என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "encouraging"
- பாராட்டு என்பது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் போன்றது.
- குழந்தையின் ஸ்பெஷல் திறனை வளர்க்க வழிகாட்டியாக இருந்து உதவுங்கள்.
உங்கள் குழந்தைக்கு, இயல்பிலே நல்ல குணங்கள் இருக்கலாம். அந்த குணத்தை தக்க வைக்க, அவை வெளிப்படும் போதெல்லாம் பாராட்டுங்கள். குழந்தைகளை பாராட்டும்போது, எந்த செயலுக்காக பாராட்டுகிறோம் என்பதை அவர்களுக்கு புரியும்படி எடுத்துச் சொல்லுவதுதான் சரி. அவர்களை தன் செயலில் தெளிவுடன் இறங்க வைக்க இதுதான் நல்ல வழியும் கூட.
பாராட்டுகளை பொறுத்தவரை, அவை வாய் வார்த்தைகளாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஒரு தட்டிக்கொடுத்தலோ, ஒரு முத்தமோ, அன்பான அழுத்தமான அணைப்போ, ஆச்சரியப் பார்வையோ, தலைகோதி விடுதலோ, பிடித்த இடத்துக்கு அழைத்துச்செல்வதோ, பிடித்த உணவை சமைத்து தருவதாகவோ கூட இருக்கலாம்.
உங்கள் குழந்தையின் ஏதேனும் ஒரு சிறப்பான செயல்பாட்டினை, அவர்களுக்குப் பிடித்தவர்களின் முன்னிலையில் பாராட்டுங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு, தொடர்ந்து இதுபோன்ற செயல்களை செய்யும் ஊக்கத்தையும் அளிக்கும்.
நம் பாராட்டுதல்கள் குழந்தையை ஊக்கப்படுத்துவதாக மட்டுமல்லாமல், பிறரைப் பாராட்டும் தன்மையை குழந்தைகளிடம் வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். மற்றவர்களிடம் உள்ள நல்ல குணங்களையும் ஏற்று அதையும் மனதார பாராட்டுவதை குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே பழக்குங்கள். இது அவர்களுக்கான தலைமைப் பண்பை வளர்க்கும்.
திறனை வெளிப்படுத்தும்போதும், போட்டிகளில் வெற்றி பெறும்போதும் மட்டும் பாராட்டாமல், தோல்வி அடையும் போதும், குழந்தையின் பங்களிப்பை முதன்மைப்படுத்தி பாராட்டுதல் வேண்டும். ஒருமுறை பாராட்டிவிட்டு அந்த திறமையை அப்படியே விட்டுவிடாமல், உங்கள் குழந்தையின் ஸ்பெஷல் திறனை வளர்த்தெடுக்க வழிகாட்டியாக இருந்து உதவுங்கள். அவர்களின் அடுத்தக்கட்ட நகர்வுக்கு அதுதான் உதவும்.
பாராட்டு என்பது நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் போன்றது. உணர்வுரீதியாகவும், சமூக ரீதியாகவும் தேவையானது. அதை தவறாமல் வழங்குங்கள்.
- வீட்டுப்பாடம் என்பது குழந்தைகளுக்கு புதியதொரு விசயத்தை கற்றுக்கொடுக்க உதவுகிறது.
- வீட்டுப்பாடம் செய்யும்போது குழந்தைகளுக்கு சிறிதுநேரம் இடைவெளி கொடுங்கள்.
பல வீடுகளில் குழந்தைகளின் வீட்டு பாடங்களை பெற்றோர்கள் தான் செய்து கொடுக்கின்றனர். கல்வி நிலையங்களில் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் செய்ய கொடுப்பது அவர்களை செம்மைப்படுத்தவும், ஒழக்கத்தை கற்பிக்கவும் தான். இது நம்முடைய கல்வி கட்டமைப்பில் உள்ள முக்கியமான அம்சமாகும். வீட்டுப்பாடங்களை பெற்றேனின் உதவியுடன் குழந்தை செய்யமே தவிர, பெற்றோரே அதை முழுமையாக செய்து கொடுக்கக்கூடாது.
