search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flag Badge"

    • ஜனாதிபதியின் கவுரவக்கொடி தமிழக போலீசுக்கு வழங்கப்பட்டது.
    • முதல் கட்டமாக 500 ‘பேட்ஜ்’ தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    ஜனாதிபதியின் கவுரவக்கொடி தமிழக போலீசுக்கு வழங்கப்பட்டது. இதன் நினைவாக, டி.ஜி.பி., முதல் போலீசார் வரை என, அனைவருக்கும், தமிழக அரசின் பதக்கம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.ஜனாதிபதியின் கவுரவக்கொடி கிடைத்து–ள்ளதால், அனைத்து போலீசாரும், சீருடையிலும், இனி ஜனாதிபதியின் கொடியான 'நிஸான்' என்ற சின்னம் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்காக, 'லோகோ' இடம்பெற்ற 'பேட்ஜ்' திருப்பூரிலும் தயாரிக்கப்ப–டுகிறது.இங்குள்ள 'எடர்நல் டெக்ஸ்டைல்ஸ்' மற்றும் 'ஷைன் டெக்ஸ்டைல்ஸ்' ஆகிய இடங்களில் தயாராகி வருகிறது. முதல் கட்டமாக, 500 'பேட்ஜ்' தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ்துறை நவீனமாயமாக்கல் கூடுதல் டி.ஜி.பி., சஞ்சய்குமார் கூறியதாவது:-

    டி.ஜி.பி., உத்தரவின் பேரில், 'லோகோ' தயாரிக்கும் பணி மேற்கொ–ள்ளப்பட்டது. பல 'லோகோ' தயாரிப்பாளர்களை அணுகி, மாதிரி தயார் செய்ய கூறினோம்.

    மும்பை, டில்லியில், தலா இருவர், சென்னையில் ஒருவர் மற்றும் திருப்பூரில் நால்வர் மாதிரி தயார் செய்தனர். அதில், தரம், கலர் உள்ளிட்ட அனைத்தையும் கவனத்தில் கொண்டு, சரியான 'லோகோ'வை முடிவு செய்தோம். 'லோகோ' வில் இடம்பெற்றுள்ள கலர், பஞ்சாப், மலர்கோட்லாவில் தயார் செய்யப்பட்டு, பின், இங்கு பேட்ஜ் தயார் செய்யப்பட்டது. 'லோகோ'வில், ஒன்பது கலர் இடம்பெற்றுள்ளது. இனி, மொத்தமாக ஊர்களுக்கு பிரித்து வழங்கி 'பேட்ஜ்' செய்யும் பணி நடக்க உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

    ×