search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "employee arrested"

    • நிறுவனத்தில் வேலை செய்து வந்த பிரபு உட்பட சிலர் சேர்ந்து சுமார் ரூ.1 கோடி கையாடல் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
    • குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை செய்தனர்.

    சென்னை:

    குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகை குமார் (வயது 42) என்பவர் தி.நகர், கிரியப்பா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிறுவனம் தனது ஊழியர்கள் மூலம் சென்னையில் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியை செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறுவனத்தின் கணக்குகளை சரிபார்த்தபோது, மேற்கண்ட நிறுவனத்தில் வேலை செய்து வந்த பிரபு உட்பட சிலர் சேர்ந்து சுமார் ரூ.1 கோடி கையாடல் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

    இது குறித்து மேற்படி தனியார் நிறுவனத்தின் மேலாளர் கார்த்திகை குமார் சவுந்திரபாண்டியனார் அங்காடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

    குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை செய்தனர். இது தொடர்பாக ஆர்.ஏ. புரத்தைசேர்ந்த பிரபு என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.63 லட்சத்து 69 ஆயிரம் மீட்கப்பட்டது.

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    • பிஜுகுமார் காரைக்கால் என்.ஐ.டியில் உதவி பேராசிரியாராக பணிபுரிந்து வருகிறார்.
    • மகேஷ்குமார் இரவு 12 மணிக்கு மேல்தான் பஸ் வரும் என கூறினார்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் பஸ் ஏன் தாமதம் என கேட்ட உதவி பேராசிரியரை அடித்து, உதைத்த தனியார் பஸ் புக்கிங் அலுவல ஊழியர். காரைக்கால் நகர போலீசார் கைது செய்தனர். கேரளா மாநிலம், மண்விலா பகுதியைச்சே ர்ந்த பிஜுகுமார் (வயது38). காரைக்கால் என்.ஐ.டியில் உதவி பேராசிரியாராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று கேரளா செல்லவேண்டி, காரைக்கால் திருநள்ளாறு வீதியில் உள்ள தனியார் பஸ் நிறுவனத்தில், ஆன்லைன் மூலம் டிக்கெட் புக்கிங் செய்துள்ளார். இதனையடுத்து இரவு பஸ், 1 மணி நேரம் தாமதமாகும் என அவருடைய மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.

    இதுகுறித்து பிஜுகுமார் தனியார் பஸ் நிறுவன புக்கிங் அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது அங்கு பணியிலி ருந்த ஊழியர் மகேஷ்குமார் இரவு 12 மணிக்கு மேல்தான் பஸ் வரும் என கூறினார். இந்த குறுஞ்செய்திக்கு பிஜுகுமார் விளக்கம் கேட்டார்.இதனால் ஆத்திர மடைந்த மகேஷ்குமார் பிஜுகுமாரை ஆபசமாக திட்டி, அருகில் கிடந்த இரும்பு பைப்பால் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த பிஜுகுமார், காரைக்கால் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் . மேலும் பிஜுகுமார் கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஷ்குமாரை கைது செய்தனர்.

    • கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • மனைவியை தாக்கிய ஜெய பிரகாசை போலீசார் கைது செய்தனர்

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் டி.கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 42). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயபிரகாசுக்கு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. ஜெயபிரகாஷ் அடிக்கடி இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளகாதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக ஜெயபிரகாசின் மனைவிக்கு தெரிய வந்தது.

    இது குறித்து அவர் தனது கணவரிடம் கேட்டார். அப்போது கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயபிரகாஷ் தனது மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ள க்காதலை தட்டிக் கேட்ட மனைவியை தாக்கிய ஜெய பிரகாசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தினேஷ் வீட்டை பூட்டி விட்டு சாவியை ஜன்னல் ஓரமாக வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
    • கர்ணனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து நகை-பணத்தை பறிமுதல் செய்தனர்.

    போரூர்:

    சென்னை சாலிகிராமம், செங்கராஜுலு தெருவை சேர்ந்தவர் தினேஷ். இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது கடையில் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த கர்ணன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். தினேஷ் நேற்று காலை மனைவி இந்திராகாந்தியுடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சாவியை ஜன்னல் ஓரமாக வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

    பின்னர் மாலையில் வீடு திரும்பிய தினேஷ் வீட்டை திறந்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 10 பவுன் நகை, வைர நெக்லஸ் மற்றும் ரூ.28ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போயிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக அவர் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

    உதவி கமிஷனர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது தினேஷ் வெளியே சென்றதை நோட்டமிட்ட அவரது பேக்கரி கடை ஊழியர் கர்ணன் பூட்டை திறந்து நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து கர்ணனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து நகை-பணத்தை பறிமுதல் செய்தனர்.

