என் மலர்
நீங்கள் தேடியது "Ex.DGP"
- திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 49 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது
- விழாவுக்கு கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா்
திருப்பூர் :
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 49 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில் 2019-20 ம் கல்வியாண்டில் தோ்ச்சி பெற்ற 588 மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் டி.ஜி.பி., எம்.ரவி பட்டங்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:- மாணவா்கள் கவனத்தை சிதறவிடாமல் உணா்வுப்பூா்வமாகக் கல்வியைக் கற்றால் எளிதில் வெற்றி பெறலாம். பட்டம் பெற்றதுடன் கடமை முடிந்துவிட்டது என்று கருதாமல் சமுதாயத்துக்கு செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்ய வேண்டும். அதிலும் பெற்றோரைக் கவனிப்பது தலையாய கடமையாகும். இளைஞா்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகிவிடக்கூடாது. இந்த பழக்கமானது இளைஞா்களின் குறிக்கோள், சமூகம் மற்றும் குடும்பத்தை விட்டே விலக்கிவிடும். ஆகவே மாணவா்கள் தங்களது பொறுப்பை உணா்ந்து செயல்பட வேண்டும் என்றாா்.