search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Female Child death"

    9 மாத பெண் குழந்தை மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ள நிலையில் சிறுமியின் சகோதரியும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு இதில் சிலர் பலியாகி உள்ளனர். இதையொட்டி தமிழகம் முழுவதும் தீவிர தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்திலும் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் இல்லாவிட்டாலும் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    ஈரோடு கோபி, சத்தியமங்கலம், அந்தியூர், பவானி உள்பட பல பகுதிகளில் பலர் வி‌ஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் சுகாதாரதுறை சார்பிலும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே 9 மாத பெண் குழந்தை மர்ம காய்ச்சலுக்கு பலியாகி விட்டது.

    இந்த குழந்தையின் பெயர் நைனிகா. அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான மாரிமுத்து - தமிழரசி ஆகிய தம்பதியினரின் மகள் ஆவாள்.

    கடந்த 4 நாட்களுக்கு முன் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அந்தியூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட குழந்தை நைனிகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு வீட்டுக்கு திரும்பினர்.

    இந்த நிலையில் குழந்தைக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்படவே மீண்டும் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். கதறி அழுதனர்.

    இந்த நிலையில் அந்த தம்பதியினருக்கு மீண்டும் ஒரு பேரிடியாக பலியான குழந்தை நைனிகாவின் அக்கா இந்துமதி (வயது 3)க்கும் காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சலால் அவதிப்பட்ட சிறுமி இந்துமதியை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் அந்தியூர் ஒலகடம் பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×