என் மலர்
நீங்கள் தேடியது "ex-Chief minister"
- உடுமலை நகராட்சி நடுநிலைப்பள்ளி (எக்ஸ்டன்ஷன்) மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டது.
- முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை பள்ளி மாணவர்களுடன் கொண்டாடபட் டது.
உடுமலை :
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி உடுமலை10-வது வார்டுக்கு உட்பட்ட உடுமலை நகராட்சி நடுநிலைப்பள்ளி (எக்ஸ்டன்ஷன்) மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் ,எழுது பொருட்கள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டது.
இதில் உடுமலை நகராட்சி தலைவர் மு.மத்தீன், 10வது வார்டு கவுன்சிலர் தண்டபாணி ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்களை வழங்கினர்.
இதில் பள்ளி தலைமை ஆசிரியர் புனிதா ,ஆசிரியர்கள் பால அன்பு வள்ளி, சத்தியபாமா ,கனக சுந்தரி ,அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.