search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Female Youtuber"

    • அதிர்ச்சியடைந்த அந்த பெண் யூ-டியூப்பர், 14 ஆயிரம் ரூபாயை கூகுள்-பே மூலம் அனுப்பியிருக்கிறார்.
    • வேறு யாரிடமும் மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    ஹனி டிராப் என்பது ஒருவரை கவர்ந்து மயக்கி அவரின் ரகசிய தகவல்களை அறிந்துகொள்வதே ஆகும். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த முறை வழக்கு விசாரணைக்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் நவீன காலத்தில் இந்த முறையை சில மோசடி ஆசாமிகள் கடைபிடித்தது பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதாவது, யாராவது ஒரு நபரின் பலவீனத்தை தெரிந்துகொண்டு, அதன்மூலம் அவரை ஆசை வார்த்தைகள் மூலம் மயக்கி, அவரிடமிருந்து பணம் மற்றும் பொருட்களை அபகரித்து விடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் அதிகளவில் நடக்கிறது.

    இந்நிலையில் கேரளாவில் அதேபோன்று ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதுவும் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான யூ-டியூப்பரிடமே ஒரு கும்பல் ஹனி டிராப் முறையில் கார் மற்றும் பணத்தை பறித்த சம்பவம் நடந்துள்ளது.

    அந்த கும்பலை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அது பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மாஞ்சேரி பகுதியை சேர்ந்த பெண் யூ-டியூப்பர் ஒருவர் குடும்ப ஆலோசகராக இருக்கிறார். அது தொடர்பான வீடியோக்களை யூ-டியூப்களில் வெளியிட்டு வந்திருக்கிறார். அதில் தனது தொடர்பு எண்ணையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த யூ-டியூப்பரின் செல்போனுக்கு இடுக்கி பகுதியை சேர்ந்த அக்க்ஷயா என்பவர் போன் செய்துள்ளார். அப்போது தனக்கு கவுன்சிலிங் தேவை என்று பெண் யூ-டியூப்பரிடம் தெரிவித்து கூத்தாட்டுக்குளத்தில் உள்ள ஒரு அறைக்கு அழைத்திருக்கிறார்.

    அதன்படி பெண் யூ-டியூப்பரும் அந்த அறைக்கு சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு அங்க அக்ஷயா மட்டுமின்றி, இடுக்கி சந்தன்பாறையை சேர்ந்த அதிரா(28) என்ற இளம்பெண்ணும், வட்டப்பாறை பகுதியை சேர்ந்த அபிலாஷ்(28), கொல்லம் கைதோடு பகுதியை சேர்ந்த அல்அமீன்(23) என்ற 2 வாலிபர்களும் இருந்துள்ளனர்.

    அவர்கள் பெண் யூ-டியூப்பருக்கு குடிக்க ஜூஸ் கொடுத்துள்ளனர். அதனை குடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கினார். அதனை பயன்படுத்தி பெண் யூ-டியூப்பரை அவர்கள் நிர்வாணப்படுத்தி படம் எடுத்துள்ளனர். பின்பு சிறிதுநேரம் கழித்து பெண் யூ-டியூப்பர் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

    அப்போது அவர்கள் 4 பேரும் தங்களிடம் இருந்த நிர்வாண படத்தை காண்பித்து பணம் தருமாறும், இல்லையென்றால் அந்த நிர்வாண படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் யூ-டியூப்பர், 14 ஆயிரம் ரூபாயை கூகுள்-பே மூலம் அனுப்பியிருக்கிறார்.

    அதனை பெற்றுக் கொண்ட அவர்கள், பெண் யூ-டியூப்பரின் ரூ2.5 லட்சம் மதிப்புள்ள காரையும் பறித்துக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து அந்த பெண் யு-டியூப்பர், கூத்தாட்டுக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    பெண் யூ-டியூப்பரிடம் பணம் மற்றும் காரை பறித்தவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் அவர்களது இருப்பிடத்தை செல்போன் டவர் மூலம் கண்டறிந்த போலீசார், அங்கு சென்று அக்ஷயா, அதிரா, அபிலாஷ், அல்அமீன் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.

    அவர்கள் இதுபோன்று வேறு யாரிடமும் மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×