என் மலர்
நீங்கள் தேடியது "Engineering counselling"
- முதல் கட்ட கலந்தாய்வு கடந்த செப்டம்பர் மாதம் 10-ந்தேதி தொடங்கியது.
- 4 சுற்றுகளாக இந்த கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
சென்னை :
என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த செப்டம்பர் மாதம் 10-ந்தேதி தொடங்கியது. 4 சுற்றுகளாக இந்த கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நடந்து முடிந்தது. அதனைத்தொடர்ந்து பொது பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மாணவர்களுக்கு நடந்தது. 3-வது சுற்று கலந்தாய்வு நிறைவில், பொதுப்பிரிவில் 53 ஆயிரத்து 874 இடங்களும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 5 ஆயிரத்து 99 இடங்களும் நிரம்பி இருந்தன.
இந்தநிலையில் 4-வது சுற்று கலந்தாய்வும் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் பொதுப்பிரிவில் 30 ஆயிரத்து 938 இடங்களும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 3 ஆயிரத்து 660 இடங்களும் நிரம்பின. இதன்படி முதற்கட்ட கலந்தாய்வு முடிந்து இருக்கிறது.
மொத்தம் உள்ள 1 லட்சத்து 54 ஆயிரத்து 278 இடங்களில், 93 ஆயிரத்து 571 இடங்களில் மாணவ-மாணவிகள் சேர்ந்து இருக்கின்றனர். இதன்மூலம் 60 ஆயிரத்து 707 இடங்கள் தற்போது காலியாக உள்ளன.
கடந்த ஆண்டில் முதல் கட்ட கலந்தாய்வு நிறைவின்போது, 88 ஆயிரத்து 596 இடங்கள் நிரம்பி இருந்தன. அந்த வகையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 4 ஆயிரத்து 975 இடங்கள் அதிகமாக நிரம்பி இருப்பது புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.
- 2 மாத கால பொறியியல் கலந்தாய்வு காலக்கெடுவை சந்திக்க ஜூலை மாதத்தில் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
- கலந்தாய்வு தொடக்கத்தில் இந்த ஆண்டு சிறந்த கல்லூரிகளில் அதிக இடங்கள் காலி ஏற்பட கூடம் என்று நிபுணர்கள் கூறுகின்றார்கள்.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் இடங்கள் காலியாக கிடக்கின்றன.
கொரோனா தொற்று பரவலால் கடந்த 2 வருடமாக நீட் தேர்வு முடிவு, பிளஸ் -2 தேர்வு முடிவுகள் தாமதத்தால் உயர் கல்விக்கான பொறியியல், மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை தள்ளிப் போனது.
கடந்த ஆண்டு நவம்பர் 13-ந்தேதி வரை பொறியியல் கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டதால் சேர்க்கை தாமதமானது. காலி இடங்களை தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை கமிட்டி புதிய விதியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதில் பொறியியல் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் கல்வி கட்டணத்தை ஒதுக்கீடு செய்யப்பட்ட 7 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். மாணவர்கள் கட்டணம் செலுத்தாத இடங்களை காலியாக கருதி அவற்றை ஒரே சுற்றில் ஒதுக்கி நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில் தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு செப்டம்பர் 15-ந்தேதி என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) நிர்ணயித்து உள்ளதால் வருகிற கல்வி ஆண்டுக்கான பொறியியல் கவுன்சிலிங் முன்கூட்டியே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2 மாத கால பொறியியல் கலந்தாய்வு காலக்கெடுவை சந்திக்க ஜூலை மாதத்தில் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. கலந்தாய்வு தொடக்கத்தில் இந்த ஆண்டு சிறந்த கல்லூரிகளில் அதிக இடங்கள் காலி ஏற்பட கூடம் என்று நிபுணர்கள் கூறுகின்றார்கள். மேலும் காலி இடங்களை தவிர்க்க 10 சதவீதம் கூடுதலான இடங்களை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடம் கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
வருகிற கல்வி ஆண்டில் பொறியியல் கல்லூரிகளில் இணைப்பு வழங்குவதற்கான கடைசி தேதி ஜூலை 31, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15, இது 2-ம் ஆண்டிற்கான 'லேட்டரல்' நுழைவு சேர்க்கைக்கான கடைசி தேதியாகும் என்று ஏ.ஐ.சி.டி.இ. கல்வி காலண்டரை வெளியிட்டு உள்ளது.
