என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » first test
நீங்கள் தேடியது "first test"
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் பேட் கம்மின்சின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #AUSvSL #PatCummins
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியா - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.
முதல் நாளில் இலங்கை முதல் இன்னிங்சில் 144 ரன்னில் சுருண்டது. பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா, தனது முதல் இன்னிங்சில் லாபஸ்சேக்னே மற்றும் டிராவிஸ் ஹெட்டின் பொறுப்பான ஆட்டத்தால் 323 ரன்னில் ஆல் அவுட்டானது.
இலங்கை சார்பில் வேகப்பந்து வீச்சாளர் லக்மல் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பின்னர் 179 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்சின் மிரட்டலான பந்து வீச்சில் இலங்கை அணி சிக்கியது.
இதனால் இலங்கை அணி 50.5 ஓவரில் 139 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக திரிமானே 32 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், ஜே ரிச்சர்ட்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 40 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற்து. பேட் கம்மின்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். #AUSvSL #PatCummins
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்துள்ளது. #SLvNZ
வெல்லிங்டன்:
இலங்கை அணி நியூசிலாந்தில் பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு டி 20 போட்டியில் விளையாட உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணியின் தனுஷ்கா குணதிலகா, திமுத் கருணரத்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
கருணரத்னே சிறப்பாக ஆடி அரை சதமடித்த அவர் 79 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஆடிய ஏஞ்சலோ மேத்யூஸ் 83 ரன்னிலும் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.
இறுதியில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 87 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 275 ரன்கள் எடுத்துள்ளது. நிரோஷன் டிக்வெலா 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டும், நீல் வாக்னர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். #SLvNZ
சிட்டகாங்கில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தைஜுல் இஸ்லாமின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியை, 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காள தேசம் அபார வெற்றி பெற்றது. #BANvWI #TaijulIslam
சிட்டகாங்:
வெஸ்ட் இண்டீஸ் அணி மற்றும் வங்காள தேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சிட்டகாங் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.
டாஸ் வென்ற வங்காள தேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் மொமினுல் ஹக் சதமடித்து 120 ரன்னில் வெளியேறினார். முதல் இன்னிங்சில் வங்காள தேசம் 324 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷானோன் கேப்ரியல், ஜோமெல் வாரிகன் ஆகியோர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹெட்மயர் மற்றும் டவ்ரிச் ஆகியோர் அரை சதமடித்து வெளியேறினர். வங்காள தேசம் சார்பில் நயீம் ஹாசன் 5 விக்கெட்டும், ஷாகிப் அல் ஹாசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, வங்காள தேசம் தனது இரண்டாவது இன்னிங்சை ஆடியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் துல்லிய பந்து வீச்சில் சிக்கிய வங்காள தேசம் 125 ரன்களில் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் தேவேந்திர பிஷு 4 விக்கெட்டும், ராஸ்டன் சேஸ் 3 விக்கெட்டும், ஜோமல் வாரிகன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆனால் வங்காள தேசம் அணியினரின் அபார பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் அணி 139 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 64 ரன்கள் வித்தியாசத்தில் வங்காள தேசம் அபார வெற்றி பெற்றது.
அந்த அணியின் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளும், ஷாகிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
வங்காள தேச அணியின் மொமினுல் ஹக்குக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த டெஸ்ட் போட்டி நவம்பர் 30ம் தேதி தொடங்கவுள்ளது. #BANvWI #TaijulIslam
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காள தேசம் தனது இரண்டாவது இன்னிங்சில் விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. #BANvWI
சிட்டகாங்:
வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காள தேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சிட்டகாங் நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணியில் மொமினுல் ஹக் பொறுப்புடன் விளையாடி அபாரமாக சதமடித்து 120 ரன்னில் வெளியேறினார். தொடக்க ஆட்டக்காரரான இம்ருல் காயேஸ் 44 ரன்னில் அவுட்டானார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்காள தேசம் அணி 88 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 315 ரன்கள் எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷானோன் கேப்ரியல், ஜோமெல் வாரிகன் ஆகியோர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கிய சிறிது நேரத்தில் வங்காள தேசம் 324 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை
வங்காள தேச பந்து வீச்சாளர்கள் விரைவில் வெளியேற்றினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 88 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.
