என் மலர்
நீங்கள் தேடியது "Fertility Effects"
- கர்ப்பப்பை தசைகளில் வரக்கூடிய ஒரு வகை கட்டி.
- ஹிஸ்ட்ரோஸ்கோப்பி எனப்படும் சிகிச்சை மூலம் நீக்கிவிடலாம்.
ஃபைப்ராய்டு என்பது, கர்ப்பப்பை தசைகளில் வரக்கூடிய ஒரு வகை கட்டி. அந்த கட்டியானது எந்த இடத்தில் இருக்கிறது என்பதை வைத்துதான், அது கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்துமா, ஏற்படுத்தாதா என்று சொல்ல முடியும்.
ஒருவேளை இந்த கட்டியானது, கர்ப்பப்பையின் உள்ளே உள்ள எண்டோமெட்ரியம் எனப்படும் சவ்வுப் பகுதியில் இருந்தால் கண்டிப்பாக குழந்தை பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தும். ஏனென்றால் அந்த எண்டோமெட்ரியம் பகுதியில்தான் கருவானது பதியும்.
கட்டி இருக்கும் பட்சத்தில் கரு அங்கே பதிவதிலேயே பிரச்சினை இருக்கும். இதுபோன்ற கட்டியை மருத்துவர்கள் `சப்மியூகோசல் ஃபைப்ராய்டு' என்று சொல்கிறார்கள். இது போன்ற கட்டியை அவசியம் நீக்கியாக வேண்டும். ஹிஸ்ட்ரோஸ்கோப்பி எனப்படும் சிகிச்சை மூலம் இதை நீக்கிவிடலாம்.
அதுவே இந்த கட்டியானது கர்ப்பப்பையின் தசையில் இருந்தால் அதை டாக்டர்கள் `இன்ட்ராமியூரல் ஃபைப்ராய்டு' என்று சொல்கிறார்கள். இந்த கட்டி, கர்ப்பப்பை சவ்வில் இருந்து 2.8 செ.மீ தூரம் தள்ளி இருக்குமானால், அது கர்ப்பத்தை பாதிக்காது.
இந்தநிலையில் கட்டி சிறியதாக இருந்தால் காத்திருந்து பார்க்கலாம். ஆனால், அந்த கட்டியானது 4 செ.மீ அளவுக்கு மேல் பெரிதாக இருக்கும் பட்சத்தில் அதை நீக்கிவிட்டு, பிறகு குழந்தை பெற்றுக்கொள்வதுதான் சரியானது.
கர்ப்பப்பையின் வெளியே உள்ள கட்டியை `சப்சீரோசல் ஃபைப்ராய்டு' என்று சொல்கிறார்கள். பொதுவாக இந்த கட்டி எந்த பிரச்சினையையும் தராது. அதுவே அளவில் பெரிதாகி, கர்ப்பப்பையை அழுத்தினால் அந்த கட்டியையும் நீக்கியாக வேண்டும்.
எனவே, ஃபைப்ராய்டு கட்டி எந்த இடத்தில் உள்ளது என்பதைப் பொறுத்துதான் அது கர்ப்பத்தை பாதிக்குமா இல்லையா என்று டாக்டர்கள் சொல்வார்கள்.