ஒரு விளையாட்டு வீரனுக்கு, எவ்வாறு பயிற்சியாளர் எப்போதும் தேவைப்படுகிறாரோ, அதுபோலத்தான் பெற்றோரும் குழந்தையின் வாழ்க்கைக்கு தேவைப்படுவார்கள். விளையாட்டு வீரனுக்கு பதிலாக பயிற்சியாளர் ஓடவோ, உடற்பயிற்சி செய்யவோ மாட்டார். மாறாக, சிறந்த முறையில் வழிநடத்துவார். அதையே பெற்றோரும் பிள்ளைகளிடத்தில் பிள்பற்ற வேண்டும்.
தொழில்நுட்பத்தின் அதிதீவிர வளர்ச்சியால், இந்த தலைமுறையை சேர்ந்த பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளின் கற்பனைத்திறன் முடங்கிவிடுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் வீட்டுப்பாடம், செயல்முறை வகுப்புகள் போன்றவைதான் குழந்தைகளின் கற்பனைத்திறனை வார்க்கும். குழந்தைகளின் வீட்டுப்பாடங்களை அவர்களே செய்வதற்கு உற்சாகப்படுத்தும் சில விஷயங்கள் இங்கே..
* குழந்தைகளை அவர்கள் விரும்பும் இடத்தில் இருந்தபடி வீட்டுப்பாடம் செய்ய அனுமதியுங்கள். அந்த இடத்தில் டி.வி, மொபைல் போன்ற கவனத்தை திசைத்திருப்பும் பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் வீட்டுப் பாடம், அவர்களின் வயதிற்கு மிக அதிக என்று நினைத்தால், அதை ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள், மாறாக, வீட்டுப்பாடத்தை, நீங்களே செய்யாதிர்கள். இது குழந்தைக்கு வீட்டுப் பாடங்கள் மீது அலட்சியத்தை ஏற்படுத்தும்.
* வீட்டுப்பாடம் என்பது குழந்தைகளுக்கு புதியதொரு விசயத்தை கற்றுக்கொடுக்க உதவுகிறது. அதை உரையாடலின் வழியாகவும், வழிநடத்தலின் மூலமாகவும் நீங்களே அவர்களுக்கு சுற்றுக்கொடுக்கள், வீட்டுப்பாடம் செய்யும்போது குழந்தையோடு பாடம் தொடர்பாக அவர்களிடம் உரையாடிக் கொண்டே இருங்கள்.
* வீட்டுப்பாடத்தை குழந்தைகள் சரியாக செய்ய வில்லை என்பதற்காக அவர்களை தண்டிக்காதீர்கள். 'உன்னால் இதை செய்ய முடியும்' என்று கூறி ஊக்கப்படுத்தி அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள்.
* வீட்டுப்பாடத்தை குழந்தைகள் நல்லமுறையில் செய்தால், அவர்களை பாராட்டி பரிசளியுங்கள். காபி மக், ஸ்டடி டேபிள், பழக்கூடைகள், புத்தகப்பை என அவர்களுக்கு உதவும் விஷயங்களை மட்டும் கொடுக்கலாம்.
• வீட்டுப்பாடம் செய்யும்போது குழந்தைகளுக்கு சிறிதுநேரம் இடைவெளி கொடுங்கள். நண்பர்களோடு இணைந்து வீட்டுப்பாடம் செய்ய வேண்டுமென குழந்தை விரும்பினால், அதற்கேற்ற சூழலையும் உங்கள் மேற்பார்வையில் ஏற்படுத்திக் கொடுங்கள். குழு உணர்வு மேலோங்க, இது சிறந்த பயிற்சியாகும்.
அத்தகைய சமயங்களில், உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்திறன் இருக்கும். அதில் அவர்களை மேம்படுத்துங்கள். எப்போதும் குழந்தைகளை கட்டாயப்படுத்தாதீர்கள். அடிக்கடி ஆசிரியரை சத்தித்து, பள்ளியில் உங்கள் குழந்தைகள் எவ்வாறு படிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்