என் மலர்
நீங்கள் தேடியது "farmer suicides"
- தென்மேற்கு பருவமழை 20.7 சதவீதம் குறைவாக பெய்துள்ளது
- வழக்கமாக சராசரியாக 57.4 சதவீத மழை பெய்ய வேண்டும்
மகாராஷ்டிரா மாநிலம் மரத்வாடா மண்டலத்தில் இந்த வருடம் இதுவரை 685 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். பீட் மாவட்டத்தில் மட்டும் 185 பேர் தற்கொலை செய்துள்ளனர். இந்த மாவட்டம் மகாராஷ்டிரா மாநில விவசாயத்துறை மந்திரியாக இருக்கும் தனஞ்செய் முண்டே மாவட்டமாகும்.
மத்திய மகாராஷ்டிராவின் வறண்ட மண்டலமான மரத்வாடாவில் அவுரங்காபாத், ஜல்னா, பீட், பர்பானி, நன்டெட், ஓஸ்மனாபாத், ஹிங்கோலி, லதுர் ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.
ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 31 வரை இந்த தற்கொலைகள் நடந்துள்ளன. இதில் 294 பேர் பருவமழை மாதங்களான ஜூன் முதல் ஆகஸ்ட் மாதத்தில் தற்கொலை செய்துள்ளனர்.
மரத்வாடா மண்டலத்தில் தற்போது 20.7 சதவீத மழை குறைவாக பெய்துள்ளது. செப்டம்பர் 11-ந்தேதி வரை 45.54 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 57.4 சதவீத மழை பெய்ய வேண்டும். ஆனால் தற்போது குறைவாக பெய்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தனஞ்ஜெய் முண்டே, கடந்த ஜூலை மாதம் ஏக்நாத் தலைமையிலான மந்திரிசபையில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓஸ்மானாபாத்தில் 113 விவசாயிகள், நன்டெட்டில் 110 விவசாயிகள், அவுரங்காபாத்தில் 95 விவசாயிகள், பர்பானியில் 58 விவசாயிகள், லுதுர் மாவட்டத்தில் 51 விவசாயிகள், ஜல்னாவில் 50 விவசாயிகள், ஹிங்கோலியில் 22 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.