என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "eradication work"

    டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணி தீவிரமாக நடக்கிறது. 1,921 இடங்கள் கொசுப்புழு உற்பத்தியாவதற்கு காரணமாக இருந்தது கண்டறியப்பட்டு ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 750 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    டெங்கு கொசு ஒழிக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் வீடுவீடாகச் சென்று டெங்கு கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொசுப்புழுக்கள் உருவாவதை தடுக்க தவறும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

    விருதுநகர் செந்திரகுமார நாடார் கல்லூரி வளாகங்களில் கலெக்டர் சிவஞானம் டெங்கு கொசுப் புழுக்கள் உருவாகிறதா என்பதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கல்லூரி வளாகங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காமல் கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதைதொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திற்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    கடந்த சில நாட்களாக அரசு அலுவலர்கள், அனைத்து நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொது இடங்கள், வீடுகள், கல்லூரி வளாகங்கள், பள்ளி வளாகங்கள், திரையரங்குகள், தொழிற்சாலைகள், அரசு கட்டிடங்கள், மற்றும் திருமண மண்டபங்கள் போன்ற பல்வேறு இடங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். 1,921 இடங்களில் லார்வா புழுக்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டதுடன் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காமல் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமாக இருந்த அந்த நிறுவனங்களிடம் இருந்து மொத்தம் ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 750 அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது.
    விழுப்புரம் நகராட்சி பகுதியில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். #Dengue
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை சார்பில் டெங்கு கொசு ஒழிப்பிற்கென பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பானாம்பட்டு சாலை, ஊரல்கரைமேடு, குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு, வீடாக சென்று தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழு உள்ளதா? எனவும் பழைய டயர்கள், மண்பாண்டங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், ஆட்டு உரல்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளதா? என்று மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும், மாணவ- மாணவிகளுக்கும் டெங்கு காய்ச்சல் குறித்தும் டெங்கு கொசு ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதோடு, பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியை சுத்தமாக பராமரித்தாலே டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் குமாரவேல், தாசில்தார் சையத்மெகமூத், நகராட்சி ஆணையர் லட்சுமி, நகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் ராஜா உள்பட பலர் உடனிருந்தனர்.
    ×