என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Fishermen protest"
- கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் பல ஆயிரம் இழப்பு ஏற்படுகிறது.
- மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
ராமேசுவரம்:
ராமநாதாபுரம் மாவட்டம் ராமேசுவரம் துறைமுகத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இதில், பெரும்பாலும் இறால், நண்டு, கனவாய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள், மற்றும் கோழித்தீவனத்திற்கு பயன்படும் சங்காயம் பிடித்து வருகின்றனர். மீன்பிடி தடைகாலத்திற்கு முன்பு இறால் ரூ.650, கனவாய் ரூ.400, நன்டு ரூ.350, காரல் ரூ.70, சங்காயம் ரூ.25 விலை இருந்து வந்தது.
இந்த நிலையில், மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து மீன்பிடிக்க சென்ற பின்னர் இறால் ரூ. 350-400, நன்டு ரூ. 250, கனவாய் ரூ. 180, காரல் ரூ.15, சங்காயம் ரூ.10 என 50 சதவீதம் வரை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ஒன்றினைந்து சிண்டிகேட் அமைத்துக்கொண்டு விலையை குறைந்துள்ளனர்.
இதனால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவு செய்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் பல ஆயிரம் இழப்பு ஏற்படுகிறது.
இதனால் படகுகளை இயக்க முடியாத நிலையில் கடந்த 8-ந்தேதி முதல் காலவரையற் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். 5 நாட்கள் ஆன நிலையில் பெரும்பால மீனவர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று காலையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
5 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க செல்லும் தங்களுக்கு இலங்கை கடற்படை அச்சுறுத்தல் இன்றி மீன்பிடிக்கவும். பிடித்து வரும் இறால் மீனுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
- வைகை அணையில் மீன் பிடிக்கும் குத்தகையை தனியாருக்கு விட அரசு முடிவு செய்துள்ளது.
- அரசின் முடிவை கைவிட வலியுறுத்தியும் மீனவர்கள் வைகை அணை மீன்வள த்துறை அலுவலகம் முன் போராட்டம் செய்தனர்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே வைகை அணை நீர் தேக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் மீன்வளத்துறை மூலம் மீன் குஞ்சுகள் லட்ச க்கணக்கில் விடப்படுகிறது.
மீன் குஞ்சுகள் வளர்ந்த பின் பதிவு பெற்ற மீனவ சங்க உறுப்பினர்கள் மீன்கள் பிடிக்கின்றனர். அைவ மீன்வளத்துறை மூலம் விற்பனை செய்யப்படுகிறது. பதிவு பெற்ற 115 பரிசல்கள் மூலம் 230 மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். இதன்மூலம் மட்டுமே அவர்கள் வருவாய் ஈட்டி வந்தனர்.
இந்நிலையில் வைகை அணையில் மீன் பிடிக்கும் குத்தகையை தனியா ருக்கு விட அரசு முடிவு செய்துள்ளது.
மீன்பிடி குத்தகையை தனியாருக்கு விடுவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும். மேலும் மீன் பிடி குத்தகையை தனியாருக்கு விடும் பட்சத்தில் வைகை அணை நீர் தேக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அரசின் முடிவை கைவிட வலியுறுத்தியும் மீனவர்கள் வைகை அணை மீன்வள த்துறை அலுவலகம் முன் போராட்டம் செய்தனர். பின்னர் மீன்வளத்துறை சார்பு ஆய்வாளர் கலையரசி யிடம் மீனவர்கள் மனு கொடுத்தனர்.
எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மணலி தொழிற்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு குழாய் மூலம் திரவ இயற்கை வாயு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் கொசஸ்தலை ஆற்று படுகையில் கியாஸ் குழாய் அமைக்கப்படுகிறது.
இதற்கு எண்ணூர் அனைத்து மீனவ கிராமங்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. கியாஸ் குழாயில் பாதிப்பு ஏற்பட்டால் பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் கொசஸ்தலை ஆற்றில் கியாஸ் குழாய் பதிக்கும் பணி நடந்தது. இதுபற்றி அறிந்ததும் ஏராளமான மீனவர் கிராம கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர்.