இது குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது:-
பொறியியல் கவுன்சிலிங் தொடங்கும் முன் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடத்துவது கடினம். தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்கள் இருந்த போதிலும் எம்.பி.பி.எஸ். இடங்களை பெற்ற மாணவர்கள் இங்கிருந்து வெளியேறுவார்கள்.
இதனால் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு அதிக காலி இடங்கள் உருவாகும் என எதிர்பார்க்கிறோம்.
ஜூலைக்கு முன்னதாக எம்.பி.பி.எஸ். நீட் முடிவு வராது. அதற்கு முன்னதாக பொறியியல் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பித்து இருப்பார்கள். பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்து விடுவார்கள். மருத்துவ கவுன்சிலிங் தொடங்கும் போது அதில் கலந்து கொண்டு எம்.பி.பி.எஸ். இடங்களை தேர்வு செய்து விடுவதால் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் காலியாக கிடக்கின்றன. இந்த இடங்களில் நன்கு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு சேர வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. இதனால் 10 சதவீதம் இடங்களை கூடுதலாக அண்ணா பல்கலைக்கழகம் ஏ.ஐ.சி.டி.இ.யிடம் கேட்க வேண்டும். கூடுதல் இடங்கள் பெற்றால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதற்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் வருகிற 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடைபெறும்.
- இ.சி.இ. அட்வான்ஸ் டெக்னாலஜி, இ.சி.இ. அட்வான்ஸ் டிசைன் டெக்னாலஜி ஆகிய 2 பாடப்பிரிவுகள் தொடங்கப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் பட்டியலை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 430 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்காக 1 லட்சத்து 78 ஆயிரத்து 959 பேர் விண்ணப்பித்துள்ளார்கள்.
மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. முதற்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் வருகிற 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடைபெறும்.
பொது பிரிவினருக்கான முதற்கட்ட கவுன்சிலிங் இந்த மாதம் 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி வரை நடைபெறும்.
2-ம் கட்ட கவுன்சிலிங் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறும்.
3-ம் கட்ட கவுன்சிலிங் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 22-ந் தேதி முதல் செப்டம்பர் 3-ந் தேதி வரை நடைபெறும்.
இந்த ஆண்டு கூடுதலாக 3 ஆயிரத்து 100 இடங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. புதிதாக 2 பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது.
அதாவது இ.சி.இ. அட்வான்ஸ் டெக்னாலஜி, இ.சி.இ. அட்வான்ஸ் டிசைன் டெக்னாலஜி ஆகிய 2 பாடப்பிரிவுகள் தொடங்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 11 ஆயிரத்து 804 இடங்கள் உள்ளன.
3 கட்ட கவுன்சிலிங் முடிந்த பிறகும் காலி யிடங்கள் இருந்தால் மேலும் ஒரு கவுன்சிலிங் நடத்தப்படும். கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் இந்த ஆண்டு காலி இடங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து இடங்களையும் நிரப்புவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறது.
செப்டம்பர் 15-ந் தேதிக்குள் கவுன்சிலிங்கை முடிக்கும்படி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் அறிவுறுத்தி இருக்கிறது. அதற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்த பிறகு வேறு கல்லூரிக்கு செல்ல விரும்பினால் அவர்கள் கட்டிய முழு கட்டணத்தையும் திருப்பி வழங்க வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டம் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொதுப்பிரிவு கலந்தாய்வு 29-ந்தேதி தொடங்குகிறது.
- முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேர்ந்து வருகிறார்கள்.
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. 2 லட்சம் மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேருவதற்கு தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப இயக்ககத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்தாய்வை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு இன்று தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து சிறப்பு இடஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு கவுன்சிலிங் நடைபெறும்.
பொதுப்பிரிவு கலந்தாய்வு 29-ந்தேதி தொடங்குகிறது. பல்வேறு கட்டங்களாக நடைபெறும் கலந்தாய்வு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி வரை நடக்கிறது.