ஹெட்மயர் மற்றும் டவ்ரிச் ஆகியோரின் அரை சதத்தால் அந்த அணி 200 ரன்களை தாண்டியது. டவ்ரிச் 63 ரன்னுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 64 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வங்காள தேசம் அணி சார்பில் நயீம் ஹாசன் 5 விக்கெட்டும், ஷாகிப் அல் ஹாசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, வங்காள தேசம் அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆடியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் துல்லிய பந்து வீச்சால் வங்காள தேசம் அணியின் தொடக்க விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.
சிட்டகாங் டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காள தேசம் 17 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 55 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெஸ்ட் இண்டீசை விட 133 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. #BANvWI
வெஸ்ட் இண்டீசுடனான முதல் டெஸ்டில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மொமினுல் ஹக்கின் அபார சதத்தால் வங்காள தேசம் அணி 8 விக்கெட்டுக்கு 315 ரன்கள் எடுத்துள்ளது. #BANvWI #MominulHaque
சிட்டகாங்:
வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காள தேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சிட்டகாங் நகரில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற வங்காள தேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இம்ருல் காயேசும், சவுமியா சர்க்காரும் களமிறங்கினர்.
சவுமியா சர்க்கார் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இம்ருல் காயேஸ் 44 ரன்களில் அவுட்டானார்.
அதன்பின்னர் இறங்கிய மொமினுல் ஹக் பொறுப்புடனும் நிதானமாகவும் விளையாடினார். அவர் அபாரமாக சதமடித்து 120 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
இதனால், முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்காள தேசம் அணி 88 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 315 ரன்கள் எடுத்துள்ளது. நயீம் ஹசன் 24 ரன்னிலும், ஹைஜுல் இஸ்லாம் 32 ரன்னிலும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷானோன் கேப்ரியல் 4 விக்கெட்டும், ஜோமெல் வாரிகன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். #BANvWI #MominulHaque
வங்காள தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்துள்ளது. #BANvZIM
ஜிம்பாப்வே அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் வங்காளதேசம் வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஜிம்பாப்வே, வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹட் நகரில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாமில்டன் மசகட்சா, பிரியன் சாரியும் களமிறங்கினர்.
பிரியன் சாரி 13 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய பிரெண்டன் டெய்லர் 6 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய மசகட்சா 52 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சியன் வில்லியம்ஸ் பொறுப்பாக விளையாடி 88 ரன்கள் எடுத்தார். சிக்கந்தர் ராசா 19 ரன்களில் வெளியேறினார்.
இறுதியில், ஜிம்பாப்வே அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்துள்ளது. பீட்டர் மூர் 37 ரன்னுடனும், விக்கெட் கீப்பர் ரெஜிஸ் சக்பவா 20 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.
வங்காளதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டும், அபு ஜெயத், நஸ்முல் இஸ்லாம், மகமதுல்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். #BANvZIM
அபுதாபியில் நடைபெற்று வரும் இரண்டவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணியை 373 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி. #PAKvAUS
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபுதாபியில் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பகர் சமான், சர்ப்ராஸ் அகமதின் பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 282 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டு வீழ்த்தினார்.
இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில்145 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் மொகமது அப்பாஸ் 5 விக்கெட்டு வீழ்த்தினார்.
137 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. பாபர் அசாம் 99 ரன்கள், சர்ப்ராஸ் அகமது 81 ரன்கள் என பொறுப்பாக ஆடியதால் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 400 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
தொடர்ந்து, 537 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.
மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், நான்காவது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர்.
ஆஸ்திரேலியா அணியின் மார்னஸ் லபுஷங்கே 41 ரன்களும், டிராவிஸ் ஹெட் 36 ரன்களும், ஆரோன் பிஞ்ச் 31 ரன்களும் எடுத்தனர்.
மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இறுதியில், ஆஸ்திரேலியா அணி 49.4 ஓவரில் 164 ரன்களில் ஆல் அவுட்டானது. இதையடுத்து, 373 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது பாகிஸ்தான் அணி.
