என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "euthanasia"
- மரணிக்க விரும்புவோருக்கு அவர்களின் மனநிலையை சோதிக்க உளவியல் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும்
- பட்டனை அழுத்தினால் உங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியுமா? என்ற கேள்விகளை கேட்கும்.
சுவட்சர்லாந்தில் நோயாளிகள் மற்றும் முதியவர்கள் விருப்பத்துடன் கருணைக்கொலை செய்துகொள்ள சட்டம் அனுமதிக்கிறது. அதை தனிமனித உரிமையாக அரசு கருதுகிறது. இந்நிலையில் அவ்வாறு இறப்பதற்கு விருப்பப்படுபவர்கள் வலியில்லாமல் இறக்க தற்கொலை பாட் களை விரைவில் அந்நாட்டில் அறிமுகப்படுத்த உள்ளது. சார்கோ கேப்சியூல் என்று அழைக்கப்படும் இந்த பாட் -கள் கடந்த 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஆகும்.
ஒரு நபர் படுத்துக்கொள்ளும் அளவில் உள்ள இந்த கேப்சியூலுக்குள் நபர் படுத்ததும் ஒரு பட்டனை அழுத்தினால் உள்ளே உள்ள காற்றின் ஆக்சிஜன் வாயு வெளியேறி நைட்ரஜன் மட்டுமே மிஞ்சும் . இதனால் மயக்கம் ஏற்பட்டு ஹைபோக்ஸியா மூலம் உயிரிழப்பு ஏற்படும். சுவாசிக்கும் காற்றானது 78.09% சதவீத நைட்ரஜனாலும், 20.95% ஆக்சிஜனாலும், 0.93% ஆர்கான், 0.04% கார்பன் - டைஆக்ஸைட் ஆகியவற்றாலும் ஆனது ஆகும்.
தீராத நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மற்றும் முதியவர்கள் அமைதியான மரணத்தை எதிர்கொள்வதற்கு இது பயன்படும் என்று இந்த திட்டத்தை இதுசார்த்து இயங்கி வரும் கடைசி புகலிடம் [Last Resort] அமைப்பு வரவேற்றுள்ளது.
இந்த வகையில் மரணிக்க விரும்புவோருக்கு அவர்களின் மனநிலையை சோதிக்க உளவியல் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும். அதுமட்டுமின்றி பல்வேறு கட்டுப்பாடுகளுடனே இந்த வசதி ஒருவருக்கு வழங்கப்படும்.
அவ்வாறு மரணிக்க விரும்விபுவோர், இந்த கேப்சியூலில் உள்ளே படுத்துக்கொண்டு கதவை மூட வேண்டும். உள்ளே உள்ள ஆட்டோமேட்டிக் இயந்திரக் குரல், நீங்கள் யார்? எங்கு இருக்கிறீர்கள்? பட்டனை அழுத்தினால் உங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியுமா? என்ற கேள்விகளை கேட்கும்.
அதற்கு பதிலளித்தபின் பட்டனை அழுத்தினால், உள்ளே காற்றில் உள்ள ஆக்சிஜன் வாயு 30 வினாடிகளில் 21 சதீவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாக குறைந்துவிடும். உள்ளே உள்ள நபர் மயக்க நிலையிலேயே இருப்பார். சுமார் 5 நிமிடங்கள் கழித்து மரணம் ஏற்படும்.
பட்டனை அழுத்திய பிறகு தங்களது முடிவை யாராலும் மாற்றிக்கொள்ள முடியாது. இன்னும் சில மாதங்களில் இந்த வகை கேப்சியூல்கள் சுவிட்ஸர்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்து வருகின்றன.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்