என் மலர்
நீங்கள் தேடியது "final hearing"
- வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு.
- கடும் கட்டுப்பாடுகளுடன் ஆலையை மீண்டும் இயக்குவது தொடர்பாக நிபுணர் குழு.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் இறுதி விசாரணை வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணையின்போது, கடும் கட்டுப்பாடுகளுடன் ஆலையை மீண்டும் இயக்குவது தொடர்பாக நிபுணர் குழுவை அமைக்கலாம் என்ற யோசனை குறித்து ஆலோசிக்க அவகாசம் தேவை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- ரூ.21.29 கோடி கடனை லைகா செலுத்திய நிலையில், விஷால் திருப்பி செலுத்தவில்லை.
- சமரச அதிகாரியை நியமிக்க வேண்டும் என விஷால் தரப்பில் கூறப்பட்டது.
நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. விஷால் வாங்கிய ரூ.21.29 கோடி கடனை லைகா செலுத்திய நிலையில், விஷால் திருப்பி செலுத்தவில்லை என லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் 2021ல் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
அப்போது, வரும் ஜூன் 28ம் தேதி முதல் இறுதி விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணையின்போது, லைகாவிற்கும், விஷாலுக்கும் இடையே உள்ள பிரச்சினைக்கு தீர்வு காண சமரச அதிகாரியை நியமிக்க வேண்டும் என விஷால் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், சமரசத்திற்கு தயார் என விஷால் தரப்பு கூறினாலும், ஆக்கப்பூர்வமாக எதையும் முன்னெடுக்கவில்லை என லைகா தரப்பில் கூறப்பட்டது.
- நயன்தாராவிடம் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் வழக்கு.
- நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மற்றும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனங்களுக்கு பதில் அளிக்கும்படி உத்தரவு.
நடிகை நயன்தாராவின் வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து உருவாக்கப்பட்ட இணைய தொடர் 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' என்ற பெயரில் பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ்-இல் வெளியானது. இந்த ஆவணத் தொடரின் டிரெய்லரில் தனுஷ் தயாரித்து வெளியான "நானும் ரவுடி தான்" படத்தின் காட்சி சில நொடிகள் வரை இடம்பெற்று இருந்தது.
இந்தக் காட்சியை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதாக நயன்தாராவிடம் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் சார்பில் அவரது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். மேலும், நயன்தாராவுக்கு எதிராக தனுஷ்-இன் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும்படி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மற்றும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். இந்த பதில் மனுக்களுக்கு, தனுஷ் தரப்பிலும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கில் இடைக்கால தடை கோரும் மனு மீது ஜனவரி 8-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.
அப்போது, நடிகை நயன்தாரா மீது நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
மலேசியாவில் இருந்து சுமார் 55 ஆயிரம் டன் மணலை ‘ராமியா எண்டர்பிரைசஸ்’ என்ற தனியார் நிறுவனம் இறக்குமதி செய்து தூத்துக்குடி துறைமுகத்தில் வைத்துள்ளது. இதனை பிற மாநிலங்களுக்கு எடுத்துச்செல்ல தமிழக அரசு தடை விதித்தது. எனவே தமிழக அரசே அந்த மணலை கொள்முதல் செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது தமிழக அரசு மணலை விலைகொடுத்து வாங்க ஒப்புதல் அளித்ததால், முழு தொகையையும் ஒரு வாரத்துக்குள் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கு கடந்த அக்டோபர் மாதம் 1-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, மலேசிய மணல் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் ரூ.10 கோடியே 56 லட்சத்துக்கான வரைவோலை நீதிபதிகளிடம் தாக்கல் செய்யப் பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள இறக்குமதி மணலை விற்பனைக்காக வெளியே எடுத்துச்செல்ல தமிழக அரசுக்கு தூத்துக்குடி துறைமுக நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். வழக்கு விசாரணையை 6 வாரங் களுக்கு ஒத்திவைத்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.அப்துல் நசீர் ஆகியோரின் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணை துவங்கியதும் தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி ஆஜராகி தங்கள் தரப்பில் விரிவான இறுதி வாதங்களை முன்வைக்க மேலும் சிறிது அவகாசம் தேவை என நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணையை அடுத்த மாதம்(டிசம்பர்) 7-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.