என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Emanuel Sekaran"
- இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
- எம்.எல்.ஏ. வெங்கடேசன் தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி அவரது படத்திற்கு தி.மு.க. சார்பில் சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், நகர செயலாளர்-வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பொதுக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன், பேரூர் துணைச் செய லாளர்கள் ஸ்டாலின், கொத்தாளம் செந்தில், செல்வராணி ஜெயராமச் சந்திரன், வார்டு கவுன்சி லர்கள் குருசாமி, நிஷா கவுதம ராஜா, முத்து செல்வி சதீஷ், ஒன்றிய கவுன்சிலர் வசந்த கோகிலா சரவணன்,
முள்ளிபள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, ரிஷபம் ஊராட்சி மன்ற தலைவர் சிறுமணி, திருவாலவாய நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சகுபர் சாதிக் திருவேடகம் ஊராட்சி மன்ற தலைவர் பழனி யம்மாள், மாவட்ட பிரதி நிதிகள் பேட்டை பெரிய சாமி, சுரேஷ், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் அண்ணாத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் சோழ வந்தான் அருகே கண்ணு டையாள்பு ரத்தில் தியாகி இமானுவேல் சேகரின்
66-ம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவி யருக்கு நோட்டு புத்தகம் வழங்குவிழா நடந் தது. தொடர்ந்து அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்ட து. டாக்டர். பாலமுருகன், தமிழர் தேசிய கழக தலைவர் வழக்கறிஞர் வையவன் தலைமை தாங்கி னார். இதில் நிர்வாகிகள் குமார், முத்துப்பா ண்டி, சரவணன், மணிகண்டன், கார்த்திக், பாலமுருகன், அஜித் மற்றும் தமிழர் தேசிய கழக மதுரை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சோழவந்தான் தொகுதி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
- இமானுவேல் சேகரனார் குறித்து அவதூறு பேசிய பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- மாநகராட்சியில் போலீஸ் கமிஷனர் ஆகி–யோரை நேரில் சந்தித்து அந்தந்த மாவட்டங்களில் புகார் மனு கொடுத்து வரு–கின்றனர்.
கீழக்கரை
தேவேந்திரகுல இன மக்கள் தெய்வமாக வணங் கும் தியாகி இமானுவேல் சேகரனாரை தரக்குறைவாக இழிவுபடுத்தி பேசிய பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன்ஜி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேவேந் திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை சார்பில் தமிழகத் தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அமைப்பின் சார்பில் அந் தந்த மாவட்ட நிர்வாகி–கள் புகார் கொடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத் தில் தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை நிறு–வனர் மற்றும் தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன் தனது கட்சி ஆதரவாளர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு தங்க–துரையை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தார்.பின்னர் அவர் நிருபர்க–ளிடம் கூறியதாவது:-
கடந்த இரண்டு நாட்க–ளாக சமூக வலைத்தளங்க–ளில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த பாரதிய பார்வர்ட் பிளாக் தலைவர் முருகன்ஜி என்ப–வர் உசிலம்பட்டியில் நடை–பெற்ற ஒரு கூட்டத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகியும், தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் தெய்வமாக வணங்கி வரும் தியாகி இமானுவேல் சேகர–னாரை இழிவுபடுத்தும் விதமாக பேசியுள்ளார்.
இவர் பேசிய பேச்சால் தென் மாவட்டங்களில் இணக்கமாக இருந்து வரும் சமூகங்களுக்கு மத்தியில் கலவரங்கள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே முருகன்ஜி மீது வழக்குப்பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மக்கள் மத்தி–யில் அமைதி சூழ்நிலை ஏற்படுத்த காவல்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாத–புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளேன்.
இங்கு மட்டுமின்றி எங் கள் அமைப்பைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண் டர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களி–லும் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாநகராட்சியில் போலீஸ் கமிஷனர் ஆகி–யோரை நேரில் சந்தித்து அந்தந்த மாவட்டங்களில் புகார் மனு கொடுத்து வரு–கின்றனர்.
இவ்வாறு அவர் கூறி–னார்.
ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மருதகுமார், மேற்கு மாவட்டத் தலைவர் செல்லத்துரை, கிழக்கு மாவட்ட தலைவர் சபா, மாவட்ட இளைஞரணி தலைவர் சுதாகரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
- பரமக்குடி ஓட்டப்பாலம் ரவுண்டாணாவில் இமானுவேல் சேகரனுக்கு முழு உருவ சிலை அமைக்க வேண்டும்.
- தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
கீழக்கரை
தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் பரம்பை பாலா ராமநாதபுரத்தில் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
ஏழை, எளிய மக்களின் மீதான தீய ஆதிக்க சக்திகளின் நீதிக்கு புறம்பான வன்முறைகளையும் தீமைகளையும் எதிர்த்து தடுத்து நிறுத்தி அனைத்து தரப்பு மக்களின் நல்லிணக்கத்திற்காகவும் நல் வாழ்விற்காகவும் போராடிய இமானுவேல் சேகரனுக்கு வெண்கல முழு உருவ சிலையை பரமக்குடி ஓட்ட பாலம் புதிய ரவுண்டானா பகுதியில் நிறுவ வேண்டும். இமானுவேல் சேகரன் சிலையை அங்கு அமையச் செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
மேலும் இமானுவேல் சேகரன் குருபூஜையை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும். தேவேந்திர குல வேளாளர்களை எஸ.சி.பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் சேகரன் பெயர் வைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவாக ராமநாதபுரம் கலெக்டரிடம் கொடுத்துள்ளோம்.
அவர் எங்கள் மனுவை ஆய்வு செய்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதிய ளித்துள்ளார். மாநில, மத்திய அரசு அலுவல கங்களில் இமானுவேல் சேகரன் படம் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். எங்கள் கோரிக்கையை மாநில, மத்திய அரசுகள் கவனத்தில் எடுத்துக் கொண்டு நிறைவேற்றித் தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தப் பேட்டியின் போது தேவேந்திரர் பண்பாட்டுக் கழக செயலாளர் வழக்கறிஞர் புண்ணியமூர்த்தி, நடுவர் மன்ற அமைப்பாளர் தங்கராஜ் பாண்டியன் உள்பட பலர் உடன் இருந்தனர். முன்னதாக 35 வாகனங்களில் பரமக்குடியில் இருந்து ராமநாதபுரத்திற்கு ஊர்வலமாக வந்து தலைவர் பரம்பை பாலா தலைமையில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை சந்தித்து நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
- தென்காசி நகர பாரதீய ஜனதா கட்சி சார்பாக தியாகி இம்மானுவேல் சேகரன் 65- வது குருபூஜை விழா கொண்டாடப்பட்டது.
- விழாவையொட்டி அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
தென்காசி:
தென்காசி நகர பாரதீய ஜனதா கட்சி சார்பாக மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் நகர தலைவர் மந்திரமூர்த்தி முன்னிலையில் தியாகி இம்மானுவேல் சேகரன் 65- வது குருபூஜை விழாவையொட்டி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் ராமநாதன், மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், நகர பொதுச்செயலாளர்கள் ராஜ்குமார்,சேகர் நகர துணைத் தலைவர்கள் கருப்பசாமி,சந்திரன் நாகராஜ், நகர செயலாளர் சுடலைராஜ் ராமானுஜம் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் கருப்பசாமி, அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் குத்தாலிங்கம், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் சங்கரசுப்பிரமணியன், ஆன்மீக மேம்பாட்டு பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், விவசாய அணி நகர தலைவர் திருநாமம், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு நகர தலைவர் ஜெய் கணேஷ், ஆன்மிக மேம்பாட்டு பிரிவு நகர தலைவர் முத்துராஜ், முன்னாள் நகரச் செயலாளர் செல்வி, கிளை தலைவர்கள் முப்புடாதி, கார்த்திக், முத்து நாராயணன், பாலசுப்பிரமணியன், பாபு இசக்கிராஜ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- இமானுவேல் சேகரன் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
சிவகாசி
இமானுவேல் சேகரனின் 65-வது குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகாசி அருகே உள்ள பெரியபொட்டல்பட்டியில் அவரது சிலைக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார்.