தமிழகத்தில் தற்போது 433 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள 2.41 லட்சம் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். எல்லோருக்கும் இடங்கள் கிடைக்கும். ஆனால் விரும்பிய கல்லூரிகளில் பாடப்பிரிவுகள் கிடைப்பதுதான் கடினம்.
பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேர்ந்து வருகிறார்கள். படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பாடங்கள் உள்ளன. 3 சுற்றுகளாக ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடைபெறுகிறது.
கலந்தாய்வு முடிந்த பிறகும் மாணவர்கள் விரும்பினால் கல்லூரிகளில் சேருவதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த ஆண்டு 8 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. போதிய கட்டமைப்பு வசதி இல்லாத காரணத்தால் மூடப்பட்டுள்ளது. புதிதாக 3 கல்லூரிகள் உருவாகி உள்ளன. அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 36 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
- 3-வது சுற்று கலந்தாய்வு தொடங்கியிருக்கிறது.
- மொத்தம் 49 ஆயிரத்து 42 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு இருக்கின்றனர்.
சென்னை :
தமிழகம் முழுவதும் உள்ள 446 என்ஜினீயரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கும்1 லட்சத்து 57 ஆயிரம் இடங்களில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கு ஆன்லைன் கலந்தாய்வை, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. மொத்தம் 4 சுற்றுகளாக இந்த கலந்தாய்வு நடக்கிறது.
இதில் முதல் சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் (செப்டம்பர்) 10-ந்தேதி தொடங்கியது. ஒவ்வொரு சுற்று கலந்தாய்விலும் விருப்ப இடங்களை தேர்வு செய்தல், ஒதுக்கீடு செய்தல், அதை உறுதி செய்து இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுதல், கல்லூரிகளில் சேருதல், காத்திருத்தல் என்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
அதன்படி, ஒரு சுற்று கலந்தாய்வு நிறைவு பெறுவதற்கு, 2 வாரங்கள் வரை ஆகிறது. முதல் சுற்று கலந்தாய்வை பொறுத்தவரையில் கடந்த மாதம் 25-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த கலந்தாய்வு மூலம் 10 ஆயிரத்து 340 மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் தங்கள் விருப்ப இடங்களில் சேர்ந்தனர்.
அதன் தொடர்ச்சியாக 2-ம் சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. இந்த கலந்தாய்வு நேற்று காலையுடன் நிறைவு பெற்றது. இதில் 31 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு, இதில் 18 ஆயிரத்து 521 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர்.
அவர்களில் 13 ஆயிரத்து 197 மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்து இருக்கின்றனர். இதேபோல், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு அடிப்படையிலான 2-வது சுற்று கலந்தாய்வில், 1,426 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்த நிலையில், 1,207 பேர் உறுதி செய்து கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
ஆக மொத்தம் 2-வது சுற்று கலந்தாய்வில், 14 ஆயிரத்து 404 மாணவ-மாணவிகள் கல்லூரிகள் சேர்ந்து இருப்பதாகவும், 5 ஆயிரத்து 543 பேர் இடங்களை உறுதி செய்து, முதன்மை விருப்ப இடங்களுக்காக காத்திருப்பதாகவும் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை நடந்து முடிந்த 2 சுற்றுகள் கலந்தாய்வு முடிவில், மொத்தம் 30 ஆயிரத்து 287 இடங்கள் நிரம்பி இருக்கின்றன.
இதனைத்தொடர்ந்து, என்ஜினீயரிங் 3-வது சுற்று கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியுள்ளது. மொத்தம் 49 ஆயிரத்து 42 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் நாளை (சனிக்கிழமை) வரை விருப்ப இடங்களை தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.
- 4 சுற்றுகளாக இந்த கலந்தாய்வை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
- 2-வது சுற்று கலந்தாய்வுக்கு 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை :
என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 10-ந்தேதி தொடங்கியது. மொத்தம் 4 சுற்றுகளாக இந்த கலந்தாய்வை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, முதல் சுற்று கலந்தாய்வுக்கான அனைத்து நடைமுறைகளும் நேற்று காலையுடன் நிறைவுபெற்றன. அந்த வகையில் முதல் சுற்று கலந்தாய்வில் 13 ஆயிரத்து 893 விண்ணப்பதாரர்கள் விருப்ப இடங்களை தேர்வு செய்திருந்தனர். அவர்களில் 12 ஆயிரத்து 996 பேருக்கு தற்காலிக இடஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. அதில் 5 ஆயிரத்து 887 பேர் இடங்களை உறுதிசெய்து கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர்.
