என் மலர்tooltip icon

    சுவிட்சர்லாந்து

    • சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ரஜாவத் முதல் சுற்றில் வென்றார்.

    பாசெல்:

    சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத், சுவிட்சர்லாந்து வீரர் டோபியாஸ் கொன்சி உடன் மோதினார்.

    இதில் ரஜாவத் 21-10, 21-11 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று மாலை நடைபெறும் 2-வது சுற்றில் பிரான்ஸ் வீரர் டோமா ஜூனியர் போபோவ் உடன் மோதுகிறார்.

    • சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் வென்றார்.

    பாசெல்:

    சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நேற்று தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சக நாட்டு வீரர் எச்.எஸ்.பிரனாய் உடன் மோதினார்.

    இதில் ஸ்ரீகாந்த் 23-21, 23-21 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் 2-வது சுற்றில் சீன வீரர் லீ ஷிபெங் உடன் மோதுகிறார்.

    • சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் இஷாராணி பரூவா முதல் சுற்றில் வென்றார்.

    பாசெல்:

    சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நேற்று தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் இஷாராணி பரூவா, சக நாட்டு வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப் உடன் மோதினார்.

    இதில் இஷாராணி 18-21, 21-17, 22-20 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது.
    • பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

    பாசெல்:

    சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நேற்று தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, சுவிட்சர்லாந்தின் அலைன் முல்லர்-நெதர்லாந்தின் கெல்லி வான் புய்டன் ஜோடி உடன் மோதியது.

    இதில் இந்திய ஜோடி 21-16, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், அது நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
    • ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகவே இருக்கும்.

    ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) கூட்டம் நடைபெற்றது.   இதில் ஜம்மு காஷ்மீரில்  குறித்து பேசிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.

    ஐநா கூட்டத்தில் பேசியிருந்த பாகிஸ்தானின் மனித உரிமைகள் அமைச்சர் அசாம் நசீர், காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், அது நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்ந்து மறுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக கூட்டத்தில் பேசிய இந்திய தூதர் க்ஷிதிஜ் தியாகி, பாகிஸ்தானின் தலைவர்கள், அதிகாரிகள் அந்த நாட்டின் ராணுவ பயங்கரவாதத்தினர் எழுதி கொடுக்கும் பொய்களை பரப்புவதை பார்ப்பது வருத்தம் அளிக்கிறது.

    இந்த கவுன்சிலின் நேரத்தை, சர்வதேச உதவிகளை நம்பி வாழும் ஒரு தோல்வியுற்ற அரசு தொடர்ந்து வீணடிப்பது துரதிர்ஷ்டவசமானது. பாகிஸ்தானின் கருத்துக்கள் அதன் பாசாங்குத்தனத்தையும், அதன் மனிதாபிமானமற்ற செயல்களையும், அதன் திறமையின்மையையும் வெளிப்படுத்துகின்றன.

     

    இந்தியா ஜனநாயகம், முன்னேற்றம் மற்றும் அதன் மக்களின் கண்ணியத்தை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறது. இவை பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டிய மதிப்புகள் ஆகும்.

    சர்வதேச தளங்களை தவறாகப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிரான பேச்சுக்களை பாகிஸ்தான் தூண்டி வருகிறது. அதே நேரத்தில் அதன் சொந்த உள்நாட்டு நெருக்கடிகளைத் தீர்க்கத் தவறிவிட்டது.

    ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகவே இருக்கும்.

    கடந்த சில ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள அரசியல், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றமே அங்குள்ள நிலைமையை எடுத்துக்காட்டுகிறது.

    பல தசாப்தங்களாக பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இயல்பு நிலையைக் கொண்டுவருவதற்கான அரசின் உறுதிப்பாட்டின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு இந்த வெற்றிகள் ஒரு சான்றாகும். பாகிஸ்தான் தனது மக்களுக்கு உண்மையான ஆட்சி மற்றும் நீதியை வழங்குவதில் கவனம் செலுத்தலாம்.

    ஒரு நாடாக, பாகிஸ்தான் மனித உரிமைகளை மீறுவதன் மூலமும், சிறுபான்மையினரை ஒடுக்குவதன் மூலமும், ஜனநாயக விழுமியங்களைப் புறக்கணிப்பதன் மூலமும் தனது கொள்கைகளைத் திணிக்கிறது.

    ஐநா சபையால் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்களுக்குப் பாகிஸ்தான் வெட்கமின்றி அடைக்கலம் அளிக்கிறது. எனவே பாகிஸ்தான் யாருக்கும் உபதேசம் செய்யும் நிலையில் இல்லை என்று தெரிவித்தார். 

    • சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் முதலீட்டு உச்சி மாநாடு நடந்து வருகிறது.
    • இதில் பங்கேற்க ஆந்திரப் பிரதேச முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு டாவோஸ் சென்றுள்ளார்.

    டாவோஸ்:

    சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் முதலீட்டு உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க ஆந்திரப் பிரதேச முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்.

    ஆந்திர மாநிலத்துக்கு முதலீட்டை ஈர்ப்பதற்கான முயற்சிகளில் சந்திரபாபு நாயுடு கவனம் செலுத்தி வருகிறார்.

    இந்நிலையில், மாநாட்டின் ஒரு பகுதியாக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்சை நேற்று சந்தித்தார்.

    பில்கேட்சுடனான சந்திப்பைத் தவிர, ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரான அமராவதியில் AI மையம் நிறுவுவதற்கு குறிப்பிடத்தக்க முதலீடுகளை ஈர்ப்பதில் முதல்வர் நாயுடு செயல்பட்டு வருகிறார்.

    யுனிலீவர், பெட்ரோனாஸ், கூகுள் கிளவுட், பெப்சி மற்றும் அஸ்ட்ராஜெனெகா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களையும் முதல் மந்திரி நாயுடு சந்திக்க உள்ளார்.

    உச்சி மாநாட்டின் இடையில் பில்கேட்ஸ் சந்தித்த இரு இந்திய தலைவர்களில் ஒருவர் சந்திரபாபு நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்கள் புர்கா அணிய சுவிட்சர்லாந்து தடை விதித்தது.
    • இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

    ஜூரிச்:

    ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய பெண்களின் முகம் மற்றும் உடல்களை மறைப்பதற்காக அணியும் புர்காவுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

    இதுதொடர்பாக அந்நாட்டின் ஆளும் பெடரல் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், புர்காவுக்கு தடை என்ற உத்தரவு தொடர்பான தீர்மானம் 2021ல் நிறைவேற்றப்பட்டது. இது வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என அறிவித்திருந்தது.

    விமானங்கள், தூதரக வளாகங்கள் ஆகிய இடங்களில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படாது.

    வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தலங்களிலும், மசூதிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது.

    உடல்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மறைத்துக் கொள்ளலாம். மத ரீதியாக அல்லது தட்பவெப்ப நிலை காரணமாக அவ்வாறு செய்யக்கூடாது.

    தடையை மீறுபவர்கள் உடனடியாக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த மறுத்தால் அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரை செலுத்த நேரிடும் என தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் பெண்கள் முகத்தை மறைக்கும் வகையிலான புர்கா அணிவதற்கு தடை என்ற உத்தரவு நேற்று அமலுக்கு வந்தது.

    • இந்திய நிறுவனங்கள் கூடுதலாக 5 சதவீத வரி செலுத்தியாக வேண்டும்.
    • இதற்கு இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தம் (டிடிஏஏ) என்று பெயர்.

    இந்தியாவை தங்களின் விருப்ப நாடுகள் பட்டியலில் இருந்து சுவிட்சர்லாந்து நீக்கியுள்ளது. இதனால் அங்கு வணிகம் மேற்கொண்டிருக்கும் நிறுவனங்கள் கூடுதல் வரி செலுத்தும் கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன.

    சுவிட்சர்லாந்து இந்தியவிலும், இந்திய நிறுவனங்களும் அந்நாட்டிலும் வர்த்தகம் செய்து வருகின்றன. சுவிட்சர்லாந்து சட்டப்படி மற்ற நாட்டு நிறுவனங்கள் 10% வரியை செலுத்த வேண்டும்.

    ஆனால் இந்தியா போன்று விருப்ப பட்டியலில் இருக்கும் நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் 5% வரியை செலுத்தினால் போதுமானது. இதற்கு இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தம் (டிடிஏஏ) என்று பெயர். இந்த விருப்ப பட்டியலிலிருந்துதான் தற்போது இந்தியாவை அந்நாடு நீக்கியிருக்கிறது.

    சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய வணிக நிறுவனமான 'நெஸ்லே' பொருட்கள் இந்தியாவில் அதிக புழக்கத்தில் உள்ளன. அதில் குறிப்பாக மேகி நூடுல்ஸ் அதிக விற்பனை ஆகும் பண்டமாக இருந்தது.

     

    ஆனால் உணவுப் பொருளான மேகி நூடுல்ஸ் -இல் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு ரசாயனம் கலந்து இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு மேகி இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

    ஆனால் அதிக ரசாயனம் கலக்கவில்லை என கூறி நெஸ்லே நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முடிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.