முன்னதாக சிவகாமிபுரம், மாரனேரியில் வைக்கப்ப ட்டிருந்த இமானுவேல் சேகரனின் படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். பெரியபொட்டல்பட்டியை சேர்ந்த கிருஷ்ணகுமார்- ரோஷினி தம்பதியினரின் பெண்குழந்தைக்கு ஜெயலட்சுமி என பெயர் சூட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன், முன்னாள் அமைச்சர் இன்பதமிழன், எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளராக வேண்டுராயபுரம் சுப்பிரமணி, சிவகாசி மண்டல செயலாளர்கள் சரவணகுமார், கருப்ப சாமிபாண்டியன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ், கருப்பசாமி, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜயஆனந்த், மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம், சிவகாசி கிழக்கு ஒன்றிய பொருளாளர் கருப்பசாமிபாண்டியன், பள்ளபட்டி ரமேஷ், பிரியா, சசி மலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகாமிபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகாசி கிழக்கு ஒன்றிய பொருளாளர் கருப்பசாமிபாண்டியன் செய்திருந்தார். பெரியபொட்டல்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் கவிதாசுந்தரராஜமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் சசிமலர், பள்ளபட்டி ரமேஷ். ஊர் நாட்டாமை ராஜீவ்காந்தி, உதவி நாட்டாமை மான்ராஜ் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் மம்சாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் தங்கமுனியான்டி, கிளை செயலாளர் சிவக்குமார், சுந்தரராஜமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாரனேரியில் வீரன் சுந்தரலிங்கம் ஆட்டோ சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் துலுக்கப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி, அம்மாபட்டி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைசெயலாளர் சுப்புகாளை, பொன்னுசாமி, மூவேந்தர், முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம்-மதுரை வழித்தடத்தில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- 41 இடங்களில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பரமக்குடியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அரசு மற்றும் தனியாா் பஸ்கள் பரமக்குடி நகருக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பஸ்கள் அனைத்தும் ராமநாதபுரம், தேவிபட்டினம், ஆா்.எஸ்.மங்கலம், திருவாடானை, சருகனி, காளையாா்கோவில், சிவகங்கை, பூவந்தி வழியாக மதுரைக்கு செல்ல வேண்டும்.
மதுரையில் இருந்து வரும் பஸ்கள் பூவந்தி, சிவகங்கை, காளையாா்கோவில், சருகனி என அதே பாதையில் ராமநாதபுரம் வந்து ராமேசுவரம் செல்ல வேண்டும்.
பரமக்குடி வருவோா் சொந்த வாகனங்களில் வரவேண்டும் உள்ளிட்ட 11 நிபந்தனைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். ஐகோர்ட்டு உத்தரவின்படி பதாகைகள் அமைப்பதை தவிா்க்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் 160 வழித்தடங்கள் தடை செய்யப்பட்டவை ஆகும்.
அனுதியின்றி பரமக்குடிக்கு 4 மற்றும் 2 சக்கர வாகனங்களில் வருபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மாவட்டத்தில் 131 பகுதிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்ப ட்டுள்ளன. மாவட்ட எல்லையில் 41 இடங்களில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- அரசு போக்குவரத்து கழகம் மூலம் பரமக்குடிக்கு கூடுதல் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
பரமக்குடியில் நாளை இமானுவேல் சேகரன் நினைவு அஞ்சலி செலுத்த வருபவர்கள் போலீசாரின் அறிவுரைப்படி அனுமதி பெற்ற சாலை வழியாக வந்து செல்ல வேண்டும். மாவட்டம் முழுவதும் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எந்த பகுதியிலும் சிறிய பிரச்சினை வராமல் தடுக்கும் வகையில் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசு போக்குவரத்து கழகம் மூலம் பரமக்குடிக்கு கூடுதல் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1500 போலீசாருடன் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 3500 போலீசார் வரவழைக்கப்பட்டு 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
நினைவு தின நிகழ்ச்சி அனைவரின் ஒத்துழைப்புடன் எந்த வித இடையூறும் இன்றி அமைதியாக நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்