என் மலர்
நீங்கள் தேடியது "F4 Car Racing"
- டிசம்பர் மாதம் நடக்கவிருந்த போட்டி ஒத்தி வைக்கப்பட்டது.
- ஆகஸ்ட் 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது.
சென்னை:
சென்னையில் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் நடக்கவிருந்த போட்டி ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், அந்த போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது.
ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாஜக செய்தி தொடர்பாளர் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை இன்று பிற்பகல் அவசரமாக விசாரிக்க வேண்டும் என பாஜக செய்தி தொடர்பாளர் B.N.S. பிரசாத் முறையீடு செய்த நிலையில், நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.