என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Expired Sweets"

    • காலாவதியான இனிப்பு, கார வகைகள், உணவு பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யக்கூடாது.
    • காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    வெள்ளகோவில்:

    முத்தூர் பகுதிகளில் காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து வெள்ளகோவில், முத்தூர் பகுதி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-

    முத்தூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் இனிப்பு, காரம் தயாரித்து விற்பனை செய்யும் பலகார கடைகள், உணவு பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள் தீபாவளி பண்டிகைக்கு தயார் செய்த அனைத்து வகையான காலாவதியான இனிப்பு, காரம் உட்பட அனைத்து தின்பண்டங்கள், உணவுப் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் காலாவதியான இனிப்பு கார உணவு பொருட்கள் அனைத்தையும் விற்பனை செய்வதை தவிர்த்தல் வேண்டும். காலாவதியான இனிப்பு, கார வகைகள், உணவு பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யக்கூடாது.

    மேலும் கிராமப்புறங்களில் உள்ள சிறு, பெரிய இனிப்பு, காரம் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை கடைகளில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்பனைக்காக வைக்கப்பட்ட பலகாரங்களை உடனே அகற்றி அழிக்க வேண்டும்.

    எனவே காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு இதையும் மீறி விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அபராதம் விதித்தல், சீல் வைத்தல், கடை உரிமம் ரத்து செய்தல் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடியாக மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×