search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fee details"

    • 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • இணைப்பு வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 4-வது குடிநீர் திட்டத்தின் சோதனை ஓட்டத்தில் குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. 8 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் என்று இருந்ததை 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 4-வது குடிநீர் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீடு, தொழிற்சாலை, வணிக வளாகங்களுக்கு குழாய் இணைப்பு வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. விடுபட்ட பகுதிகளிலும் இந்த மாத இறுதிக்குள் பணிகள் தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே குடிநீர் இணைப்பு பெற்றவர்கள் மாநகராட்சிக்கு டெபாசிட் தொகை மற்றும் குழாய் இணைப்பு பணிக்கான தொகையை செலுத்தி இணைப்பு பெற்று பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் புதிய குடிநீர் திட்டத்தில் குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டு விட்டது. புதிய குடிநீர் குழாய் இணைப்பை பெறுவதற்கான கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தின் இணைப்பு கட்டணத்தை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெளிவான விளக்கத்தை அறிவிப்பாக வெளியிட வேண்டும். இடைத்தரகர்கள் மூலமாக மக்களிடம் அதிகப்படியான கட்டணங்கள் வசூலிக்கப்படுவதால் மாநகராட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது என்று மாமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி கோரிக்கை வைத்தார்.

    இதைத்தொடர்ந்து ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் பேசும்போது, புதிய குடிநீர் குழாய் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை திட்ட இணைப்புக்கான கட்டண விவரங்கள் குறித்து பரிசீலித்து விரைவில் இறுதி செய்யப்படும். அதன்பிறகு கட்டண விவரங்கள் மக்களுக்கு தெளிவாக தெரிவிக்கப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் கட்டண விவரங்கள் வெளியிடப்படும் என்றார்.

    ×