என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "film crew"

    • இரண்டு வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
    • கூலி படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. 

    இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் பாடல் க்ளிம்ப்ஸ் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

    கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும், படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

    கூலி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர்.

    இந்தப் படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்தார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்கினார்.

    இந்நிலையில், கூலி படத்தின் புதிய அட்டேட் ஒன்றை நாளை வெளியிடப்படும் என்று படக்குகுழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • டிரோன்கள், காமிராக்கள் உள்ளிட்டவைகளை எடுத்துச் சென்று படப்பிடிப்பு.
    • அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு வனப்பகுதியில் தடை செய்யப்பட்ட இடத்திற்குள் துப்பாக்கிகள், டிரோன்கள், காமிராக்கள் உள்ளிட்டவைகளை எடுத்துச் சென்று படப்பிடிப்பு நடத்திய ஆவண படக்குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுபற்றிய விவரம் வரு மாறு:-

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் அரணாமலை அருகே உள்ள மாப்பிளா தாளமுடி வன மண்ட லத்துக்கு உட்பட்ட பகுதியில் சிலர் உரிய அனுமதி பெறாமல் அத்துமீறி சென்று படப்பிடிப்பு நடத்துவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

    அதன்பேரில் அதிகாரிகள் வினோத், ரிஜேஷ் ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    அப்போது தடை செய்யப பட்ட வனப்பகுதிக்குள் ஆவணப்பட குழுவினர் போலி துப்பாக்கிகள், புகை துப்பாக்கிகள், டிரோன்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்தினர். இதையடுத்து படப்படிடிப்பு நடத்தியவர்களை வனத்துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர்.

    அவர்களிடமிருந்து படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட காமிராக்கள், டிரோன்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், ஆவணப் படங்கள் எடுக்கும் குழுவினர் என்றும், ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

    ஆவணப்படம் எடுப்பதற்காக கேரளா வந்த அவர்கள், இங்குள்ளவர்கள் சிலரின் உதவியுடன் வனப்பகுதிக்குள் சென்று படப்பிடிப்பு நடத்தி இருக்கின்றனர். அவர்கள் சென்ற பகுதி தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் படப்பிடிப்பை நிறுத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிந்து ஆவண பட குழுவினரான ஐதராபாத்தை சேர்ந்த ஹரிநாத், சைதன்ய சாய், ரமேஷ்பாபு, ரேவந்த் குமார், கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீஹரி, அபிராஜ், பவன் பி. நாயர், பிரவீன் ராய், மற்றொரு ஸ்ரீஹரி, சருண் கிருஷ்ணா, அதுல், முகமது அப்துல் மஜீத், சஞ்சல் பிரசாத் உள்ளிட்ட 15 பேரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் ஹரிநாத் என்பவர் தான் ஆவண படத்தின் இயக்குனராக செயல்பட்டுள்ளார். கைதானவர்களின் மீது தடை செய்யப்பட்ட வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து படப்பிடிப்பு நடத்தியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

    • அஜித் சமைத்த பிரியாணியை சாப்பிட்ட படக்குழுவினர் அவரை பாராட்டி மகிழ்ந்தனர்.
    • வருகிற பிப்ரவரி மாதம் வரை விடாமுயற்சி படப்பிடிப்பு நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    துணிவு படத்திற்கு அடுத்ததாக நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மேலும் அர்ஜூன், ஆரவ், பிரியா பவானி சங்கர், ரெஜினா உள்பட பலர் நடித்துள்ளனர்.

    படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. அஜித், திரிஷா பங்கேற்ற ஆக்ஷன் மற்றும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது.

    இந்நிலையில் படப்பிடிப்புக்கு சிறிய இடைவெளி விடப்பட்டு படக்குழுவினர் சென்னை திரும்பினர். மீண்டும் அஜர் பைஜானில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நடிகர் அஜித் அடிக்கடி படப்பிடிப்பில் பட குழுவினருக்கு உணவு சமைத்து விருந்தளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

    அதேபோல் இந்த முறை விடா முயற்சி படக் குழுவினருக்கு தனது கையால் பிரியாணி சமைத்தது மட்டுமின்றி சிக்கன் கிரேவியும் ருசியாக சமைத்து அனைவருக்கும் தனது கையால் உணவு பரிமாறி உள்ளார். அஜித் சமைத்த பிரியாணியை சாப்பிட்ட படக்குழுவினர் அவரை பாராட்டி மகிழ்ந்தனர்.