மேலும் 3 ஆயிரத்து 707 பேர் முதன்மை விருப்ப இடங்கள் கிடைக்கும்பட்சத்தில் ஏற்கனவே தேர்வு செய்திருந்த இடங்களில் இருந்து முன்னேறுவதற்கான வாய்ப்புக்காக காத்திருந்தனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே உறுதி செய்திருந்த இடத்துக்கான கட்டணத்தை செலுத்தியிருக்க வேண்டும். அந்த வகையில் 3 ஆயிரத்து 707 பேரில், 3 ஆயிரத்து 46 பேருக்கு அவர்களின் முதன்மை விருப்ப இடங்களில் முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதன்படி, முதல் சுற்று கலந்தாய்வு முடிவில், 9 ஆயிரத்து 594 மாணவ-மாணவிகள் தமிழகம் முழுவதும் உள்ள 446 என்ஜினீயரிங் கல்லூரிகளில் தங்களுக்கு விருப்பமான படிப்புகளை தேர்வு செய்து அந்த இடங்களில் சேர்ந்திருக்கின்றனர். முதல் சுற்றில் 446 என்ஜினீயரிங் கல்லூரிகளில் 269 கல்லூரிகளில் ஒரு இடங்களைகூட மாணவர்கள் தேர்வு செய்யவில்லை. 116 கல்லூரிகளில் 10-க்கும் குறைவான இடங்களையும், மற்ற கல்லூரிகளில் இரட்டை இலக்கத்தில் இடங்களையும் தேர்வு செய்து சேர்ந்திருக்கின்றனர்.
இதில் அதிகபட்சமாக எஸ்.எஸ்.என். கல்லூரியில் 87.89 சதவீத இடங்களும், அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாக கல்லூரியில் 86.82 சதவீத இடங்களும், அண்ணா பல்கலைக்கழக குரோம்பேட்டை எம்.ஐ.டி. வளாக கல்லூரியில் 85.58 சதவீத இடங்களும், காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 83.87 சதவீத இடங்களும் நிரம்பியுள்ளன.
பெரும்பாலும் மாணவ-மாணவிகள் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கின்றனர்.
2-வது சுற்று கலந்தாய்வு நேற்று காலையில் இருந்து தொடங்கி இருக்கிறது. இதற்கு சுமார் 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
- இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
- சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது. விண்ணப்பித்த 1.5 லட்சம் அதிகமான மாணவர்களுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வை நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்பாடுகளை செய்துள்ளது. சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் நடைபெறவிருந்த பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு, நீட் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்தால் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று (செப்.10) தொடங்கி நடைபெற உள்ளது.
இதில் 1.57 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று முதல் நவம்பர் 13-ம் தேதி வரை 4 கட்டங்களாக நடத்தப்படும்.
- சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடந்து முடிந்தது.
- முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் மாதம் 2-வது வாரத்துக்கு மேல் தொடங்கும்.
சென்னை :
தமிழகம் முழுவதும் உள்ள 431 என்ஜினீயரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான கலந்தாய்வு கடந்த 20-ந்தேதி தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25-ந்தேதி (நேற்று முன்தினம்) முதல் பொது கலந்தாய்வு தொடங்கி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நீட் தேர்வு முடிவு வெளியாகாததால், பொது கலந்தாய்வு தள்ளி வைக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
இந்த நிலையில் 'நீட்' தேர்வு முடிவு குறித்த அறிவிப்பை தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டு இருக்கிறது. அந்தவகையில் பார்க்கும்போது என்ஜினீயரிங் பொது கலந்தாய்வுக்கு இன்னும் 2 வாரம் வரை காத்திருக்க வேண்டிய நிலைக்கு மாணவ-மாணவிகள், பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி சொல்லும்போது, நீட் தேர்வு முடிவு வெளியான 2 நாட்களுக்கு பிறகு, என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவித்து இருந்தார். அதன்படி, என்ஜினீயரிங் படிப்புக்கான பொது கலந்தாய்வும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந்தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து, 2 மாதத்துக்கு (நவம்பர் மாதம் 2-வது வாரம் வரை) தரவரிசை பட்டியலின் அடிப்படையில் மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டு, விருப்ப இடங்களை தேர்வு செய்வது, தற்காலிக இடங்களை ஒதுக்குவது, அதை உறுதிசெய்த பின்னர், இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்குவது, கல்லூரிகளில் சேருவது என கலந்தாய்வு நடக்கிறது. அதையடுத்து, துணை கலந்தாய்வு நடத்தப்படும். அந்த வகையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் மாதம் 2-வது வாரத்துக்கு மேல் தொடங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- கலந்தாய்விற்கு மாணவர்கள் ஜூன் 20-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க ஜூலை 19ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
சென்னை:
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 16-ஆம் தேதி தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் எந்த வகையில் மாணவர் சேர்க்கையை நடத்துவது என்பது குறித்து கலந்தாலோசித்து முடிவு செய்திருக்கிறோம்.
