search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer attack"

    • கிராம சபை கூட்டத்தில் விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலாளரின் ஆதரவாளர் கைது செய்யப்பட்டார்.
    • இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் குளம் ஊராட் சிக்கு உட்பட்ட கங்கர் குளத்தில் காந்தி ஜெயந்தியை யொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஊராட்சி செயலாளரின் பதவி காலம் குறித்து விவசாய சங்க பிரதிநிதி அம்மையப்பன் கேள்வி எழுப்பினார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி செயலாளர் தங்க பாண்டியன், அம்மை யப்பனை காலால் எட்டி உதைத்தார். அவருக்கு ஆதரவாக தேவேந்திரபுரத்தை சேர்ந்த ராசு (42) என்பவர் அவரது கண்ணத்தில் அறைந்தார்.

    மான்ராஜ் எம்.எல்.ஏ., வட்டார வளர்ச்சி அலுவலர் முன்பாக இந்த சம்பவம் நடந்ததால் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதையடுத்து தங்க பாண்டியனின் ஊராட்சி செயலாளர் பதிவியில் இருந்து பணி யிடை நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டார். இந்த சம்பவம் குறித்து வன்னி யம்பட்டி போலீசில் அம்மையப்பன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து தங்கபாண்டியன் மற்றும் ராசுவை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ராசுவை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். ேமலும் தலைமறைவாக உள்ள தங்கபாண்டியனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை சேர்ந்தவர்கள் ராமலிங்கம் - கிறிஸ்டோபர் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
    • மஞ்சுவிளையில் உள்ள கலையரங்கம் அருகே வந்த போது 5 பேர் சேர்ந்து ராமலிங்கத்தை வழிமறித்து கம்பால் தாக்கினர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை காமராஜர் நகரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது20). விவசாயி. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமலிங்கத்தின் உறவினர் ஆறுமுகம் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மஞ்சுவிளையை சேர்ந்த கிறிஸ்டோபர் விபத்தை ஏற்படுத்துவது போல் வந்தார்.

    இதையடுத்து ஆறுமுகம் அவரிடம் தட்டி கேட்டார். இதனால் அவர் ஆறுமுகத்தை அவதூறாக பேசினார். இதுபற்றி ஆறுமுகம், ராமலிங்கத்திடம் கூறினார், இதனைதொடர்ந்து ராமலிங்கம், கிறிஸ்டோபரிடம் போனில் தொடர்பு கேட்டு ஆறுமுகத்தை அவதூறாக பேசியது பற்றி தட்டி கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று ராமலிங்கம் மஞ்சுவிளையில் உள்ள கலையரங்கம் அருகே வந்த போது, கிறிஸ்டோபர், மஞ்சுவிளையை சேர்ந்த தனுஷ், தினேஷ், பீட்டர், விக்னேஷ் ஆகிய 5 பேரும் சேர்ந்து ராமலிங்கத்தை வழிமறித்து கம்பால் தாக்கினர்.

    இதனை தடுக்க வந்த அவரது உறவினர்கள் கோபாலகிருஷ்ணன் மகன் பென்சிராஜா, மனைவி ரோஸ்லின் ஆகியோரையும் தாக்கினர். தாக்குதலில் காயமடைந்த ராமலிங்கம், பென்சிராஜா, ரோஸ்லின் ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கிறிஸ்டோபர் உள்பட 5 பேரையும் தேடி வருகின்றனர்.

    சங்கராபுரம் அருகே விவசாயியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே காட்டுஎடையார் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது28). விவசாயி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மனைவி அமுதா என்பவருக்கும் இடையே பொதுகிணற்றில் தண்ணீர் இறைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அமுதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிவசக்தி, சாந்தி, கலியன் ஆகியோர் சேர்ந்து ஜெயராமனை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார், அமுதா உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி அருகே பணத் தகராறில் விவசாயி தாக்கியதால் டிராக்டர் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கோபி:

    கோபி அடுத்த லா.தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 39) டிராக்டர் டிரைவர். போடி சின்னம் பாளையத்தை சேர்ந்த விவசாயி சுந்தரம் என்பவரிடம் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்தார்.