அவர்கள் கியாஸ் குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
இது குறித்து மீனவர்கள் கூறும்போது, ‘‘கொசஸ்தலை ஆற்றில் கியாஸ் குழாய் பதிக்கப்படுவதால் விபத்து ஏற்பட்டால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.
ஏற்கனவே வட சென்னை அனல் மின்நிலைய சாம்பல் கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே கொசஸ்தலை ஆறு வழியாக கியாஸ் குழாயை பதிக்க விடமாட்டோம்.
இந்த திட்டத்துக்காக கடற்கரை மண்டல ஒழுங்கு முறை அறிவிப்பாணை, சுற்றுப்புறசூழல் ஆணையரிடம் இருந்து எந்தவிதமான அனுமதியும் பெறப்படவில்லை. மேலும் காற்று மற்றும் நீர் மாசு தடுப்பு சட்டத்தின் கீழ் எந்தவித அனுமதியும் பெறவில்லை’ என்றனர். #tamilnews
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே புதிதாக அனல் மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரியை இறக்குமதி செய்வதற்காக கடலினுள் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் அமைந்தால் மீன்வளம் பாதிக்கப்படும், இயற்கை வளங்கள் அழியும் என அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இன்று(திங்கட்கிழமை) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 12 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வில்லை.
பல்வேறு பகுதிகளில் இருந்து நாட்டுப்படகு மற்றும் கட்டுமரங்களில் மீனவர்கள் உடன்குடி அருகே உள்ள கல்லாமொழி பகுதிக்கு திரண்டு வந்தனர். அங்கு கடலுக்குள்ளேயே படகுகளில் நின்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அனல்மின் நிலைய திட்டத்திற்கு எதிராகவும், கடலில் பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள். மீனவர்களின் படகுகளில் கருப்பு கொடிகள் கட்டப்பட்டிருந்தன. மீனவர்கள் போராட்டத்தை தொடர்ந்து கல்லாமொழியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கடலோர காவல் படையினரும் கடலுக்குள் அரண் போல நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.
மேலும் கல்லாமொழி பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மீனவர்கள் புன்னக்காயல் முதல் வேம்பார் வரை அந்தந்த பகுதியில் திரண்டு நாட்டுப் படகுகளுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகரில் படகு களில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதில் சுமார் 190 படகுகளுடன் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்ட மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம், கூட்டப்பனை, இடிந்தகரை, கூடுதாழை, கூத்தங்குழி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 8000 நாட்டு படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
மேலும் மீனவர்கள் கடலில் இறங்கி முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டார்கள். #tamilnews
ராமேசுவரம்:
மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி 90 நாட்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைக்காலம் நீங்க இன்னும் சில நாட்களே இருப்பதால் மீனவர்கள் தங்கள் படகுகளை பராமரிப்பு செய்து தயார்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடலுக்கு செல்லும் விசைப்படகுகளை வருடந்தோறும் மீன்பிடி தடைக்காலம் முடியும் நேரத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அப்போது விசைப்படகுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட நீளம், அகலம், என்ஜின் திறன், அரசு விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா? போன்றவை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குவார்கள். இவ்வாறு சான்றிதழ் பெற்ற விசைப்படகுகள் மட்டுமே கடலுக்குள்ள அனுமதிக்கப்படும்.
அதன்படி இன்று ராமேசுவரத்தில் விசைப்படகுகளை ஆய்வு செய்ய மீன்வளத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் உள்ள விசைப்படகுகளை ஆய்வு செய்ய சென்றனர்.
அப்போது திடீரென்று விசைப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு செய்யக்கூடாது, புகைப்படம் எடுக்கக்கூடாது என வலியுறுத்தி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் ஆய்வு செய்ய முடியாமல் திரும்பிச்சென்றனர்.
இதுதொடர்பாக ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள், மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்