என் மலர்
நீங்கள் தேடியது "Erode Byelection"
- சீமான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்து வந்தனர்.
- ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு:
கடந்த 13-ந் தேதி திருநகர் காலனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
சீமான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்து வந்தனர்.
இது தொடர்பாக 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு தேர்தல் அதிகாரி மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
தேர்தல் அதிகாரியின் பரிந்துரையின்பேரில் ஈரோடு, கருங்கல்பாளையம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சீமான் ஈரோடு பகுதியில் இன்று மாலை பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.
- நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பிரசாரம் செய்தபோது அங்கு வந்த போலீசார் பிரசாரத்துக்கு அனுமதி வாங்கி உள்ளீர்களா? என்று கேட்டனர்.
- அனுமதி வாங்கிக் கொண்டு பிரச்சாரம் செய்தாலும் சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு போலீசார் அனுமதி மறுத்தால் அங்கு பிரச்சாரம் செய்யக் கூடாது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. ஈரோடு சம்பத்நகர், காளைமாட்டு சிலை அருகில், பன்னீர் செல்வம் பார்க் பகுதிகளில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பிரசாரம் செய்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் பிரசாரத்துக்கு அனுமதி வாங்கி உள்ளீர்களா? என்று கேட்டனர். இந்நிலையில் பிரசாரம் செய்த நாம்தமிழர் கட்சி தொண்டர்கள் 40 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இது பற்றி தெரிய வந்ததும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார் அதில் நாங்கள் அனுமதி பெற்று தான் பிரசாரம் செய்கிறோம்.
ஆனால் போலீசார் எங்கள் தொண்டர்களை அனுமதி இல்லை என்று கூறி அழைத்து சென்றுவிட்டனர். எனவே அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட தேர்தல் அதிகாரி அனுமதி இன்றி பிரசாரம் செய்தால் என்னிடம் அனுமதி வாங்கிக் கொள்ளுங்கள். மேலும் அனுமதி வாங்கிக் கொண்டு பிரசாரம் செய்தாலும், சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு போலீசார் அனுமதி மறுத்தால் அங்கு பிரசாரம் செய்யக் கூடாது என்று கூறி அனுப்பி வைத்தார்.
- காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
- வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல் நாளை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்குவதையொட்டி முழு வீச்சில் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் உள்ளிட்ட உபகரணங்களை அனுப்பும் பணியை மும்முரமாக ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறனர். இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். பதற்றமான 32 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம் அடைந்த நிலையில் அங்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி இடைத்தேர்தல்.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட சஞ்சய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம் அடைந்த நிலையில் அங்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்பு மனுக்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நாளை (10-ந் தேதி) முதல் 17-ந் தேதி வரை பெறப்பட உள்ளது.
18-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற 20-ந் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை 3 மணிக்கு பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கும்.
இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட சஞ்சய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் 2வது மகன் சஞ்சயை நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைமைக்கு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்திய நிலையில், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.