     

    வெகு காலமாக இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் மத்திய அரசின் முடிவு சரிதான் என்ற தீர்ப்பளித்தது. இதனால் குமைச்சலில் இருந்த சுவிட்சர்லாந்து தற்போது இந்த வேலையை பார்த்துள்ளது.

    சுவிட்சர்லாந்தின் இந்த உத்தரவு 2025 ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. அன்றைய தேதி முதல் அந்நாட்டில் வணிகம் செய்யும் இந்திய நிறுவனங்கள் கூடுதலாக 5 சதவீத வரி செலுத்தியாக வேண்டும். 

    • 2022 ஆம் ஆண்டில் 48,800 பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் குடும்பத்தினரால் கொல்லட்டுள்ளனர்.
    • பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகள் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களில் அவர்களது சொந்த குடும்பத்தினரோ, உறவினரோ அல்லது தெரிந்தவராகவரோ இருக்கிறார்கள் என்கிறது புள்ளி விவரம்.

    இந்நிலையில் கடந்த 2023 ஆண்டில் மட்டுமே உலகம் முழுவதிலும் ஒரு நாளைக்கு 40 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்று [நவம்பர் 25] கொண்டாடப்படுவதை ஒட்டி ஐநாவின் பெண்கள் மற்றும் ஐ.நா.வின் போதைப்பொருள், குற்றச்செயல்கள் தடுப்பு அமைப்பு UNODC இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    உலகளவில், 2023 ஆம் ஆண்டில் சராசரியாக 51,100 பெண்கள் மற்றும் சிறுமிகளின் மரணத்திற்கு அவர்களுக்கு நெருங்கியவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர் காரணமாக உள்ளார். இது ஒரு நாளைக்கு 140 பெண்கள் வீதம் ஆகும்.  மேலும் 1 நிமிடத்திற்கு ஒருவர்  கொலை என்றும் கணக்கில் உள்ளது.

     

    அதற்கு முன் 2022 ஆம் ஆண்டில் 48,800 பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் இணையர் அல்லது குடும்பத்தினரால் கொல்லட்டுள்ளனர். பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகள் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    உலகின் அனைத்து இடங்களிலும் உள்ள பெண்களும் சிறுமிகளும் இந்த தீவிரமான பாலின அடிப்படையிலான வன்முறையால் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிக ஆபத்தான இடம் அவர்களது வீடுதான் என்று ஐநா அறிக்கை நிறுவியுள்ளது.

     

    இந்த குடும்ப கொலைகளில் ஆப்பிரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவில் 21,700 பேர் தங்களது இணையர் அல்லது உறவினரால் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்க மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது இது கணிசமான எண்ணிக்கை ஆகும். ஆப்பிரிக்காவில் 100,000 பேருக்கு 2.9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

    அமெரிக்காவில் 100,000க்கு 1.6 பெண்களும், ஓசியானியாவில் 100,000க்கு 1.5 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவில் 100,000 பேருக்கு 0.8 பேர் மற்றும் ஐரோப்பாவில் 100,000 பேர் 0.6 பேர் என்ற விகிதங்களில் பெண்கள், குழந்தைகள் கொலையாகி உள்ளனர்.

    மேலும் 2023 ஆம் ஆண்டில் குடும்பத்துக்குள் நடந்த கொடிய வன்முறை ஆண்களை விடப் பெண்களையே அதிகம் பாதித்துள்ளது. இந்த கொலைகளுக்கு எதிரான =நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அவை குறைவதற்கு மாறாக அதிகரித்துக் கொண்டு இருப்பதாக ஐநா அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. 

    • ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
    • இரண்டு மாதங்களில் மட்டும் 1,100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

    கடந்த செப்டம்பர் மாதம் ஹிஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் சிக்கி லெபனானை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா. அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

    "வெறும் இரண்டே மாதங்களுக்குள் லெபனானில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்ட போதிலும், ஒரு குழப்பமான நடைமுறை வெளிப்பட்டுள்ளது. இந்த வன்முறையை தடுக்க முடிந்தவர்களால் அவர்களின் மரணங்கள் ஏற்பட்டுள்ளன" என்று ஐ.நா. அமைப்பின் குழந்தைகள் நிறுவனமான யூனிசெஃப் (UNICEF) செய்தி தொடர்பாளர் ஜேம்ஸ் எல்டர் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர் "லெபனானில் கடந்த இரண்டு மாதங்களில், ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் பலர் காயமடைந்துள்ளனர் மற்றும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்," என்று கூறினார்.

