search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Faf du Plessis"

    • கயானா அமேசன் வாரியர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் லூசியா கிங்ஸ் வீழ்த்தியது.
    • கரீபியன் பிரிமியர் லீக் கோப்பையை செயின்ட் லூசியா கிங்ஸ் அணி முதல் முறையாக வென்றது.

    கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் தகுதி பெற்றன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே எடுத்தது. லூசியா கிங்ஸ் தரப்பில் நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய லூசியா கிங்ஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் கயானா அணியையும் வீழ்த்தி அசத்தியது.

    இந்த வெற்றியின் மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. மேலும் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய ரோஸ்டன் சேஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதேசமயம், தொடர் முழுதும் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய நூர் அஹ்மத் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில் இப்போட்டி முடிவில் கோப்பை வழங்கும் நிகழ்ச்சியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கோப்பையை வாங்கி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடந்து முடிந்த 2024 டி20 உலகக் கோப்பை கோப்பையை இந்திய கேப்டன் ரோகித் சர்மா கொண்டாடியதைப் போலவே ஃபாஃப் டு பிளெசிஸும் சிபிஎல் கோப்பையை வென்ற பிறகு கொண்டாடினார். 

    • முதலில் ஆடிய பெங்களூரு 218 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய சென்னை 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    ஆட்டத்தின் கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை யாஷ் தயாள் வீசினார். அதில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து தோனியின் விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். கடைசி ஓவரில் அவரது செயல்பாடு சிறப்பாக இருந்தது.

    இந்தப் போட்டியில் ஆர்.சி.பி. அணியின் கேப்டன் டூ பிளசிஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அப்போது அவர் கூறியதாவது:

    லீக் சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்ததில் மகிழ்ச்சி. முதலாவதாக பேட் செய்ய நான் ஆடிய ஆடுகளங்களில் மிகவும் கடினமானதாக இந்த ஆடுகளம் இருந்தது. கடந்த 6 போட்டிகளாக எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர். ஸ்ட்ரைக் ரேட்டும் சிறப்பாக இருந்தது.

    இலக்கு சற்று நெருக்கமாக இருந்தபோது தோனி களத்தில் இருந்தார். பலமுறை வெற்றிகரமாக அதை அவர் செய்துள்ளார் என எண்ணினேன். ஈரமான பந்தில் எங்களது பந்துவீச்சை மாற்ற முயற்சித்தோம். ஆட்ட நாயகன் விருதை யாஷ் தயாளுக்கு வழங்க விரும்புகிறேன். அவர் பந்துவீசிய விதம் நம்ப முடியாததாக இருந்தது. அதற்கு அவர் தகுதியானவர்.

    கடைசி ஓவர் வீசுவதற்கு முன் பந்தில் அதிகம் பேஸ் வேண்டாம் என அவரிடம் சொன்னேன். அவரது திறனை நம்புமாறு சொன்னேன். முதல் பந்தில் யார்க்கர் முயற்சித்தார். அடுத்தடுத்த பந்துகளில் வேகத்தை மட்டுப்படுத்தினார். அது பலன் தந்தது.

    எங்களுக்கு பார்வையாளர்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றி. எங்களது முதல் இலக்கு நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைவது. இதை இந்த நேரத்தில் அனுபவிப்பது அவசியம் என தெரிவித்தார்.

    • மும்பைக்கு எதிராக போட்டியில் டாஸ் போடுவதற்காக காயினை சுண்டி விட்டார்கள்.
    • அந்த காயின் கீழே விழுந்த பின்னர் அப்படியே அந்த காயினை திருப்பி எடுத்து கொடுத்து என்னிடம் தோற்று விட்டதாக காட்டினார்கள் என டு பிளெசிஸ் கூறினார்.

    ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ஆர்சிபி- ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஐதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டி துவங்குவதற்கு முன்னதாக டாஸ் போடும் இடத்திற்கு வந்த டு பிளெசிஸ் கடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது டாஸ் போடும் போது எவ்வாறு தான் ஏமாந்தேன் என்பது குறித்து பேட் கம்மின்ஸ்ஸிடம் கூறுவது போல சில செய்கைகளை வெளிப்படுத்தியிருந்தார். அது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதில், கடந்த போட்டியின் போது என்ன நடந்தது தெரியுமா? டாஸ் போடுவதற்காக காயினை சுண்டி விட்டார்கள். அப்போது அந்த காயின் கீழே விழுந்த பின்னர் அப்படியே அந்த காயினை திருப்பி எடுத்து கொடுத்து என்னிடம் தோற்று விட்டதாக காட்டினார்கள் என்பது போன்று செய்கையை செய்து காட்டி விளக்கம் கொடுத்தார். இதனை கேட்ட கம்மின்ஸ் சிரித்தவாறு அதனை கவனித்துக் கொண்டிருந்தார்.

