என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "File Nomination"
- வரும் 10-ந்தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.
- வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஜனவரி 12 ஆகும்.
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான சுஷில் குமார் குப்தா, சஞ்சய் சிங் மற்றும் என்.டி. குப்தா ஆகியோரின் பதவிக் காலம் வருகிற 27-ந்தேதியுடன் முடிவடைகிறது.
இதற்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி சார்பாக அந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு சஞ்சய் சிங் மற்றும் என்.டி. குப்தா ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் என்பதால், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் சஞ்சய் சிங் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ளதால் பாதுகாப்புடன் போலீஸ் வாகனத்தில் வந்து மனு தாக்கல் செ ய்தார்.
வருகிற 10-ந்தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஜனவரி 12 என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத் தேர்தலில் குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியானது, பாஜக மூத்த தலைவர் அத்வானி 6 முறை வெற்றி பெற்ற தொகுதியாகும். ஆனால் இந்த முறை போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல், கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமித் ஷா முதல் முறையாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த பொதுக்கூட்டம் முடிந்ததும், அங்கிருந்து ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக புறப்பட்ட அமித் ஷா, காந்திநகர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். அமித் ஷாவின் வேட்பு மனு தாக்கல் கட்சிக்கு வலு சேர்க்கும் என்றும், மாநிலத்தில் 26 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற உதவியாக இருக்கும் என்றும் மாநில பாஜக கருதுகிறது.
குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 4-ம் தேதியுடன் முடிவடைகிறது. #AmitShah #LokSabhaElections2019