search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Five great sacrifices"

    • ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வராஜ ஹோமம் நடத்தினர்
    • 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக மக்களின் நலன் கருதி பவுர்ணமியை முன்னிட்டு ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமம், தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகம், சனி சாந்தி ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம் ஆகிய ஐம்பெரும் யாகங்கள் நடைபெற்றது.

    பின்னர் பவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உள்ள ஸ்ரீ ராகு கேதுவிற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் அன்னாபிஷேகமும், பூஜையும் நடைபெற்றது.

    சிவலிங்க ரூபத்தில் உள்ள 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

    இந்த ஹோமங்கள் மற்றும் பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர சுவமிகள் அருள் பிரசாதமும் ஆசிர்வாதமும் வழங்கினார்.

    இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    ×