என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Eliminator"
- விராட் கோலி மும்பை அணிக்கெதிராக அவுட்டாகும்போது டி.வி. முன் நின்று கொண்டு மாம்பழத்தை காட்டி ஸ்வீட் மாம்பழம் என நவீன் டுவிட் செய்திருந்தார்.
- பிளே ஆஃப் சுற்றை இழந்தபோது வாய்விட்டு சிரிக்கும் ஒரு படத்தை பதவிட்டிருந்தார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் 2023 சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. இது கிரிக்கெட் போட்டி மட்டுமல்ல. எமோசன் நிறந்ததாக இருக்கும். அந்தந்த அணியின் ரசிகர்கள், வீரர்களின் ரசிகர்கள் மிகவும் ஆக்ரோஷம், எமோசன் காட்டுவார்கள்.
குறிப்பாக விராட் கோலி எப்படி ஆடுகளத்தில் எமோசன், ஆக்ரோசமாக இருப்பார்களோ அதேபோல் அவரது ரசிகர்களும் இருப்பார்கள். விராட் கோலியுடன் யாரும் மோதிவிட்டால் அவர்களை ட்ரோல் செய்து உண்டு இல்லை என ஆக்கிவிடுவாகர்கள்.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி- எல்எஸ்ஜி இடையிலான ஆட்டத்தில் எல்எஸ்ஜி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி வெற்றிக்குப் பிறகு கம்பீர்- விராட் கோலி இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
அப்போது ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக்- விராட் கோலிக்கும் இடையிலும் மோதல் ஏற்பட்டது. போட்டி முடிந்த பின் கைக்குலுக்கும் போதும் இருவரும் கைக்கொடுக்க மறுத்துவிட்டனர்.
இதற்கிடையே, விராட் கோலி மும்பை அணிக்கெதிராக அவுட்டாகும்போது டி.வி. முன் நின்று கொண்டு மாம்பழத்தை காட்டி ஸ்வீட் மாம்பழம் என டுவிட் செய்திருந்தார். மேலும், பிளே ஆஃப் சுற்றை இழந்தபோது வாய்விட்டு சிரிக்கும் ஒரு படத்தை பதவிட்டிருந்தார்.
இது ஆர்சிபி மற்றும் விராட் கோலி ரசிகர்களை கோப்படுத்தியது. சென்னையில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை அணிக்கெதிராக எல்எஸ்ஜி படுதோல்வியடைந்தது.
182 ரன்கள் விட்டுக் கொடுத்ததுடன், 101 ரன்னில் சுருண்டது. குறிப்பாக 3 பேர் ரன் அவுட் ஆனார்கள். நவீன் உல் ஹக் 4 ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தினார். இருந்தாலும் 38 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
பேட்டிங்கில் 1 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வாங்கடா... வாங்க... என எதிர்பார்த்துக் கொண்டிருந்த விராட் கோலி ரசிகர்கள் மாம்பழத்தை வைத்து நவீன் உல் ஹக்கை ட்ரோல் செய்து வருகின்றன.
இதற்கிடையே டுவிட்டரில் எல்எஸ்ஜி அணி magoes, mango, sweet, aam ஆகிய வார்த்தைகளை Muter words-ல் வைத்திருந்தது குறிப்பிட்டத்தக்கது.
12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. சென்னையில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறியது.
இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை சந்தித்தது. இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டது. டெல்லி அணியில் காலின் இங்ராம் நீக்கப்பட்டு காலின் முன்ரோ சேர்க்கப்பட்டார். ஐதராபாத் அணியில் யூசுப் பதானுக்கு பதிலாக தீபக் ஹூடா இடம் பிடித்தார்.
‘டாஸ்’ ஜெயித்த டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சஹா, மார்ட்டின் கப்தில் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் டிரென்ட் பவுல்ட் வீசிய முதல் பந்திலேயே விருத்திமான் சஹாவுக்கு நடுவர் ‘அவுட்’ வழங்கினார். ஆனால் நடுவரின் முடிவை எதிர்த்து விருத்திமான் சஹா அப்பீல் செய்து எல்.பி.டபிள்யூ. கண்டத்தில் இருந்து தப்பினார்.
