என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "fencing"
- டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
- வாள்வீச்சு போட்டியின் முன்னேற்றத்திற்கு முக்கிய மைல் கல்லாக அமையும் என்று கருதப்படுகிறது.
புதுடெல்லி:
இந்திய வாள்வீச்சு சம்மேளனம் சார்பில் முதலாவது எப்.ஐ.இ. பாயில் பிரிவு பெண்களுக்கான சர்வதேச சேட்லைட் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.
இந்தப்போட்டி இன்றும், நாளையும் 2 நாட்கள் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
பெண்களுக்கான பாயில் பிரிவு வாள்வீச்சு போட்டியில் உலகம் முழுவதும் இருந்து 58 வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்த சர்வதேச போட்டி இந்தியாவில் வாள்வீச்சு போட்டியின் முன்னேற்றத்திற்கு முக்கிய மைல் கல்லாக அமையும் என்று கருதப்படுகிறது.
சர்வதேச சேட்லைட் பாயில் பிரிவு வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 6 வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். அவர்கள் பெயர் விவரம்:-
விபுஷா, ஜாய்ஸ் அஷிதா, சுவர்ணபிரபா, திவ்ய தர்ஷினி (4 பேரும் சென்னை) ஜெனிஷா (கன்னியாகுமரி), கனக லட்சுமி (சேலம்).
இந்திய அணிக்கு 6 தமிழக வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி சேர்மன் சுப்பையா தனசேகரன், கன்வீனர் வி.கருணா மூர்த்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
- இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
- நேற்று முன்தினம் ஜூலை 29 சுற்று 16 போட்டியில் தென்கொரிய வீராங்கனை ஜியோன் ஹயோங் [Jeon Hayoung] உடன் மோதினார்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி முதல் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்களது திறமையையும், மன உறுதியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், எகிப்து நாட்டு வாள்வீச்சு [Fencing] வீராங்கனை நாடா ஹபீஸ் [Nada Hafez] 7 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையிலும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"களத்தில் இருந்தது 2 பேர் என்று நினைக்கிறீர்கள். ஆனால் இருந்தது 3 பேர். ஒன்று நான், ஒன்று என் எதிரணி வீராங்னை, மற்றொன்று இந்த உலகத்தை இன்னும் காணாத என் குட்டிக் குழந்தை" என்று தான் கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் தனிநபர் பெண்கள் வாள்வீச்சு போட்டிகளில் முதலில் அமெரிக்க வீராங்கனை எலிஸபத் ட்ரக்கோவ்ஸ்க்கியுடன் விளையாடி வெற்றி பெற்ற நாடா ஹபேஸ் சுற்று 16 க்கு முன்னேறினார்.
நேற்று முன்தினம் ஜூலை 29 சுற்று 16 போட்டியில் தென்கொரிய வீராங்கனை ஜியோன் ஹயோங் [Jeon Hayoung] உடன் மோதிய நாடா ஹபேஸ் 15-7 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் அவரது மன உறுதிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
- 28 வயதான பவானி தேவி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வெரோனிகா வஸ்லேவை எதிர் கொண்டார்.
- பவானி தேவி 15-10 என்ற கணக்கில் வெரோனிகாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.
லண்டன்:
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வாள் வீச்சு பந்தயம் 1950 முதல் 1970 வரை இடம் பெற்று இருந்தது. அதன் பிறகு அந்த போட்டி நீக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து காமன்வெல்த் விளையாட்டு முடிந்த பிறகு காமன் வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி தனியாக நடத்தப்படும்.
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று தொடங்கியது.
எப்பி, பாய்ல், சேபர் பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு போட்டி நடத்தப்படுகிறது. இதே போல ஜூனியர் கேடட், வெடரன் மற்றும் பாரா பிரிவுகளுக்கு வருகிற 16-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.
நேற்று நடந்த சீனியர் பெண்கள் சேபர் பிரிவில் பங்கேற்ற தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கப் பதக்கம் வென்று முத்திரை பதித்தார்.
28 வயதான பவானி தேவி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வெரோனிகா வஸ்லேவை எதிர் கொண்டார். இதில் பவானி தேவி 15-10 என்ற கணக்கில் வெரோனிகாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.
சென்னையை சேர்ந்த பவானி தேவி காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் முதல் முறையாக தங்கம் வென்றுள்ளார். சேபர் தனி நபர் பிரிவில் அவர் 2-வது முறையாக பதக்கம் பெற்றுள்ளார். ஒட்டு மொத்தத்தில் காமன்வெல்த் சாம்பியன் ஷிப்பில் அவர் 4-வது முறையாக பதக்கத்தை கைப்பற்றி உள்ளார்.
பவானி தேவி இதற்கு முன்பு 2009 ஆண்டு மலேசி யாவில் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் சேபர் அணிகள் பிரிவில் வெண்கலமும், 2012-ம் ஆண்டு அமெரிக்கா வில் நடந்த போட்டியில் சேபர் அணிகள் பிரிவில் வெள்ளியும், சேபர் தனி நபர் பிரிவில் வெண்கலமும் பெற்று இருந்தார்.
இது தவிர ஆசிய சாம்பி யன் ஷிப், சேட்டிலைட் சாம்பியன் ஷிப் போட்டியில் பதக்கம் பெற்று சாதனை படைத்து உள்ளார்.
கடந்த ஜூலை மாதம் டோக்கியாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் பங்கேற்ற ஒரே வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி ஆவார். அவர் 2-வது சுற்று வரை முன்னேறி இருந்தார். அங்கேரியில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கால் இறுதிக்கு நுழைந்ததன் மூலம் அவர் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்று இருந்தார்.
காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற பவானி தேவிக்கு பாராட்டுகள் குவிகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்