குறிப்பாக பொறியியல் கல்லூரிகளில் அதிகமாக மாணவர்கள் சேராத சூழ்நிலை, குறிப்பிட்ட காலத்தில் இடம் கிடைக்காத சூழ்நிலை உள்பட பல்வேறு காரணங்களையும் ஆலோசித்தோம். சென்ற ஆண்டு அண்ணா பல்கலைக் கழகத் தில் மட்டும் 631 இடங்கள் காலியாக இருந்தன. அதற்கு முந்தைய வருடம் 750 இடங்கள் காலியாக இருந்தது. இதற்கு காரணம் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து விட்டு பின்னர் நீட் தேர்வு மூலம் மருத்துவ கல்லூரி உள்பட மற்ற கல்லூரிகளில் இடம் கிடைத்த காரணத்தால் அங்கு சென்று சேர்ந்து விடுவதுதான். அதனால் இங்கு காலி இடங்கள் ஏற்பட்டு விடுகிறது. எனவே இவற்றை மாற்றி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இப்போது இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவு வந்த பிறகுதான் பொறியியல் கல்லூரி அட்மிஷன் தொடங்கப்படும்.
பிளஸ்-2 தேர்வு முடிவு வந்த பிறகு ஆன்லைனில் விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி நாள் 19.7.2022. அதாவது ஜூன் 20-ல் தொடங்கி ஜூலை 19 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தை சொந்தமாகவும் விண்ணப் பிக்கலாம். அல்லது அவர வர் படிக்கும் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப் பிக்கலாம். இது தவிர தமிழகம் முழுவதும் மொத்தம் 110 இடங்களிலும் விண்ணப்பிக்க வசதிகள் ஏற்படுத்தப்படும்.
விண்ணப்பங்கள் பெற்ற பிறகு சான்றிதழ் சரி பார்க்கப்படுவது 20.7.22 முதல் 31.7.22 வரை நடைபெறும். அதன் பிறகு தர வரிசை பட்டியல் 8.8.22 அன்று வெளியிடப்படும். ஆகஸ்டு 16 முதல் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரர்கள், விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு (கவுன்சிலிங்) நடைபெறும். அதன் பிறகு 22-ந்தேதியில் இருந்து பொது கல்வி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு, 22.8.22 முதல் 14.10.22 வரை இட ஒதுக்கீடு நடைபெறும். இதில் துணை கலந்தாய்வு 15.10.22, 16.10.22 நடைபெறும். எஸ்.சி. கலந்தாய்வு 17, 18 ஆகிய 2 நாட்கள் நடைபெறும். 18-ந்தேதியுடன் அட்மிஷன் முடிந்து விடும். இதில் முதல் 15 ஆயிரம் பேருக்கு 1 வாரத்தில் கலந்தாய்வு நடைபெறும்.
