search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Engineering College students"

    • பல்நோக்கு திறன்களை வளர்க்கும் விதமாக மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் வாரந்தோறும் 2 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • சதுர துளையிடும் எந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

    புதுச்சேரி:

    மயிலம் என்ஜினீயரி ங்கல்லூரியில் என்ஜினீயரிங் பாடத்திட்டத்துடன் பல்நோக்கு திறன்களை வளர்க்கும் விதமாக மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் வாரந்தோறும் 2 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் எந்திரவியல் துறையை சேர்ந்த இறுதி யாண்டு மாணவ ர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையின் கீழ் புதிய கண்டுபிடிப்பாக சதுர துளையிடும் எந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

    இந்த புதிய கண்டுபிடிப்பை பற்றிய செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மயிலம் கல்வி குழுமத்தின் இயக்குனர் செந்தில், கல்லூரியின் முதல்வர் ராஜப்பன், எந்திரவியல் துறை தலைவி வண்டார்குழலி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி ஆகியோர் கலந்துக்கொண்டு மாணவ ர்களை வாழ்த்தினார்.

    இக்கண்டுபிடிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன், துணை த்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தினர்.

    இந்த புதிய கண்டுபிடி ப்பினை எந்திரவியல் துறையின் இறுதியாண்டு மாணவர்கள் மகாதேவன், ரகுராம், புகழேந்தி மற்றும் ஜெயகணேஷ் ஆகியோர் இணைந்து உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

    இந்த எந்திரமானது மரம் சார்ந்த கட்டுமான மற்றும் எந்திர பணிகளுக்கு சதுர வடிவில் துளையிடும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    ×