    முதற்கட்ட படப்பிடிப்பில் கார் சேசிங் காட்சிகள் படமாக்கப்பட்டன. சூட்டிங் இடைவெளியில் அஜித் போட்டோகிராபராக மாறி அனைவரையும் புகைப்படம் எடுத்து மகிழ்வித்து வருகிறார். வருகிற பிப்ரவரி மாதம் வரை விடாமுயற்சி படப்பிடிப்பு நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • இப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவினரை தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு நேரில் வரவழைத்து பாராட்டினார்.
    • படக்குழுவினருடன் ரஜினிகாந்த் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

    கொடைக்கானல் மலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு ''மஞ்சும்மல் பாய்ஸ்' என்ற பெயரில் மலையாள திரைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டது.

    இப்படத்தில் " நண்பர்கள் குழு ஒன்று மலைப்பகுதியில் சுற்றுலா செல்கிறது. அவர்களில் ஒருவர் குணா குகைக்குள் சிக்கி விடுகிறார். அவரை மீட்க போராடும் நண்பர்கள் பற்றியதை பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் காட்சிப் படுத்தி உள்ளனர்.

    இப்படத்தை மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கினார். கடந்த பிப்ரவரி 22-ந் தேதி இப்படம் வெளியானது. அனைத்து மாநில தியேட்டர்களிலும் இப்படம் நன்றாக ஓடி ரூ.200 கோடி வசூலை குவித்து உள்ளது.மேலும் இப்படம் அனைத்து தரப்பிலிருந்தும் பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது.




    தமிழக ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இப்படக்குழுவினர், 'குணா' படத்தின் கதாநாயகன் கமலை சந்தித்து சமீபத்தில் வாழ்த்துகள் பெற்றனர்.

    இந்நிலையில் இப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவினரை தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு நேரில் வரவழைத்து பாராட்டினார்.

    மேலும் இப்படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழுவினருடன் ரஜினிகாந்த் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.அந்த புகைப்படங்கள் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகின்றன.

    இது குறித்து 'மஞ்சும்மல் பாய்ஸ்' படக்குழு தங்களது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் அந்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர். அதில் ''சூப்பர் ஸ்டார்' அவர்களுக்கு நன்றி' என பதிவிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'தங்கலான்' படத்தின் 'பர்ஸ்ட் லுக் போஸ்டர்' ஒன்றையும் படக்குழு வெளியிட்டு பிறந்த நாள் பரிசாக ' கொடுத்து உள்ளது.
    • வருகிற மே, அல்லது ஜூன் மாதம் 'தங்கலான்' படத்தை 'ரிலீஸ்' செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது.

    பிரபல மலையாள நடிகை பார்வதி. 2006- ம் ஆண்டு 'அவுட் ஆப் தி சிலபஸ்' எனும் படத்தில் நடிகையாக அறிமுகமானார். மலையாள முன்னணி நடிகையான பார்வதி 2008- ல் தமிழில் 'பூ' படத்தில் நடித்தார்.

    மேலும் 'சென்னையில் ஒரு நாள்', மரியான், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்கள உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ' தங்கலான்' படத்தில் பார்வதி நடித்து வருகிறார். 

    இப்படத்தை பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கி வருகிறார்.இந்த படத்தில் பிரபல நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். தங்கலான் படத்தில் 'கங்கம்மா' எனும் வேடத்தில் பார்வதி நடித்துள்ளார்.




    சொந்த ஊரான கோழிக்கோடுவில் நடிகை பார்வதி இன்று தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு 'தங்கலான்' படக்குழு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தது.

    இதை யொட்டி மேலும் 'தங்கலான்' படத்தின் 'பர்ஸ்ட் லுக் போஸ்டர்' ஒன்றையும் படக்குழு வெளியிட்டு பிறந்த நாள் பரிசாக 'இன்பஅதிர்ச்சி' கொடுத்து உள்ளது.

    மேலும் நடிகை பார்வதி பிறந்தநாளை யொட்டி ஏராளமான ரசிகர்கள் இணைய தளத்தில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். வருகிற மே, அல்லது ஜூன் மாதம் 'தங்கலான்' படத்தை 'ரிலீஸ்' செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.
    • திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர்.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய பிரசாந்த் , தெலுங்கில் வினய விதய ராமா படத்தில் ராம்சரணுக்கு அண்ணனாக நடித்திருந்தார். அதன்பின் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். 2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.


    இந்நிலையில் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள `அந்தகன்' திரைப்படத்தின் குழுவிற்கு ஜூலை 24-ம் தேதி மிக பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது என்று படக்குழு கூறியுள்ளது. திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    ×