search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ellyse Perry"

    • உ.பி. வாரியர்ஸ் அணிக்கெதிராக அடித்த சிக்ஸ் பரிசளிக்க நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை தாக்கியது.
    • உடைந்த கண்ணாடியை டாடா ஃபிரேம் செய்து எலிஸ் பெர்ரிக்கு பரிசாக அளித்துள்ளது.

    பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நாளை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    ஆர்சிபி- உபி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி கடந்த 4-ந்தேதி சின்னசாமி மைதானத்தில் மோதின. அப்போது ஆர்சிபி அணியின் எலிஸ் பெர்ரி அடித்த பந்து மைதானத்தின் பவுண்டரி லைனுக்கு வெளியே தொடரில் சிறந்த வீராங்கனைக்காக வழங்க இருந்த காரின் கண்ணாடியை தாக்கியது. இதில் கண்ணாடி உடைந்து சிதறியது.

    இந்த நிலையில் ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், உடைந்த கார் காண்ணாடியை ஃப்ரேம் (Frame) செய்து எலிஸ் பெர்ரிக்கு டாடா பரிசாக அளித்துள்ளது. அத்துடன் அதில் "பெர்பரி பவர்புல்பஞ்ச் (PerryPowerfulPunch)" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 33 வயதான எலிஸ் பெர்ரி வலது கை பேட்ஸ்மேன் ஆவார். இந்த சீசனிலா் எலிஸ் பெர்ரி 8 போட்டிகளில் 312 ரன்கள் குவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக எலிமினேட்டர் போட்டியில் 50 பந்தில் 66 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மும்பையை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது.
    • டெல்லி, மும்பை ஆகிய அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன.

    டெல்லி:

    2-வது பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கியது. 5 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    அந்த வகையில், டெல்லியில் நேற்று நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய பெங்களூரு அணி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி 4 ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு 15 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மும்பையை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ள பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. முன்னதாக, டெல்லி, மும்பை ஆகிய அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆர்சிபி அணி முதல் 2 போட்டிகள் விளையாடி இரண்டிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
    • பெர்ரி இரண்டு போட்டிகளில் முறையே 31 மற்றும் 13 ரன்களை எடுத்துள்ளார்.

    பெண்கள் பிரீமியர் லீக் 2023 சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் இடம் பெற்றுள்ள ஆர்சிபி அணி முதல் 2 போட்டிகள் விளையாடி இரண்டிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டரும் ஆர்சிபி அணி வீரருமான பெர்ரியிடம், உங்களுடன் தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலி மற்றும் எம்எஸ் டோனி ஆகியோரில் யாரை தேர்வு செய்யவீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது.

    கோலிக்கும் டோனிக்கும் இடையே ஒருவரைத் தேர்ந்தெடுப்பது என்பது உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடினமான பணிகளில் ஒன்றாக இருக்கும். இதற்கு அவர் தந்திரமான ஒரு பதிலை அளித்துள்ளார்.

    இருவரையும் தேர்வு செய்து, அவர்கள் விளையாடுவதை வெளியில் இருந்து பார்ப்பேன் என கூறினார்.

    கேள்வி: தொடக்க ஆட்டக்காரராக கோலி அல்லது டோனி யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

    பெர்ரி: நான் இருவரையும் தேர்ந்தேடுத்துகிறேன்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வியடைந்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி இன்று குஜராத் ஜெயன்ட்ஸை எதிர்கொள்கிறது.

    பெர்ரி இரண்டு போட்டிகளில் முறையே 31 மற்றும் 13 ரன்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×