    கடந்த 9-ந் தேதி தனது டிராக்டரை ஓட்டி வந்த சிவகுமாரிடம் டிராக்டர் ஓட்டிய வகையில் பாக்கி பணம் ரூ.4 லட்சம் தர வேண்டும் எப்போது தருவாய்? என சுந்தரம் கேட்டாராம். இது தொடர்பாக அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு முத்தியது. இதில் ஆத்திரம் அடைந்த சுந்தரம் சிவக்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் டிராக்டர் டிரைவர் சிவக்குமார் மனம் உடைந்த நிலையில் இருந்தார். கடந்த 11-ந் தேதி அவர் திடீரென வி‌ஷம் குடித்தார். அவரை சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக சிவகுமார் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சிவகுமார் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இது குறித்து கோபி போலீசார் சுந்தரம் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாபநாசம் அருகே கடன் தகராறில் விவசாயியை தாக்கிய ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே மணப்படுகை கிராமம் காலனி தெருவில் வசித்து வருபவர் சாமிநாதன் (வயது 33). விவசாயி. இவர் அதே கிராமத்தை சேர்ந்த மாதவன் என்பவரிடம் ரூ.11 ஆயிரத்து 500 கடன் பெற்றிருந்தார். இந்த கடனில் ரூ.10 ஆயிரம் வரை செலுத்திவிட்டார். மீதி ரூ.1500 தராததால் மாதவன் குடும்பத்தை சேர்ந்தவர்களான கல்யாண ராமன், ஜானகிராமன், ரகுராமன், ரகுநாதன் ஆகிய 4 பேரும் சேர்ந்து சாமிநாதன் மற்றும் அவரது குடும்பத்தினரை அடித்து உதைத்து தாக்கியுள்ளனர்.

    இதில் சாமிநாதன் கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ் பெக்டர் நாகரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் வழக்குபதிவு செய்து கல்யாணராமன் வயது 25 என்பவரை கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் சிவக்குமார் கல்யாணராமனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மூவரையும் தேடி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகே விவசாயியை குடிபோதையில் வெட்டிய கும்பல் கைது செய்யப்பட்டனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே தர்மராஜபுரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் செல்வம். கால்நடைகளுக்கு தீவணம் பறிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்புறமாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர்.

    குடிபோதையில் இருந்த அவர்கள் பைக்கை தாறு மாறாக ஓட்டி செல்வத்தின் மீது மோதி உள்ளனர். இதனை அவர் தட்டி கேட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் செல்வத்தை சரமாரியாக தாக்கியது. பின்பு மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டினர். இதில் செல்வம் படுகாயம் அடைந்தார்.

    இது குறித்து கடமலைக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 வாலிபர்களையும் பிடித்து விசாரித்ததில் அவர்கள் பாலகோம்பையை சேர்ந்த கவி, சரவணன் மற்றும் கோம்பையை சேர்ந்த கருப்பசாமி என தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    தவளக்குப்பத்தில் நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய மற்றொரு விவசாயியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அரியாங்குப்பம்:

    தவளக்குப்பம் ராம்தாஸ் நகரை சேர்ந்தவர் ரவி என்ற கோவிந்தராஜ் (வயது 52). இவருக்கு சொந்தமாக இடையார் பாளையம் பழைய பாலம் அருகே நிலம் உள்ளது. இவருக்கும், இவரது பக்கத்து நிலத்தை சேர்ந்த நோணாங்குப்பம் செந்தில்குமாருக்கும் ஏற்கனவே நிலத்தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று ரவி தனது நிலத்துக்கு சென்றார். அப்போது செந்தில்குமார் தனது நிலத்தின் வரப்பில் எப்படி நடந்து வரலாம்? என கேட்டு ரவியிடம் தகராறு செய்தார்.

    இதில், இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் தகாத வார்த்தைகளால் திட்டி ரவியை சரமாரியாக தாக்கினார்.

    இதில், ரவிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து செந்தில்குமாரை தேடி வருகிறார்கள்.

    ×