search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elummalayan Temple"

    • பக்தர்கள் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனர்
    • பக்தர்கள் வருகையை முன்னிட்டு மலையடிவாரம் முதல் கோவில் வரை வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பழமையான ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது.அடர்ந்த வனப்பகுதியில் கரடு முரடான மலைப்பாதையில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து புரட்டாசி சனிக்கிழமை அன்று ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து செய்கின்றனர்.

    மூன்றாவது சனிக்கிழமையான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதல் ஏழுமலையானை தரிசிக்க கோவிலுக்கு வந்தனர். அடர்ந்த வனப்பகுதியில் 7 கிலோமீட்டர் தூரம் 7 மலைகளை கடந்து சென்று வழிபட்டனர். பக்தர்கள் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனர் . மலை மேல் உள்ள வற்றாத சுனையில் தீர்த்தம் எடுத்து அவுல் பச்சரிசி, தேங்காய், ஆகியவற்றை சாமிக்கு படைத்து வழிபட்டனர் .பக்தர்கள் வருகையை முன்னிட்டு மலையடிவாரம் முதல் கோவில் வரை வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் வனப்பகுதிக்குள் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு செல்ல தடை விதித்து ஆய்வு மேற்கொண்டனர். மலைஅடி வாரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    ×