search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fancy number"

    • டிஎஸ்-09-9999 என்ற நம்பருக்கு கடும் போட்டி நிலவியது.
    • இந்த எண்ணுக்கு மொத்தம் 11 பேர் போட்டியிட்டனர்.

    ஐதராபாத்:

    எளிய முறையில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் பேன்சி நம்பர் கொண்ட நம்பர் பிளேட்களை வாங்குகின்றனர்.

    இந்த வகையிலான பேன்சி நம்பர் அவற்றின் இலக்கங்கள், எழுத்துக்களின் வரிசைகளுக்காக தேர்வு செய்யப்படுகின்றன. இவை தனிப்பட்ட விருப்பத் தேர்வுகள், அதிர்ஷ்ட எண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன.

    இந்நிலையில், இந்தியாவின் தெலுங்கானாவில் ஒருவர் ரூ.25 லட்சம் செலவு செய்து டிஎஸ்-09-9999 என்ற பேன்சி நம்பரை வாங்கினார்.

    பேன்சி பதிவு எண்கள் பெறுவதற்கான இணையவழி ஏலத்தை தெலுங்கானா சாலை போக்குவரத்து ஆணையம் நடத்தியது. அப்போது டிஎஸ்-09-9999 என்ற நம்பருக்கு கடும் போட்டி நிலவியது. மொத்தம் 11 பேர் இதில் போட்டியிட்டனர்.

    இறுதியாக, கோடீஸ்வரர் ஒருவர் தனது விலையுயர்ந்த காருக்காக இந்த எண்ணை 25,50,002 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.

    தெலுங்கானாவில் இதுவரை அதிக விலை கொடுத்து வாங்கிய பேன்சி நம்பர் இதுதான் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜெய்ப்பூரை சேர்ந்த வியாபார தனது ஜாகுவார் காருக்கென ஃபேன்ஸி நம்பரை பெற பல லட்சங்களை செலவிட்டிருக்கிறார்.
    ஜெய்ப்பூர்:

    ஜெய்ப்பூரை சேர்ந்த வியாபாரியான ராகுல் தனேஜா தான் விரும்பிய ஃபேன்ஸி நம்பரை பெற ரூ.16 லட்சம் கொடுத்திருக்கிறார்.

    வியாபாரியான இவர் தனது புத்தம் புதிய ஜாகுவார் XJ L காருக்கான ஃபேன்ஸி நம்பரை வாங்க ரூ.16 லட்சம் செலவிட்டிருக்கிறார். இந்தியாவில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள ஜாகுவார் காருக்கான ஃபேன்ஸி நம்பரை வாங்க இவர் 1.5 மாதங்கள் காத்திருந்ததாக தெரிவித்தார்.

    மார்ச் 25-ம் தேதி புதிய ஜாகுவார் காரை வாங்கிய ராகுல் ராஜஸ்தானில் ஃபேன்ஸி நம்பருக்காக அதிகம் செலவிட்டவர்களில் முதலிடத்தில் இருக்கிறார். 37 வயதான ராகுல் தனேஜா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும் வியாபாரம் செய்து வருகிறார். புதிய ஜாகுவார் காருக்கு 1 என்ற எண் பெற முடிவு செய்த ராகுல் தான் எல்லாவற்றிலும் முதலிடத்தில் இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார்.

    1996-ம் ஆண்டு ராகுல் வாங்கிய முதல் ஸ்கூட்டர் ‘RJ 14 23M 2323' என்ற பதிவு எண் கொண்டிருந்தது. அன்று முதல் இன்று வரை இவர் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களின் எண் 1 ஆக இருக்க வேண்டும் என முடிவு செய்தார். "நான் செய்யும் அனைத்திலும் முதலிடத்தில் இருக்க விரும்புகிறேன். எனது நிறுவனமும் இந்தியாவில் முதலிடத்திற்கு கொண்டு வருவேன்." என அவர் தெரிவித்தார்.



    புத்தம் புதிய ஜாகுவார் தவிர தனேஜாவிடம் பிஎம்டபுள்யூ 5-சீரிஸ் கார் ஒன்றும் இருந்தது. இந்த காரின் எண் RJ 14 CP 0001 பதிவு எண் கொண்டுள்ளது. இதற்கும் தனேஜா ரூ.10.31 லட்சம் செலவிட்டிருக்கிறார். இதன்பின் தனேஜா பிஎம்டபுள்யூ 7-சீரிஸ் மாடலுக்கு அப்டேட் செய்து கொண்டு பழைய நம்பரை பெற்று கொண்டார். 

    இத்துடன் RJ 20 CB 0001 என்ற பதிவு கொண்ட ஒற்றை காரணத்திற்காக ஸ்கோடா லாரா மாடலை இவர் வாங்கியதாக தெரிவித்துள்ளார். தனது 18 வயது வரை பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வந்த நிலையில், பின் மாடலிங் செய்ய துவங்கி அத்துறையில் வெற்றி பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டிருக்கிறார். 

    இது குறித்து அவர் கூறும் போது "என் வாழ்க்கையில் நான் பல கஷ்டங்களை சந்தித்துள்ளேன் - இன்று என்னிடம் பணம் இருக்கிறது, இதை கொண்டாட விரும்புகிறேன்." என தெரிவித்துள்ளார்.
    ×