அந்த ஒரு வாரத்துக்குள் அவர்கள் பணம் கட்டியாக வேண்டும். அப்படி கட்டாவிட்டால் அவர்களது அட்மிஷன் ரத்து செய்யப்பட்டு அடுத்த மாணவருக்கு அந்த இட வாய்ப்பு வழங்கப்படும். தனியார் அல்லது அரசு பொறியியல் கல்லூரி என எந்த கல்லூரியாக இருந்தாலும் ஒரு வாரத்தில் பணம் கட்ட வேண்டும். 2 மாதத்தில் 4 ரவுண்டு கலந்தாய்வு முடிவு பெறும். பிளஸ்-2 தேர்வு முடிவு ஜூன் 23-ல் வெளி யிடப்படுவதால் அரசு கலைக் கல்லூரிகளில் சேர ஜூன் 27-ல் விண்ணப்பம் போடலாம். கடைசி தேதி ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம். ஜூலை 25-ந்தேதி முதல் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தர்மபுரியில் உள்ள பயணியர் மாளிகையில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் முதன் முறையாக நடப்பு கல்வியாண்டிற்கான என்ஜினீயரிங் படிப்புக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள அந்தந்த மாவட்டங்களிலேயே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டது.
விண்ணப்பித்த மாணவர்கள் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள அழைப்பு விடுவிக்கப்பட்டு உள்ளது.
கவுன்சிலிங்கில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஆன்லைன் மூலம் தாங்கள் சேர விருப்பமுள்ள கல்லூரிகளை தேர்வு செய்வதற்காக தமிழகம் முழுவதும் 42 மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. அதனை மாணவ, மாணவிகள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
வருகிற 25-ந் தேதி முதல் கட்ட கவுன்சிலிங் தொடங்க உள்ளது. இந்த முதல் கட்ட கவுன்சிலிங் 3 நாட்களுக்கு நடைபெறும்.
இந்த கவுன்சிலிங்கில் 190-க்கும் மேல் கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு எந்த கல்லூரிகளில் சேர வேண்டுமோ அந்த கல்லூரிகளை அவர்கள் தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறு தேர்ந்தெடுக்கும் போது ஒரு மாணவனோ அல்லது மாணவியோ ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கல்லூரிகளை சேர விருப்பம் தெரிவிக்கலாம். இதுபோன்று அந்த மாணவ, மாணவிகள் நூறு கல்லூரிகள் வரை விருப்பம் தெரிவித்து தேர்ந்தெடுக்கலாம். இதில் எந்த கல்லூரியில் அவர்களுக்கு இடம் கிடைக்கிறதோ அந்த கல்லூரி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
இதில் எதாவது மாற்றம் செய்து கொள்ளும் விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் 2-வது கட்ட கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு தங்களது விருப்ப கல்லூரிகளை தேர்ந்தெடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Anbazhagan
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இந்த வருடம் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் 18,514 பேர் அதிகமாக விண்ணப்பித்து உள்ளனர். முதல் தலைமுறை பட்டதாரியாக 83,727 பேர் பதிவு செய்துள்ளனர்.
விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவிகளுக்கு ரேண்டம் எண் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடந்தது.
உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ரேண்டம் எண்களை கம்ப்யூட்டர் மூலம் வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் உள்ள 509 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. கடந்த வருடம் கலந்தாய்வில் கலந்து கொண்ட 26 தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு கல்ந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்கவில்லை.
இதன்காரணமாக 4085 இடங்கள் குறைந்துள்ளன. இந்த வருடம் புதிதாக கோவை, மதுரை, திருநெல்வேலி, உள்ளிட்ட இடங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மண்டல கல்லூரிகளில் 720 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆண்டு முதல் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உள்ள 1020 பொறியியல் இடங்களும் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நிரப்பப்படும்.
வருகிற 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்கள் மூலம் ஒரு வார காலம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும். சென்னையில் மட்டும் 17-ந் தேதி வரை கூடுதலாக 3 நாட்கள் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும்.
சான்றிதழ் சரிபார்க்க மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரம், நாள், இடம் ஆகியவை எஸ்.எம்.எஸ் மற்றும் இ.மெயில் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
சான்றிதழ் சரிபார்க்கும் பணி நிறைவுபெற்ற பிறகு உத்தேசமாக ஜூலை 6-ந்தேதி பொறியியல் கலந்தாய்வு தொடங்கும். முதல் கட்ட மருத்துவ கலந்தாய்வை பொறுத்து சிறிய மாற்றங்கள் ஏற்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, செயலாளர் ரைமன்ட் உத்தரியராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். #Tamilnews