    வான்கடே மைதானத்தில் அவர்கள் கடைசியாக விளையாடிய போட்டியின் போது ஹர்திக் பாண்ட்யா மற்றும் டு பிளெசிஸ் ஆகியோர் டாஸ் போடுவதற்காக மைதானத்திற்கு வந்தனர்.

    அப்போது டாஸ் போடும் நிகழ்வும் நடைபெற்றது. ஆனால் டாஸ் விழுந்த பின்னர் அந்த காயினை எடுத்த நடுவர் ஸ்ரீநாத் மும்பை அணிக்கு ஆதரவாக காயினை திருப்பி காண்பித்து டுபிளிசிஸ் டாசில் தோல்வி அடைந்ததாக ஏமாற்றினார். இதுகுறித்த சில வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. அதோடு எப்போதுமே மும்பை அணி வான்கடே மைதானத்தில் விளையாடும் போது அவர்களுக்கே முடிவுகள் சாதகமாக இருப்பதாகவும் ரசிகர்களும் அந்த தவறுகளை சுட்டிக்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    • டோனியை போன்ற மகத்தான கேப்டன்களின் கீழ் நீங்கள் விளையாடும்போது உங்களை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
    • அனைவரும் அழைப்பது போல டோனி கூலான கேப்டன்.

    கேப்டவுன்:

    தென் ஆப்பிரிக்க 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டித்தொடர் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 2-வது சீசன் போட்டி தொடர் நாளை தொடங்குகிறது.

    இதில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், எம்ஐ கேப்டவுன், பார்ல் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்சின் முன்னாள் வீரருமான பாப் டூப்ளசிஸ் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக உள்ளார்.

    இந்நிலையில் எம்.எஸ்.டோனி மற்றும் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் என பாப் டூப்ளசிஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சென்னை அணியில் இளம் வீரராக இருந்தது மகத்தானதாக அமைந்தது. அங்கே எம்.எஸ்.டோனி மற்றும் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவர்களை போன்ற பெரிய வீரர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம்.

    டோனியை போன்ற மகத்தான கேப்டன்களின் கீழ் நீங்கள் விளையாடும்போது உங்களை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அனைவரும் அழைப்பது போல டோனி கூலான கேப்டன். அவர் அழுத்தமான நேரங்களிலும் அமைதியாக இருப்பார். பொதுவாகவே நீங்கள் அழுத்தமான நேரங்களில் ரிலாக்ஸாக இருந்து பந்துவீச்சு கூட்டணியில் மாற்றங்களை செய்து பயன்படுத்துவது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். எனவே தோனி தலைமையில் விளையாடுவதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த வருடம் சேப்பாக் சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்று வரை தகுதி பெற்றது.

    • தினேஷ் கார்த்திக் கடைசி 5 ஓவர்களில் மிகச் சிறப்பான பினிஷிங்கை தொடர்ச்சியாக எங்களுக்கு கொடுத்து வருகிறார்.
    • இந்த போட்டியில் அது அவரால் முடியாமல் போனது.

    பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 24-வது லீக் ஆட்டத்தில் டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.

    இந்நிலையில் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்த பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளிசிஸ் கூறுகையில்:-

    இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே நான் டைவ் அடித்ததன் காரணமாகவே பேட்டிங் செய்யும்போது என்னுடைய இடுப்பு பகுதியில் அசவுகரியத்தை உணர்ந்தேன். அதன் காரணமாகவே வயிற்றில் டேப் அணிந்து விளையாடினேன்.

    இந்த போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பாகவே விளையாடினோம். கடைசி ஐந்து ஓவர்களில் போட்டியை வெற்றிகரமாக முடிப்போம் என்று நினைத்தோம். ஏனெனில் தினேஷ் கார்த்திக் கடைசி 5 ஓவர்களில் மிகச் சிறப்பான பினிஷிங்கை தொடர்ச்சியாக எங்களுக்கு கொடுத்து வருகிறார். அதேபோன்று போட்டியை முடித்துக் கொடுப்பது அவருக்கு எப்பொழுதும் வழக்கமான ஒன்று.

