என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Female Space Walk"
- ஜேரட் ஐசக்மேன் உள்ளிட்ட 4 பேர் புளோரிடா விண்வெளி மையத்தில் இருந்து விண்வெளி புறப்பட்டுச் சென்றனர்.
- விண்வெளி பயணம் வரலாற்றில் இதுவரை யாரும் செல்லாத உயரத்திற்குச் சென்று புதிய சாதனை படைத்தனர்.
வாஷிங்டன்:
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கும், பிரபல தொழிலதிபர் ஜேரட் ஐசக்மேனும் இணைந்து பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் போலரிஸ் டான் எனப்படும் தனியார் விண்வெளி பயண திட்டத்தை வடிவமைத்துள்ளனர்.
இத்திட்டத்தின்படி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் ஜேரட் ஐசக்மேன் உள்ளிட்ட 4 பேர் புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
டிராகன் விண்கலம் புறப்பட்ட 15 மணி நேரத்தில் சுமார் 1,400 கி.மீ. உயரத்திற்குச் சென்று, 50 ஆண்டுகால விண்வெளி பயண வரலாற்றில் இதுவரை யாரும் செல்லாத உயரத்திற்குச் சென்று புதிய சாதனை படைத்தனர்.
டிராகன் விண்கலத்தில் இருந்து ஜேரட் ஐசக்மேன் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் பொறியாளர் சாரா கில்லி ஆகியோர் வெளியேறி வந்து ஸ்பேஸ் வாக் எனப்படும் விண்வெளி நடையை மேற்கொண்டனர். அப்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்துள்ள கவச உடைகள் கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறதா என்பதை அவர்கள் பரிசோதனை செய்தனர்.
இந்தப் பயணத்தின்போது 30 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில், தனியார் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் பூமிக்கு திரும்பியது.
புளோரிடா கடற்கரை அருகே அந்த விண்கலம் பாராசூட் மூலம் கடலில் விழுந்தது. அதில் இருந்த 4 தனியார் விண்வெளி வீரர்களும் படகு மூலம் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். இதுதொடர்பான காட்சிகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இவர்கள் பராமரிப்புப் பணிகள் மற்றும் புதிய கட்டுமானப்பணிகளுக்காக சில மணி நேரம் விண்வெளி ஆய்வு மையத்தை விட்டு வெளியே சென்று, விண்வெளியில் மிதந்து கொண்டு வேலை செய்வது வழக்கம்.
இதுவரை இந்தப் பணிகளை பெண்கள் மட்டுமே செய்தது கிடையாது. அதாவது ஆண் விண்வெளி வீரர்களின் துணையுடன்தான் விண்வெளி வீராங்கனைகள் விண்வெளி ஆய்வு மையத்தை விட்டு வெளியே செல்வது வழக்கம்.
இந்த நிலையில், இந்த மாதத் தொடக்கத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் மார்ச் 29-ந் தேதி முழுமையாக பெண்கள் மட்டுமே இணைந்து விண்வெளி நடையை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்காக கிறிஸ்டினா கோச் மற்றும் அன்னே மெக்லைன் என்ற 2 விண்வெளி வீராங்கனைகளும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், விண்வெளியில் பயன்படுத்தும் ஆடை பற்றாக்குறையின் காரணமாக வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வை நாசா நிறுவனம் ரத்து செய்துவிட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்