என் மலர்
நீங்கள் தேடியது "Fish seller"
- சட்ட விரோதமாக மதுபான விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- 52 மதுபான பாட்டில்கள் மற்றும் ரூ,9,800 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கள்ளகிணர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கள்ளகிணர் தனியார் நூற்பாலை அருகே மீன் கடையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அங்கு இருந்த மீன் கடையில் தர்மபுரியை சேர்ந்த பழனி என்பவரது மகன் அம்மு(வயது 22) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 52 மதுபான பாட்டில்கள் மற்றும் ரொக்கம் ரூ,9,800 ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- ரோஹித் 3 வருடங்களாக அரபு நாட்டில் வேலை பார்த்து வந்தார்
- தூரத்திலேயே தாயை கண்ட ரோஹித், தாயுடன் விளையாட விரும்பினார்
கர்நாடகா மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் உள்ளது கந்தபூர் தாலுக்கா. இங்குள்ளது கங்கோலி எனும் கிராமம். கர்நாடகாவின் மேற்கு கடற்கரையோரத்தில் பஞ்சகங்காவளி ஆறு கடலை சேரும் இடத்தில் இக்கிராமம் அமைந்துள்ளதால் இங்கு மீன்பிடி வியாபாரம் முக்கிய தொழிலாக உள்ளது.
இங்கு வசிப்பவர் சுமித்ரா எனும் மீன் விற்பனை செய்யும் பெண்மணி. இவருடைய இள வயது மகன் ரோஹித்.
ரோஹித் ஒரு அரேபிய நாட்டில் கடந்த 3 வருடங்களாக வேலை பார்த்து வந்தார். 3 வருடங்களாக வீட்டிற்கு வராத ரோஹித் சொந்த ஊருக்கு திடீரென திரும்பி வந்தார். ஆனால், அனைவருக்கும் ஒரு ஆச்சரியம் கலந்த ஆனந்தத்தை கொடுப்பதற்காக தான் ஊர் திரும்பும் தகவலை பெற்றோருக்கோ, உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ கூட கூறாமல் தனது சொந்த கிராமத்திற்கு வந்திறங்கினார்.
இவர் வீட்டிற்கு வந்த போது அவர் தாயார் வீட்டில் இல்லை. தினமும் அவர் செய்து வரும் மீன் வியாபாரத்திற்காக சந்தைக்கு சென்றிருப்பதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தாய்க்கு ஒரு ஆனந்த அதிர்ச்சியை கொடுக்க விரும்பிய ரோஹித் தனது முகத்தை ஒரு முகவுரையால் மூடிக் கொண்டு சந்தைக்கு சென்று தாயாரை கண்டார். அங்கு அவர் தாயார் மீன் விற்று கொண்டிருந்தார்.
தூரத்திலேயே தாயை கண்டு மகிழ்ந்தாலும், வேண்டுமென்றே முகத்திலிருந்த மாஸ்கை விலக்காமால் தாயிடம் சென்று "மீன் என்ன விலை?" என கேட்டு வியாபாரம் செய்தார்.
முதலில் மீன் வாங்க வந்திருக்கும் வாடிக்கையாளர் என நினைத்த சுமித்ரா, அந்த குரலை வைத்து சுதாரித்து கொண்டு சந்தேகம் அடைந்து, வாங்க வந்த நபரை உற்று நோக்கினார். ரோஹித் முகத்திரை அணிந்திருந்தாலும், அது தனது மகன் என அறிந்த சுமித்ரா ஓடிச்சென்று அவரை ஆர தழுவிக் கொண்டு ஆனந்த கண்ணீர் வடித்தார்.
ரோஹித் தாயிடம் முதலில் வியாபாரம் செய்வதையும், பின் அவரது தாயார் அவரை அணைப்பது வரை அங்கிருந்தவர்கள் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.
எத்தனை வருடங்களானாலும் எந்த சூழ்நிலையிலும் மகனை அடையாளம் காணும் தாய் பாசத்தின் சிறப்பிற்கு ஈடில்லை என இந்த நிகழ்ச்சி குறித்து பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.