    இந்த போட்டியில் அது அவரால் முடியாமல் போனது. 200 ரன்கள் வரை இந்த மைதானத்தில் எளிதாக அடிக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் 200 ரன்களுக்கு மேல் வழங்கிய ரன்களே இந்த போட்டியில் எங்களுக்கு பாதகமாக அமைந்தது. கடைசி நான்கு ஓவர்கள் இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடி முடித்திருக்க வேண்டிய தருணம். ஆனால் அந்த சமயத்தில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்து விட்டோம். அதுவே சென்னை அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

    பந்துவீச்சை பொருத்தவரை எங்களது அணியில் முகமது சிராஜ் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதேபோன்று அவருடன் இணைந்து மற்ற பந்து வீச்சாளர்களும் இறுதி நேரத்தில் சிறப்பாக பந்துவீச வேண்டும்.

    என அவர் கூறினார்.

    • பிராவோவுக்கு கீழ் பயிற்சி செய்யும் போது இளம் பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையை பெறுவார்கள் என நம்புகிறேன்.
    • டுபிளசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் தொடர்ந்து விளையாடி இருந்தால் அவர்கள் 18-வது ஒவரின் முடிவிலே போட்டியை வென்றிருப்பார்கள்.

    பெங்களூரு:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் மோதியது. இந்த போட்டியில் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி 227 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்தது.

    இதனை அடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 191 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியின் அருகே இருந்த நிலையில் சிஎஸ்கே அணியின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்த நிலையில் வெற்றி குறித்து சிஎஸ்கே கேப்டன் டோனி கூறியிருப்பதாவது:-

    பெங்களூரு பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம். இரவு நேரத்தில் பனிப்பொழிவும் இருக்கும். இதற்கு தகுந்தார் போல் உங்கள் மனதை நீங்கள் மாற்றிக் கொண்டு விளையாட வேண்டும். நாம் 220 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயித்து விட்டோம் என்றால் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி அதிரடியாக ஆடுவார்கள் என்பது தெரியும்.

    டுபிளசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் தொடர்ந்து விளையாடி இருந்தால் அவர்கள் 18-வது ஒவரின் முடிவிலே போட்டியை வென்றிருப்பார்கள். நான் விக்கெட் கீப்பராக களத்திற்கு பின்னால் நின்று ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கவனித்துக் கொண்டு இருந்தேன்.

    நான் போட்டியின் முடிவு குறித்து யோசிக்காமல் ஆட்டத்தில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும்? பந்துவீச்சாளர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தான் யோசிப்பேன். இதனை நாம் சரியாக செய்தால் முடிவுகள் நமக்கு தகுந்தாற்போல் வரும். எங்கள் அணியில் இளம் பந்துவீச்சாளர்கள் அதிக அளவு இருக்கிறார்கள். நிச்சயமாக இது போன்ற சூழலில் பந்து வீசும் போது அவர்களுக்கு கடினமாக இருக்கும்.

    இருப்பினும் எங்கள் வீரர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். பிராவோ கீழ் அவர்கள் பயிற்சி செய்யும் போது இளம் பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையை பெறுவார்கள் என நம்புகிறேன்.

    இவ்வாறு டோனி கூறினார்.

    • 20 ஓவரை அவர்களால் குறிப்பிட்ட நேரத்தில் வீச முடியவில்லை.
    • லக்னோ அணி வீரர் அவேஷ் கான் நடுவரால் எச்சரிக்கப்பட்டார்.

    பெங்களூர்:

    ஐ.பி.எல். போட்டியில் லக்னோவுக்கு எதிரான போட்டியில் நேற்றைய பெங்களூர் அணி வீரர்கள் மெதுவாக பந்து வீசினர். 20 ஓவரை அவர்களால் குறிப்பிட்ட நேரத்தில் வீச முடியவில்லை. அதிக நேரம் எடுத்துக் கொண்டனர். இதற்காக பெங்களூர் அணி கேப்டன் டுபெலிசுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதேபோல லக்னோ அணி வீரர் அவேஷ் கான் நடுவரால் எச்சரிக்கப்பட்டார். வெற்றி பெற்றதும் அவர் ஹெல்மட்டை மைதானத்தில் வீசினார். இதற்காக அவர் எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளார்.

    • ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக பாப் டூ பிளிசிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.
    • பாப் டூ பிளிசிஸ் கடந்த சீசனில் பெங்களூரு அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென்ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கும் இந்த போட்டியையொட்டி உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

    அந்த வகையில் ஜோகன்னஸ்பர்க்கை அடிப்படையாக கொண்டு உதயமாகும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிர்வாகம் வாங்கியுள்ளது. தற்போது அணிக்கு ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் என பெயர் வைக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக பாப் டூ பிளிசிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த அவர், அந்த லீக்கில் மிக முக்கியத்துவம் வாய்ந்த வீரர் ஆவார். மேலும் சிஎஸ்கே நிர்வாகத்துடன் நல்ல நட்பில் இருப்பதால், அவர் தான் ஜோகனஸ்பர்க் அணியின் கேப்டனாக இருப்பார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதே போன்று சிஎஸ்கே அணிக்காக விளையாடிய இம்ரான் தாஹிர், டுவைன் பிரிட்டோரியஸ், பிராவோ ஆகியோர் ஜோகனஸ்பர்க் அணிக்கும் விளையாட வாய்ப்பு உள்ளது. இதனிடையே, ஜோகனஸ்பர்க் அணியை தயார்படுத்தும் பணியை தோனி தான் மேற்கொள்வார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த அணிக்கும் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக விளங்கிய பாப் டூ பிளிசிஸ் கடந்த ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ஜிம்பாப்வேயிற்கு எதிரான முதல் டி20 போட்டியின்போது டு பிளிசிஸ் டுமினியை டாஸ் சுண்டச் செய்து அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கினார். #SAvZIM
    தென்ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    முதல் டி20 போட்டி கடந்த 9-ந்தேதி கிழக்கு லண்டனில் நடைபெற்றது. பொதுவாக கிரிக்கெட் போட்டியின்போது போட்டியை நடத்தும் அணியின் கேப்டன் டாஸ் சுண்ட, வெளிநாட்டு அணி கேப்டன் ஹெட் அல்லது டெய்ல் என டாஸ் கேட்பார்.

    தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக இருக்கும் டு பிளிசிஸ் கடந்த ஆறு போட்டிகளில் டாஸ் தோற்றுள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர், மாறுதலுக்காக ஆடும் லெவன் அணியில் இடம் பெறாத டுமினியை டாஸ் சுண்ட அழைத்தார். டுமினி டாஸ் சுண்ட ஜிம்பாப்வே அணி கேப்டன் என்ன விழ வேண்டும் என்ற விருப்பதை தெரிவித்தார்.

    இதில் டு பிளிசிஸ் டாஸ் வென்றார். பொதுவாக ஐசிசி போட்டி நடுவர் பார்வையில் டாஸ் சுண்டப்படும். கேப்டன் வரமுடியாத நிலை ஏற்பட்டால் துணைக் கேப்டன் டாஸ் சுண்டலாம்.

    ஆனால் டு பிளிசிஸ் டுமியை வைத்து டாஸ் சுண்ட வைத்தார். இதுகுறித்து டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘நான் என்ன செய்தனோ, அதை விரும்புகிறேன். டி20 கிரிக்கெட்டில் சில சுவராஸ்யமான வேடிக்கைகள் நிகழ வேண்டும். அது இங்கே இருந்து தொடங்கியுள்ளது’’ என்றார்.
    இலங்கையில் ஸ்டெயின், பிளாண்டர், ரபாடா ஆகியோர் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்துவார்கள் என டு பிளிசிஸ் கூறியுள்ளார். #SLvSA
    தென்ஆப்பிரிக்கா அணி இலங்கை சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதலில் இரண்டு டெஸ்ட், அதன்பின் ஐந்து ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கு முன் வரும் 7-ந்தேதி இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் 12-ந்தேதி தொடங்குகிறது.

    சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இலங்கை ஆடுகளத்திலும் எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் சாதிப்பார்கள் என்று டு பிளிசிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘நாங்கள் எந்த நாட்டில், எந்த சூழ்நிலையில் விளையாடுகிறோம் என்பது பெரிய விஷயம் அல்ல. எங்களுடைய மிகப்பெரிய பலமே வேகப்பந்து வீச்சுதான். குறிப்பாக நாங்கள் டேல் ஸ்டெயின், ரபாடா, பிளாண்டர் ஆகிய தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை பெற்றுள்ளோம். இவர்கள் எப்போதுமே விக்கெட் வீழ்த்தும் பவுலர்கள் ஆவார்கள்.



    எந்தவொரு சூழ்நிலையில் சிறப்பாக பந்து வீச முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர். ஆசியக் கண்டத்தில் டேல் ஸ்டெயின் சிறப்பான சாதனையை படைத்துள்ளார். ரபாடா தங்கம். இவரால் எதையும் செய்ய இயலும். மேலும் கேஷவ் என்ற சுழற்பந்து வீச்சாளரை வைத்துள்ளோம்.

    ஆடுகளம் மிகவும் மோசமாக இருந்தால் இரண்டு சுழற்பந்து வீச்சாளர் குறித்து யோசிப்போம்’’ என்றார்.
    ×