    பனியன் கம்பெனியில் ஸ்டோர் பொறுப்பாளராக பணியாற்றிய திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்குமார் (வயது 41) என்பவரிடம் விசாரித்தபோது அவர் திருடியதை ஒப்புக்கொண்டார்.

    மங்கலம்:

    மங்கலத்தை அடுத்த வேட்டுவபாளையம் பகுதியில் தனியார் பனியன் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த பனியன்கம்பெனியில் இருந்து சமீபத்தில் 6 நூல் பைகள் திருடு போனது. இது தொடர்பாக பனியன் கம்பெனி நிர்வாகிகத்தினர் மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    பின்னர் மங்கலம் போலீசார் இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பனியன் கம்பெனியில் ஸ்டோர் பொறுப்பாளராக பணியாற்றிய திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்குமார் (வயது 41) என்பவரிடம் விசாரித்தபோது அவர் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த மங்கலம் போலீசார் ராஜேஸ்குமாரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    • கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • சிவசங்கர் அங்குள்ள மருந்து கடையில் ஊழியராகவும், கார்த்திக் காய்கறி கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    கோவை:

    கோவை ரத்தினபுரி பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக ரத்தினபுரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் ரத்தினபுரி சம்பத் வீதியில் உள்ள மயானம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, அங்கு 6 பேர் கும்பலாக நின்றிருந்தனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அருகே சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் வாலிபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    போலீசார் விடாமல் அவர்களை துரத்தி சென்று அந்த கும்பலில் 2 பேரை மடக்கி பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது, அதில் 4 விதமான 500 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், அவர்கள் வேலாண்டிபாளையம் மருதகோனார் வீதியை சேர்ந்த சிவசங்கர்(39), ரத்னபுரி சம்பத் வீதியை சேர்ந்த கார்த்திக் என்பதும் தெரியவந்தது. சிவசங்கர் அங்குள்ள மருந்து கடையில் ஊழியராகவும், கார்த்திக் காய்கறி கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    மேலும் அவர்களுடன் இருந்தது ஆகாஷ், சிரஞ்சிவி, விவேக், சீனு கார்த்திக் என்பதும் தெரியவந்தது. இவர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் சிவசங்கர், கார்த்திக் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இதுபோன்று வேறு எங்காவது போதை மாத்திரைகளை விற்பனை செய்துள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாராபுரம் வணிக வளாகத்தில் திருடிய ஊழியர் மதுரையில் பதுங்கி இருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    தாராபுரம்:

    தாராபுரம்- பொள்ளாச்சி ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் மதுரை பங்கஜம் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 25) என்பவர் ஊழியராக வலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு வணிக வளாக காவலாளியை அழைத்து தனக்கு இன்று பிறந்த நாள். நண்பர்களுக்கு மது விருந்து அளிக்க வேண்டும். மதுவாங்கி வாருங்கள் என்று பணம் கொடுத்து அனுப்பினார்.

    காவலாளி மதுவாங்க சென்றிருந்தபோது சதீஷ்குமார் கடையில் இருந்து விலை உயர்ந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தப்பினார். திரும்பி வந்து பார்த்த காவலாளி கடையில் சதீஷ்குமார் மாயமானது குறித்தும், பொருட்கள் சிதறி கிடப்பதை அறிந்தும் அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் இது குறித்து பொது மேலாளர் கண்ணன் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது ஊழியர் சதீஷ்குமார் பொருட்களை திருடிச் சென்றது பதிவாகி இருந்தது.

    இது குறித்து அவர் தாராபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரையில் தலைமறைவாக இருந்த சரவணனை நேற்று கைது செய்தனர்.

    களக்காடு அருகே விவசாயியை வெட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள பொத்தைசுத்தியை சேர்ந்தவர் பழனி (வயது 45). விவசாயி. அதே ஊரைச் சேர்ந்த துரைகுட்டி (30), செல்வம் (21), கார்த்திக் (23), சுடலைமுத்து (24). இவர்கள் 4 பேரும்  இரவில் தெருவில் நின்று கொண்டு பெண்கள், குழந்தைகள் மீது கற்களை வீசினார்களாம். இதனை பழனி தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் பழனியை அரிவாளால் வெட்டினர். இதில் அவரது இடது கை நடுவிரல் துண்டானது. 

    மேலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் கொலை முயற்சி வழக்குபதிந்து விசாரணை நடத்தி துரைகுட்டியை கைது செய்தனர். செல்வம், கார்த்திக், சுடலைமுத்து ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.
    கோவையில் வேலை பார்த்த கடையில் கட்டுமான பொருட்கள் திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை:

    கோவை சிட்கோ பகுதியை சேர்ந்தவர் சுதாகரன். இவர் மதுக்கரை மார்கெட்டில் கட்டுமான பொருட்கள் வாடகைக்கு விடும் கடை நடத்தி வருகிறார்.

    இவரது கடையில் வெள்ளலூரை சேர்ந்த சுதிர் (50) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று ரூ. இரண்டரை லட்சம் மதிப்புள்ள கட்டுமான பொருட்களை சுதிர் வாடகைக்கு எடுத்து சென்றார். பல நாட்கள் ஆகியும் அதனை திருப்பி ஒப்படைக்கவில்லை.

    அவரது செல்போனுக்கு கடை உரிமையாளர் தொடர்பு கொண்ட போது சுவிட் ஆப் என வந்தது. இது குறித்து சுதாகரன் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சுதிரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 1 லட்சம் மதிப்புள்ள கட்டுமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர் பணிச்சுமையால் அதிகாரிகளை பழிவாங்க ரெயிலை கவிழ்க்க முயன்ற 3 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

    சேலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து கடந்த 19-ந் தேதி மதியம் 2 மணி அளவில் பயணிகள் ரெயில் சேலத்துக்கு புறப்பட்டு வந்தது. அந்த ரெயில் மதியம் 2.20 மணியளவில் கூத்தக்குடி ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டு இருந்தது.

    அப்போது தண்டவாளத்தில் நீண்ட வரிசையில் இரும்பு கம்பிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தினார். தண்டவாளத்தில் நாசவேலை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தண்டவாளத்தின் அடியில் உள்ள சிமெண்டு கட்டையுடன் இணைக்கும் 15-க்கும் மேற்பட்ட இரும்பு ‘கிளிப்’புகளை யாரோ ? உடைத்து தண்டவாளத்தின் மீது வைத்திருந்தனர்.

    இது குறித்து அவர் கூத்தக்குடி ரெயில் நிலையத்துக்கும், ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைத்தனர். அதன்பிறகு மாலை 4.20 மணி அளவில் பயணிகள் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சேலத்தை நோக்கி வந்தது.

    இந்த சம்பவம் குறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகள் ரெயிலை கவிழ்ப்பதற்காக நாசவேலையில் ஈடுபட்டார்களா? அல்லது குடிபோதையில் இந்த செயலில் ஈடுபட்டார்களா? என விசாரணை நடத்தினர். அப்போது ரெயில் நிலைய ஊழியர்கள் 3 பேர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது.

    அதன் அடிப்படையில் கூத்தக்குடி ரெயில் நிலையத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மகேந்திரன் (வயது 36), மணிவேல் (32) ரகுராமன் (40) ஆகிய 3 பேரையும் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    அப்போது தொடர்ந்து பணி வழங்கியதால் பணி சுமையால் 3 பேரும் தவித்ததாகவும், அதற்காக ரெயில்வே அதிகாரிகளை பழி வாங்கும் நோக்கில் கிளிப்புகளை கழற்றியதாகவும் தெரிவித்தனர்.

    இதனால் அதிகாரிகளை பழிவாங்க ரெயிலை கவிழ்க்கும் செயலில் ஊழியர்கள் 3 பேரும் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதனால் 3 பேரும் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    தூத்துக்குடியில் மது குடிக்க பணம் தர மறுத்த மாமனாரை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    முள்ளக்காடு:

    தூத்துக்குடி முத்தையாபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் கட்டப்புளி(வயது 37). தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த அய்யாச்சாமி(54) என்பவரது மகளை திருமணம் செய்துள்ளார். கட்டப்புளிக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.   

    இந்நிலையில் மகளை பார்ப்பதற்காக அய்யாச்சாமி சென்றுள்ளார். அப்போது கட்டப்புளி மதுகுடிக்க பணம் தருமாறு  அய்யாச்சாமியிடம் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த கட்டப்புளி, அய்யாச்சாமியை அடித்து, உதைத்துள்ளார்.   

    இதில் காயமடைந்த அவர் இது குறித்து முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கட்டப்புளியை கைது செய்தார்.
    ×