search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ENDvIND"

    வலது கை சுண்டு விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்றைய போட்டியில் ஜேசன் ராய் களம் இறங்குவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது.

    இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று 5 மணிக்கு தொடங்குகிறது. 2-வது போட்டியில் இங்கிலாந்து பீல்டிங் செய்யும்போது தொடக்க வீரர் ஜேசன் ராயின் வலது கை சுண்டு விரலில் காயம் ஏற்பட்டது.



    இதனால் இன்றைய போட்டியில் அவர் களம் இறங்குவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்புதான் இதுகுறித்து முடிவு செய்ய முடியும் என இங்கிலாந்து அணி தெரிவித்துள்ளது.

    ஒருவேளை உடற்தகுதி பெறாவிடில் மாற்று வீரரை களமிறக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் சாம் பில்லிங்ஸை அவசரமாக அழைத்துள்ளது. ஜேசன் ராய் இந்தியாவிற்கு எதிரான முதல் ஆட்டத்தில் 35 பந்தில் 38 ரன்களும், 2-வது ஆட்டத்தில் 42 பந்தில் 40 ரன்களும் சேர்த்தார்.
    விராட் கோலி இன்றைய போட்டியிலாவது இரண்டாயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை உறுதி செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. #ViratKohli
    இந்திய அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்று உள்ளது. இதற்கு முன் அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டியில் விளையாடியது. இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

    அயர்லாந்து தொடருக்கு முன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டி20 போட்டியில் 1983 ரன்கள் எடுத்திருந்தார். 17 ரன்கள் எடுத்தால் 2000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற பெருமையை பெறுவார் என்ற நிலை இருந்தது.

    ஆனால், முதல் போட்டியில் டக்அவுட் ஆன கோலி, 2-வது ஆட்டத்தில் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 2000 ஆயிரம் ரன்களை எட்ட முடியவில்லை. இதற்கிடையில் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 2000 ரன்களை கடந்து 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.



    விராட் கோலி 2000 ஆயிரம் ரன்களை எட்ட இன்னும் 8 ரன்கள் தேவையுள்ளது. இதனால் இங்கிலாந்திற்கு எதிரான இன்றைய ஆட்டத்திலாவது 2000 ரன்னை எட்டுவாரா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அயர்லாந்துக்கு எதிராக இரண்டு போட்டியில் 0, 9 அடித்ததன் மூலம் விராட் கோலியின் சராசரி 50-ற்கு கீழ் குறைந்துள்ளது.
    ×