மறுமுனையில் மார்ட்டின் கப்தில் அதிரடியாக ஆடினார். அவர் இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் ஒரு சிக்சரும், டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் தொடர்ந்து 2 சிக்சரும் அடித்து கலக்கினார். 3.1 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 31 ரன்னாக இருந்த போது விருத்திமான் சஹா (8 ரன்) இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து மனிஷ் பாண்டே களம் இறங்கினார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) ஐதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்தது.
அணியின் ஸ்கோர் 6.3 ஓவர்களில் 56 ரன்னாக உயர்ந்த போது அடித்து ஆடிய மார்ட்டின் கப்தில் (36 ரன்கள், 19 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) அமித் மிஸ்ரா பந்து வீச்சில் கீமோ பாலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன் பிறகு அணியின் ரன் வேகம் குறைந்தது. அடுத்து நிதானமாக ஆடிய மனிஷ் பாண்டே (30 ரன்கள், 36 பந்து, 3 பவுண்டரி) கீமோ பால் பந்து வீச்சில் ரூதர்போர்டிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.
இதனை அடுத்து விஜய் சங்கர், கேப்டன் கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அடித்து ஆடினார்கள். விஜய் சங்கர் ஆட்டத்தில் அதிரடி தென்பட்டது. 14.3 ஓவர்களில் ஐதராபாத் அணி 100 ரன்னை கடந்தது. நிலைத்து நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேன் வில்லியம்சன் (28 ரன்கள், 27 பந்து, 2 பவுண்டரி) இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் போல்டு ஆனார். சற்று நேரத்தில் விஜய் சங்கரும் (25 ரன்கள், 11 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் அக்ஷர் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
கடைசி ஓவரில் முகமது நபி (20 ரன்), தீபக் ஹூடா (4 ரன்), ரஷித் கான் (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. புவனேஷ்வர்குமார் ரன் எதுவும் எடுக்காமலும், பாசில் தம்பி 1 ரன்னுடனும் களத்தில் நின்றனர். டெல்லி அணி தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், டிரென்ட் பவுல்ட், அமித் மிஸ்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் நல்ல தொடக்கம் ஏற்படுத்தினார்கள். 7.3 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 66 ரன்னாக இருந்த போது ஷிகர் தவான் (17 ரன்) தீபக் ஹூடா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (8 ரன்) விரைவில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.
இதனை அடுத்து ரிஷாப் பான்ட், பிரித்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்தார். அடித்து ஆடிய பிரித்வி ஷா 38 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்த நிலையில் கலீல் அகமது பந்து வீச்சில் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த காலின் முன்ரோ (14 ரன்), அக்ஷர் பட்டேல் (0), ரூதர்போர்டு (9 ரன்) ஆகியோர் வந்த வேகத்திலேயே ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள். ஆனால் மறுமுனையில் ரிஷாப் பான்ட் அதிரடியாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். அணியின் ஸ்கோர் 18.5 ஓவர்களில் 158 ரன்னாக இருந்த போது ரிஷாப் பான்ட் (49 ரன்கள், 21 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) புவனேஷ்வர்குமார் பந்து வீச்சில் முகமது நபியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் 4-வது பந்தில் அமித் மிஸ்ரா(1 ரன்) சர்ச்சைக்குரிய முறையில் ரன்-அவுட் ஆனதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த பந்தை கீமோ பால் பவுண்டரிக்கு விரட்டி அணியை வெற்றி பெற வைத்தார். 19.5 ஓவரில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்கிறது. தோல்வி கண்ட ஐதராபாத் அணி வெளி யேறியது. #IPL2019 #DCvSRH
3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. லீக் சுற்று நிறைவடைந்த நிலையில் நெல்லையில் நேற்று இரவு 7.15 மணிக்கு இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோத இருந்தன.
இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானதால், இந்த போட்டி உடனடியாக ரத்து செய்யப்படுவதாக டி.என்.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது மறைவுக்கு அனுதாபமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் இன்று இரவு 7.15 மணிக்கு நத்தத்தில் (திண்டுக்கல்) நடக்க இருந்த கோவை கிங்ஸ்- காரைக்குடி காளை அணிகள் இடையிலான வெளியேற்றுதல் சுற்று ஆட்டமும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
ரத்து செய்யப்பட்ட இவ்விரு ஆட்டங்களும் மற்றொரு தேதியில் நடத்தப்படும், அதன் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இரவு வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) நடக்கிறது. இதில் புள்ளி பட்டியலில் 3-வது, 4-வது இடங்களை பிடித்த முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன.
தனது கடைசி லீக்கில் ஐதராபாத்தை வீழ்த்தி 16 புள்ளிகளுடன் பிளே-ஆப் சுற்றை உறுதி செய்த கொல்கத்தா அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவாக இருக்கிறது. ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் கைதேர்ந்தவராக திகழும் தினேஷ் கார்த்திக் (438 ரன்), ஆல்-ரவுண்டராக ஜொலிக்கும் சுனில் நரின் (327 ரன் மற்றும் 16 விக்கெட்), ஆந்த்ரே ரஸ்செல் (264 ரன் மற்றும் 13 விக்கெட்), அதிரடியில் மிரட்டும் கிறிஸ் லின் (425 ரன்) ஆகியோர் தான் அந்த அணியின் வெற்றிப்பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். சொந்த ஊரில் விளையாடுவது கொல்கத்தாவுக்கு இன்னொரு சாதகமான அம்சமாகும்.
ஏற்கனவே லீக் சுற்றில் ராஜஸ்தான் ராயல்சை இரண்டு முறையும் வீழ்த்தியிருப்பதால் அதே ஆதிக்கத்தை தொடருவதில் கொல்கத்தா அணி மும்முரமாக இருக்கிறது.
தொடக்கத்தில் தடுமாறிய ராஜஸ்தான் அணி ஒரு வழியாக போராடி அதிர்ஷ்டத்தின் துணையுடன் ‘பிளே-ஆப்’ சுற்றை (14 புள்ளி) எட்டியது. முன்னணி வீரர் ஜோஸ் பட்லர் (548 ரன்), ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்டோர் இல்லாத நிலையிலும் கடைசி லீக்கில் பலம் வாய்ந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சாய்த்ததால் ராஜஸ்தான் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். கடந்த சில ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளரும், ஆல்-ரவுண்டருமான கிருஷ்ணப்பா கவுதம், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் அந்த அணியின் துருப்பு சீட்டாக பார்க்கப்படுகிறார்கள். முந்தைய தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் ராஜஸ்தான் தயாராகி வருவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது.
இந்த மைதானத்தில் இந்த சீசனில் நடந்த 7 லீக் ஆட்டங்களில் 2-வது பேட் செய்த அணியே 5 முறை வெற்றி பெற்றிருக்கிறது. அதனால் டாஸ் ஜெயிக்கும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே அதிக வாய்ப்பு இருக்கிறது.
இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி போட்டியை விட்டு வெளியேற்றப்படும். வெற்றி காணும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற ஐதராபாத் அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் விளையாடும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் விவரம் வருமாறு:-
கொல்கத்தா: கிறிஸ் லின், சுனில் நரின், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் (கேப்டன்), ஆந்த்ரே ரஸ்செல், நிதிஷ் ராணா, சுப்மான் கில், பியூஸ் சாவ்லா, ஜாவோன் சியர்லெஸ், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.
ராஜஸ்தான்: ராகுல் திரிபாதி, ஜோப்ரா ஆர்ச்சர், ரஹானே (கேப்டன்), சஞ்சு சாம்சன், ஹென்ரிச் கிளாசென், கிருஷ்ணப்பா கவுதம், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரேயாஸ் கோபால், சோதி, உனட்கட், லாக்லின்.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. #KKR #RR #IPL2018 #Playoff
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்