என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்
Byமாலை மலர்4 Oct 2018 6:21 AM IST (Updated: 4 Oct 2018 6:21 AM IST)
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. #INDvWI
ராஜ்கோட்:
ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று காலை தொடங்குகிறது.
சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்திய அணி, போதிய அனுபவம் இல்லாத வெஸ்ட் இண்டீசை எளிதில் வீழ்த்தி விடும் என்பதே நிபுணர்களின் கணிப்பாகும்.
உள்ளூரில் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி முத்திரை பதித்துள்ள இந்திய அணி, அந்த எண்ணிக்கையை 10 ஆக உயர்த்தும் ஆவலில் இருக்கிறது.
கேப்டன் விராட் கோலி, புஜாரா, ரஹானே, லோகேஷ் ராகுல் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் சுழலில் மிரட்ட காத்திருக்கிறார்கள். 18 வயதான மும்பை பேட்ஸ்மேன் பிரித்வி ஷா இந்த டெஸ்டில் அறிமுக தொடக்க வீரராக இடம்பிடிப்பது உறுதியாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை அந்த அணியில் இடம் பிடித்துள்ள 5 பேர் மட்டுமே இதற்கு முன்பு இந்தியாவில் டெஸ்டில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள். கேப்டன் ஜாசன் ஹோல்டர் கூட இனிதான் முதல் முறையாக இந்திய மண்ணில் டெஸ்டில் விளையாட இருக்கிறார்.
பேட்டிங்கில் கிரேக் பிராத்வெய்ட், ரோஸ்டன் சேஸ், கீரன் பவெல், ஷாய் ஹோப்பும், பந்து வீச்சில் கேப்டன் ஹோல்டர், தேவந்திர பிஷூ, கேப்ரியல் ஆகியோரையும் நம்பி இருக்கிறது. ஒருங்கிணைந்து ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணியால் இந்தியாவின் சவாலை சமாளிக்க முடியும்.
இந்த ஆடுகளம் முதல் இரண்டரை நாட்கள் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் அடுத்து வரும் ஆஸ்திரேலிய தொடரை கருத்தில் கொண்டு ஓரளவு ‘பவுன்ஸ்’ ஆகும் வகையில் ஆடுகளம் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் சுழற்பந்து வீச்சின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை பார்க்கவே சுவாரஸ்யமாக இருக்கும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:
இந்தியா: லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பான்ட் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் அல்லது ஷர்துல் தாகூர்.
வெஸ்ட் இண்டீஸ்: கிரேக் பிராத்வெய்ட், கீரன் பவெல், ஷாய் ஹோப், சுனில் அம்ப்ரிஸ், ஷிம்ரோன் ஹெடிம்யேர், ரோஸ்டன் சேஸ், ஷேன் டாவ்ரிச் (விக்கெட் கீப்பர்), ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ஷனோன் கேப்ரியல், தேவேந்திர பிஷூ, கீமோ பால். #INDvWI
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X