    இஸ்ரேல் தாக்குதலில் சிக்கி கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 1,100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளனர். காசாவில் உள்ள பாலஸ்தீன குழுவான ஹமாஸ்-க்கு ஆதரவாக ஹிஸ்புல்லா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    • தெளிவான புகைப்படங்களை கொண்டு இந்த தகவல் கிடைக்கப்பெற்றது.
    • இந்த புள்ளிவிவரங்கள் நம்பகமானவை என ஐ.நா. தெரிவித்தது.

    கடந்த 2023 அக்டோபர் மாதம் காசா போர் துவங்கியதில் இருந்து அந்தப் பகுதியில் இருந்த மூன்றில் இரண்டு கட்டிடங்கள் பகுதியாக சேதமடைந்து, அழிக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா. சபை அறிவித்து இருக்கிறது.

    சேத மதிப்பீட்டை புதுப்பித்தும், ஐ.நா. செயற்கைக்கோள் மையம் செப்டம்பர் 3 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 6 ஆம் தேதி வரையிலான காலக்கட்டங்களில் சேகரிக்கப்பட்ட அதிக தெளிவான புகைப்படங்களை கொண்டு இந்த தகவல் கிடைக்கப்பெற்றது.

    அதன்படி, "காசா பகுதியில் உள்ள மொத்த கட்டமைப்புகளில் மூன்றில் இரண்டு பகுதி சேதம் அடைந்துள்ளது என்பதை காட்டுகிறது. காசா பகுதியில் உள்ள சேதமடைந்த கட்டிடங்களில் 66 சதவிகிதம் மொத்தம் 1 லட்சத்து 63 ஆயிரத்து 778 கட்டமைப்புகளை கொண்டிருக்கிறது."

     


    "இதில் 52 ஆயிரத்து 564 கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன, 18 ஆயிரத்து 913 கட்டிடங்கள் மிகக் கடுமையாக சேதமடைந்துள்ளன. 35 ஆயிரத்து 591 கட்டிடங்களில் கிட்டத்தட்ட சேதமடைந்துள்ளன. 56 ஆயிரத்து 710 அமைப்புகளில் மிதமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளன" என்று ஐ.நா. செயற்கைக்கோள் மையம் தெரிவித்தது.

    இஸ்ரேல் மீதான ஹமாஸ் நடத்திய முன்னறிவிப்பு இல்லாத அக்டோபர் 7 தாக்குதலின் விளைவாக 1,205 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் மற்றும் சிறைப் பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகள் அடங்குவர்.

    இதற்கு இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில் காசாவில் குறைந்தது 41 ஆயிரத்து 615 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்று ஹமாஸ் நடத்தும் பிராந்தியத்தின் சுகாதார அமைச்சகம் வழங்கிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புள்ளிவிவரங்கள் நம்பகமானவை என ஐ.நா. தெரிவித்தது.

    • அரசுமுறை பயணமாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்.
    • அங்கு மந்திரி ஜெய்சங்கர், ஜெனீவாவில் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.

    ஜெனீவா:

    அரசுமுறை பயணமாக சுவிட்சர்லாந்து சென்றுள்ள வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், ஜெனீவாவில் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.

    சமீபத்தில் ஓ.டி.டி.யில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய ஐ.சி-814: தி காந்தஹார் ஹைஜாக் என்ற வெப் தொடர் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு மந்திரி ஜெய்சங்கர் அளித்த பதிலளித்து கூறியதாவது:

    இந்த வெப் தொடரை இன்னும் பார்க்கவில்லை. ஆனாலும் என் தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    1984-ம் ஆண்டிலும் ஒரு விமான கடத்தல் நடந்தது. இண்டியன் ஏர்லைன்ஸ் பயணியர் விமானத்தை காலிஸ்தான் ஆதரவு கடத்தல்காரர்கள் துபாய்க்கு கடத்தினர்.

    அப்போது இளம் அதிகாரியாக இருந்த நான் இந்திய வெளியுறவு துறையின் கையாளும் குழுவில் ஒருவனாக இருந்தேன். மொபைல் போனில் என் அம்மாவை அழைத்து, 'விமானத்தை கடத்தியுள்ளனர். என்னால் வீட்டுக்கு வரமுடியாது' என கூறினேன்.

    அதன்பின், கடத்தப்பட்ட விமானத்தில், என் தந்தையும் இருப்பதைக் கண்டுபிடித்தேன். இது ஒரு பெரிய கதை.

    இதில் சுவாரசியம் என்னவென்றால், ஒருபுறம் கடத்தல் சம்பவத்தை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவில் இருந்தேன். மறுபுறம், விமானக் கடத்தல் தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்தேன் என தெரிவித்தார்.

    ×