிறுத்தப்பட்டிருந்தார்.

    ஆனால், கடைசி நேரத்தில் பா.ஜ.க தனது வேட்பாளரை திரும்ப பெற்றது. இதனையடுத்து சபாநாயகராக ரமேஷ் குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் பதவியேற்றதையடுத்து மாலை 3.30 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. #KarnatakaAssembly #KarnatakaSpeaker
    பெங்களூரில் உள்ள சொகுசு விடுதியில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக பரமேஸ்வரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். #KarnatakaCMRace #Congress #Parameshwara
    பெங்களூர்:

    கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பா இன்று முதல்வராக பதவியேற்றுள்ளார். 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

    இதற்கிடையே, மைசூரு சாலையில் உள்ள சொகுசு விடுதியில் காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ளனர். இன்று எடியூரப்பா பதவியேற்ற நிலையில், விடுதிக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

    கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சொகுசு விடுதியில் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், தற்போது மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள பரமேஸ்வரா, கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    ஒருவேளை காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமையும் பட்சத்தில், பரமேஸ்வராவிற்கு துணை முதல் மந்திரி பதவி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  #KarnatakaCMRace #Congress #Parameshwara
    ×