பாகிஸ்தான் சார்பில் மொகமது அப்பாஸ் 5 விக்கெட்டும், யாசிர் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை மொகமது அப்பாஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. #PAKvAUS
அபுதாபியில் நடைபெற்று வரும் இரண்டவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற 537 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான் அணி. #PAKvAUS
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபுதாபியில் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பகர் சமான், சர்ப்ராஸ் அகமதின் பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 282 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டு வீழ்த்தினார்.
இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில்145 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் மொகமது அப்பாஸ் 5 விக்கெட்டு வீழ்த்தினார்.
137 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. பாபர் அசாம் 99 ரன்கள், சர்ப்ராஸ் அகமது 81 ரன்கள் என பொறுப்பாக ஆடியதால் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 400 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
தொடர்ந்து, 537 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.
மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்துள்ளது.
இன்னும் இரண்டு நாள் மீதமிருக்க, ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 491 ரன்கள் தேவை என்பதால் ஆட்டத்தில் சுவாரசியம் கூடியுள்ளது. #PAKvAUS
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் மொகமது அப்பாசின் பந்துவீச்சில் சிக்கிய ஆஸ்திரேலியா அணி 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. #PAKvAUS
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபு தாபியில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அந்த அணியின் பகர் சமான், சர்ப்ராஸ் அகமதின் பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 81 ஓவரில் 282 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், மார்னஸ் லபுஷங்கே 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சை ஆடியது. அந்த அணியில் ஆரோன் பிஞ்ச் 39 ரன்னும், மிட்செல் ஸ்டார்க் 34 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் ஆஸ்திரேலியா அணி 50.4 ஓவரில் 145 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
பாகிஸ்தான் சார்பில் மொகமது அப்பாஸ் 5 விக்கெட்டும், பிலால் ஆசிப் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 137 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. பகர் சமான் 66 ரன்கள் எடுத்து வெளியேறினார். அசார் அலி 54 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். #PAKvAUS
அபுதாபி டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பகர் சமான், சர்ப்ராஸ் அகமது ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 282 ரன்களை எடுத்துள்ளது. #PAKvAUS
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபு தாபியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அந்த அணியின் பகர் சமான், முகமது ஹபீஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 3-வது ஓவரை ஸ்டார்க் வீசினார். இந்த ஓவரில் ஹபீஸ் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து பகர் சமான் உடன் அசார் அலி ஜோடி சேர்ந்தார்.
ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் பாகிஸ்தான் வீரர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். அவர் தொடர்ந்து இரு ஓவர்களில் 4 விக்கெட் வீழ்த்தினார். நாதன் லயன் 6 பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்த பாகிஸ்தான் 57 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.
6-வது விக்கெட்டுக்கு பகர் சமான் உடன் சர்பிராஸ் அஹமது ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அரை சதம் அடித்தனர். 147 ரன்கள் ஜோடி சேர்ந்த நிலையில் பகர் சமான் 94 ரன்னில் அவுட்டானார். அதேபோல், சர்ப்ராஸ் அகமதும் 94 ரன்னில் அவுட்டானார். இறுதியில், பாகிஸ்தான் அணி 81 ஓவரில் 282 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், மார்னஸ் லபுஷங்கே 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, விளையாடிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 20 ரன்கள் எடுத்துள்ளது. #PAKvAUS
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. #INDvWI
ராஜ்கோட்:
ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று காலை தொடங்குகிறது.
சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்திய அணி, போதிய அனுபவம் இல்லாத வெஸ்ட் இண்டீசை எளிதில் வீழ்த்தி விடும் என்பதே நிபுணர்களின் கணிப்பாகும்.
உள்ளூரில் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி முத்திரை பதித்துள்ள இந்திய அணி, அந்த எண்ணிக்கையை 10 ஆக உயர்த்தும் ஆவலில் இருக்கிறது.
