என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Environmental Award"
- சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் மீண்டும் விருதுகள் பெற விண்ணப்பிக்க இயலாது.
- ஏற்கனவே விருது பெற்ற தனிநபர் ஒன்றிற்கு மேற்பட்டோர் மீண்டும் விருது பெற விண்ணப்பிக்க இயலாது.
திருப்பூர்:
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேன்மை மற்றும் ஆராய்ச்சி பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு சிறப்பாக பணியாற்றி வரும் கல்வி நிறுவனங்கள், தனிநபர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 2022-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கி கவுரவிப்பதற்கு தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளது.
விருதுகள் விவரம் வருமாறு:-
சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு-முதல் பரிசு ரூ.15000,2-வது பரிசு ரூ.10,000, 3-வது பரிசு ரூ.7500. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு செயல்பாடுகளில் சிறந்து விளங்கும்கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள், தனிநபர்கள் இதற்கு தகுதியடையவர்கள்.
சுற்றுச்சசூழல் பாதுகாப்பு -மேலாண்மை-தனிநபர்.முதல் பரிசு ரூ.15000,2-வது பரிசு ரூ.10,000, 3-வது பரிசு ரூ.7500. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை பணிகளில் சிறந்து விளங்கும் தனிநபர்கள்.
சுற்றுச்சசூழல் பாதுகாப்பு -மேலாண்மை-நிறுவனம்.முதல் பரிசு ரூ.15000,2-வது பரிசு ரூ.10,000, 3-வது பரிசு ரூ.7500. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை பணிகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள்.
சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கட்டுரை, பரிசு தொகை ரூ.15000. சுற்றுச்சூழலின் சிறந்த மேலாண்மைக்கு வித்திடும் ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள்.
அனைத்து விண்ணப்பதாரர்களும் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் வருமாறு:-
விண்ணப்பதாரர் தனிநபராக இருப்பின் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி பிரிவில் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி பிரிவின் கீழ் கடந்த ஆண்டு 01-01-2022 முதல் 31-2-2022 வரை உள்ள தகுதி காலத்திற்குள் தனிநபர் -நிறுவனம் செய்த பணிகள் மட்டுமே விண்ணப்பத்தில் இடம் பெற வேண்டும். தனிநபராக இருப்பின் தமிழக அரசால் வேறு எந்த விருதுகளுக்கும் அனுப்பப்படாத பணிகளின் விவரம், அவற்றின் பயன் மற்றும் விவரங்களை அறிக்கையுடன் இணைத்தல் வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேண்மை பிரிவில் விண்ணப்பிக்கக்கூடிய தனிநபர் சி நிறுவனம் அறிவிக்கையில் குறிப்பிட்ட 1-1-2022 முதல் 31-12-2022 வரை உள்ள காலகட்டத்தில் மேற்கொண்ட களப்பணி மற்றும் அதைச்சார்ந்த பிரசுரங்கள், பத்திரிக்கை குறிப்புகள், திட்ட அறிக்கைகள், அதனால் ஏற்பட்ட பயன்பாடு, பயனாளிகள் , பங்கு பெற்றோர் எண்ணிக்கை குறித்த தகவல்கள் இடம்பெற வேண்டும். மேற்கண்ட களப்பணியை சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் ,தேர்வுக் குழுவினர் ஆய்வு செய்வார்கள்.ஏதேனும் ஒரு பிரிவில் மட்டுமே தனிநபர் , நிறுவனம் விண்ணப்பிக்கலாம்.மேற்கண்ட நான்கு பிரிவிற்கும் அப்பிரிவின் எதிரே குறிப்பிட்டுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்தநபர்கள், நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ள மேற்கண்ட நான்கு பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிற்கும் உள்ள தனித்தனி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
ஏற்கனவே சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்ட நபர்கள்,நிறுவனங்கள் மீண்டும் விருதுகள் பெற விண்ணப்பிக்க இயலாது.
சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கான தனி விதிகள்:-
சிறந்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கட்டுரைகளை ஊக்குவிக்கும் வண்ணம் 2022-ம் ஆண்டு ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2022-ம் வரை வெளியான, தனிநபர் அல்லது ஒன்றிற்கு மேற்ப்பட்டோர் இணைந்து உருவாக்கிய, சிறந்த ஆராய்ச்சிக்கட்டுரைக்கு ரொக்கப்பரிசு, பாராட்டு மடலும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி கட்டுரைகள் தமிழிலும் / ஆங்கிலத்திலும் தரமான ஆராய்ச்சி ஏடுகளில் பிரசுரிக்கப்பட்டவைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.ஆங்கில கட்டுரையானால் ஆராய்ச்சி கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு இணைக்கப்பட வேண்டும்.இதற்கு ஆதாரமாக எந்த ஆராய்ச்சி ,அறிவியல் ஏடுகளில் பிரசுரிக்கப்பட்டது என்று விவரம் அளித்தல் வேண்டும்.இந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலவரையறைக்குள் பிரசுரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். ஆராய்ச்சி கட்டுரை பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டிருப்பின் (தமிழிலும் / ஆங்கிலத்திலும்), அந்தபுத்தகம் முழுமையாக இணைத்தல் வேண்டும். ஆராய்ச்சி கட்டுரை மற்றும் புத்தகம் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் சேர்ந்து பிரசுரம் செய்திருந்தால், முதல் நபர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்.ஆராய்ச்சிக் கட்டுரையின் 6 நகல்கள் அனுப்பப்பட வேண்டும்.
ஏற்கனவே விருது பெற்ற தனிநபர் ஒன்றிற்கு மேற்பட்டோர் மீண்டும் விருது பெற விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பிக்கும் முறை:-
விண்ணப்பத்துடன் செயலாக்கத்தினை உறுதிபடுத்தும் வகையில், பிரசுரச்சீட்டுகள், ஊர்வலங்கள் மற்றும் நிழற்படங்கள்,மற்ற அவசிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.விண்ணப்பங்கள் மற்றும் அதன் இணைப்புகள் நூலால் உறுதியாக தைக்கபட்டிருக்கவேண்டும்.ஸ்டேப்ளர்பின் கொண்டு இணைக்கப்படக்கூடாது.இணைக்கப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். இவ்விருதுக்குரிய விண்ணப்பப்படிவங்களை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநரக வளையதளத்தில் (www.environment.tn.nic.in) இருந்து 15.8.2023பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். வலைதள முகவரி தொலைபேசி எண்-www.environment.tn.nic.in- 2433 6421.
விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யும் கடைசி நாள் -15.8.2023.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்வந்து சேர வேண்டிய கடைசி நாள்-21.8.2023.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் 6 நகல்களில் இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை' (Director, Department of Environment and Climate Change)என்ற பெயரில் ரூ.100 க்கான கேட்புக் காசோலையுடன் 3 புகைப்படங்களையும் இணைத்து அனுப்பவேண்டும்.இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தரைதளம், பனகல்மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை 600 015 என்ற முகவரிக்கு 21.8.2023 அன்று மாலை 5 மணிக்குள்ளாக தபால் மூலம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறவேண்டும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.
கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.
மெட்ரோ ரெயில் சேவைக்கு வரவேற்பு ஏற்பட்டதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எழும்பூர் மெட்ரோ சுரங்க ரெயில் நிலையத்துக்கு மத்திய அரசின் சிறந்த சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் நடந்த மத்திய வீட்டுவசதி கட்டிட மாநாட்டில் மத்திய மந்திரி ஹர்தீப் சிங்பூரி எழும்பூர் மெட்ரோ சுரங்க ரெயில் நிலையத்துக்கு இந்த விருதை வழங்கினார்.
இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ சுரங்க ரெயில் நிலைய கட்டிடம் சிறந்த சுரங்க மெட்ரோ ரெயில் நிலையமாகவும், சிறந்த சுற்றுச்சூழலுக்கான விருதுக்காக மத்திய அரசின் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
எழும்பூர் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையம் நவீன முறையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் சிறந்த ரெயில் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு கிடைத்த சிறந்த பெருமை, கவுரவம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain #EgmoreMetroStation
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்