கேப்டன் விராட் கோலி, புஜாரா, ரஹானே, லோகேஷ் ராகுல் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் சுழலில் மிரட்ட காத்திருக்கிறார்கள். 18 வயதான மும்பை பேட்ஸ்மேன் பிரித்வி ஷா இந்த டெஸ்டில் அறிமுக தொடக்க வீரராக இடம்பிடிப்பது உறுதியாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை அந்த அணியில் இடம் பிடித்துள்ள 5 பேர் மட்டுமே இதற்கு முன்பு இந்தியாவில் டெஸ்டில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள். கேப்டன் ஜாசன் ஹோல்டர் கூட இனிதான் முதல் முறையாக இந்திய மண்ணில் டெஸ்டில் விளையாட இருக்கிறார்.
பேட்டிங்கில் கிரேக் பிராத்வெய்ட், ரோஸ்டன் சேஸ், கீரன் பவெல், ஷாய் ஹோப்பும், பந்து வீச்சில் கேப்டன் ஹோல்டர், தேவந்திர பிஷூ, கேப்ரியல் ஆகியோரையும் நம்பி இருக்கிறது. ஒருங்கிணைந்து ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணியால் இந்தியாவின் சவாலை சமாளிக்க முடியும்.
இந்த ஆடுகளம் முதல் இரண்டரை நாட்கள் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் அடுத்து வரும் ஆஸ்திரேலிய தொடரை கருத்தில் கொண்டு ஓரளவு ‘பவுன்ஸ்’ ஆகும் வகையில் ஆடுகளம் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் சுழற்பந்து வீச்சின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை பார்க்கவே சுவாரஸ்யமாக இருக்கும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:
இந்தியா: லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பான்ட் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் அல்லது ஷர்துல் தாகூர்.
வெஸ்ட் இண்டீஸ்: கிரேக் பிராத்வெய்ட், கீரன் பவெல், ஷாய் ஹோப், சுனில் அம்ப்ரிஸ், ஷிம்ரோன் ஹெடிம்யேர், ரோஸ்டன் சேஸ், ஷேன் டாவ்ரிச் (விக்கெட் கீப்பர்), ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ஷனோன் கேப்ரியல், தேவேந்திர பிஷூ, கீமோ பால். #INDvWI
ஆண்டிகுவா டெஸ்டில் தனது அபாரமான பந்து வீச்சினால் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #WIvBAN
ஆண்டிகுவா:
வங்காள தேசம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆண்டிகுவா நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
வெஸ்ட் இன்டீஸ் அணியினரின் பந்து வீச்சில் அனல் பறந்தது. குறிப்பாக, கீமர் ரோச் சிறப்பாக பந்து வீசி வங்காள தேசத்தின் முன்னணி வீரர்களை அவுட்டாக்கினார். தொடக்க ஆட்டக்காரரான லியான் தாஸ் மட்டும் இரட்டை இலக்கத்தை தொட்டார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க எண்களிலேயே வெளியேறினர். இதனால் வங்காள தேச அணி தனது முதல் இன்னிங்சில் 43 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இன்டீஸ் அணியின் கீமர் ரோச் 8 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. அணியின் எண்ணிக்கை 113 ரன்களாக இருக்கும்போது டேவன் ஸ்மித் 58 ரன்களில் அவுட்டாகினார். அடுத்து ஆடிய பாவெல் 48 ரன்கள் எடுத்து அவுட்டானார். பிராத்வைட் சிறப்பாக ஆடி 121 ரன்களில் அவுட்டானார். அடுத்து ஆடிய ஷாய் ஹோப் 68 ரன்களில் அவுட்டானார். கடைசியில் ஜேசன் ஹோல்டர், கீம்ர் ரோச் ஓரளவு ரன்கள் எடுத்தனர். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 137.3 ஓவரில் 406 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.
வங்காள தேசம் சார்பில் அபு ஜெயத், மெஹிடி ஹசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, வங்காள தேசம் அணியினர் இரண்டாவது இன்னிங்சை ஆடினர். முதல் இன்னிங்ஸ் போலவே விக்கெட்டுகள் மளமளவென விழுந்தது.
இறுதியில், வங்காள தேச அணி 40.2 ஓவரில் 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நுருல் ஹசன் மட்டும் தாக்குப்பிடித்து 64 ரன்கள் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஷனோன் காப்ரியல் 5 விக்கெட்டுகளும், ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தியது. ஆட்ட நாயகனாக கீமர் ரோச் தேர்வு செய்யப்பட்டார். #WIvBAN
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X