என் மலர்
நீங்கள் தேடியது "Foldable Smartphone"
- ஹூவாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போல்டபில் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- ஹூவாயின் முதல் ப்ளிப் போன் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹூவாய் நிறுவனம் பாக்கெட் S மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹூவாய் அறிமுகம் செய்த P50 பாக்கெட் ப்ளிப் போனினை விட குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹூவாய் பாக்கெட் S மாடலில் 6.9 இன்ச் FHD+ மடிக்கக்கூடிய பிலெக்சிபில் ஸ்கிரீன், 1.04 இன்ச் அளவில் வெளிப்புற AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஸ்னாப்டிராகன் 778 4ஜி சிப்செட், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 40MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா, 10.7MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் ஹூவாய் பாக்கெட் S மாடலில் பக்கவாட்டில் கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப் சி ஆடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2 LE, 4000 எம்ஏஹெச் பேட்டரி, 40 வாட் ஹூவாய் சூப்பர்சார்ஜ் வயர்டு பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் உள்ளன.

ஹூவாய் பாக்கெட் S அம்சங்கள்:
6.9 இன்ச் 2790x1188 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 778 4ஜி பிராசஸர்
அட்ரினோ 642L GPU
8 ஜிபி ரேம்
128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஹார்மனி ஒஎஸ் 3.0
டூயல் சிம்
40MP ட்ரூ-க்ரோமா கேமரா
13MP அல்ட்ரா வைடு கேமரா
10.7MP செல்பி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி
4000 எம்ஏஹெச் பேட்டரி
40 வாட் ஹூவாய் சூப்பர்சார்ஜ் வயர்டு பாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஹூவாய் பாக்கெட் S மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிளாக், பாரஸ்ட் சில்வர், மிண்ட் கிரீன், பின்க், ப்ரிசம்ரோஸ் கோல்டு மற்றும் ஐஸ் க்ரிஸ்டல் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 5888 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 68 ஆயிரத்து 010 என துவங்குகிறது.
- ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் வெளியிடாதது பற்றி சாம்சங் சமீபத்தில் கேலி விளம்பரம் வெளியிட்டு இருந்தது.
- ஆப்பிள் நிறுவனத்தின் போல்டபில் ஐபோன் பற்றிய விவரங்கள் பல ஆண்டுகளாக வெளியாகி வந்தன.
மடிக்கக்கூடிய ஐபோன் வெளியிடவில்லை என்பதை கூறி ஆப்பிள் நிறுவனத்தை கேலி செய்யும் வகையில் சாம்சங் சமீபத்தில் தான் விளம்பரம் வெளியிட்டு இருந்தது. இதற்கு ஆப்பிள் தரப்பில் எந்த விதமான பதிலும் அளிக்கப்படவில்லை. எனினும், சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் மடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கி அசத்தி இருக்கிறார்.
சீனர் உருவாக்கிய போல்டபில் ஐபோன் மாடல் ஐபோன் V என அழைக்கப்படுகிறது. இது ஒரு கிளாம்ஷெல் வகையிலான போல்டபில் போன் ஆகும். மடிக்கக்கூடிய ஐபோன் பற்றிய வீடியோ சீனாவை சேர்ந்த வீடியோ தளமான பிலிபிலியில் வெளியிடப்பட்டு இருக்கிறது. வீடியோவில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் ஏராளமான பாகங்கள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி கேலக்ஸி Z ப்ளிப் மற்றும் மோட்டோ ரேசர் போன்ற மாடல்களில் இருப்பதை போன்று ஐபோனில் உள்ள பாகங்களை இரண்டாக பிரித்து அவற்றை ஒன்றாக இணைத்துள்ளார். போனின் கீழ்புறத்தில் மதர்போர்டு, ரேம், மெமரி போன்ற பாகங்களும், மேல்பாதியில் பேட்டரி, கேமரா சென்சார் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.
நீண்ட கால உழைப்பின் பலனாக இந்த மடிக்கக்கூடிய ஐபோனை சீனர் உருவாக்கி இருக்கிறார். எனினும், ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன் ப்ரோடோடைப் நிலையிலேயே இருப்பதாக தெரிகிறது. இவர் உருவாக்கி இருக்கும் போல்டபில் ஐபோனில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன், கேமரா மற்றும் இதர அம்சங்கள் உள்ளன. மேலும் இவை அனைத்தும் சீராக இயங்குகின்றன.
- ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் புது ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.
- அந்த வகையில் ரியல்மி நறுவனம் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் பிரிவில் களமிறங்குவதும் உறுதியாகி இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் பல்வேறு புது ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரியல்மி நிறுவனத்தின் துணை தலைவர் சு குய் விரைவில் அறிமுகமாகும் புது ரியல்மி ஸ்மார்ட்போன்கள் பற்றி அறிவித்து இருக்கிறார்.
GT சிரிஸ் துவங்கி ஏராளமான ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய ரியல்மி திட்டமிட்டுள்ளது. இதில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் சீரிஸ்களின் மேம்பட்ட வெர்ஷன், முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் இடம்பெற்று இருக்கும். இதுதவிர புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் இனி ஒவ்வொரு ஆண்டும் இரு GT நியோ சீரிஸ் போன்களை அறிமுகம் செய்யவும் ரியல்மி தட்டமிட்டுள்ளது.

இதோடு இரண்டு நம்பர் சீரிஸ் போன்களை அறிமுகம் செய்யும் பணிகளிலும் ரியல்மி ஈடுபட்டு வருகிறது. இதில் ஒரு மாடல் ஆண்டின் மத்தியிலும், மற்றொரு மாடல் ஆண்டு இறுதியிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இத்துடன் வழக்கமான GT சீரிஸ் மாடல் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகம் செய்யப்படுகிறது. இவை தவிர புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விலை பட்ஜெட் பிரிவில் நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த மாடல் ஏற்கனவே உருவாக்கப்பட்டு வருவது உறுதியாகி இருக்கிறது. எனினும், இந்த மாடல் எப்போது வெளியாகும் என்பது பற்றி ரியல்மி அதிகாரி எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. அந்த வகையில் ரியல்மியின் ஃபோல்டபில் போன் எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
- சியோமி நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புதிய சியோமி ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
சியோமி நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் மாடல் சமீபத்தில் தான் இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், டிப்ஸ்டர் குபா வொசைசௌஸ்கி வெளியிட்டு இருக்கும் தகவல்களில் சியோமியின் புதிய ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் வெளிப்புறம் மடிக்கும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் மற்றும் 855 மோடெம் கொண்டிருக்கும் என தெரிகிறது.
"இந்த சாதனத்தின் விவரங்கள் மிகவும் கவனமாக பாதுகாக்கப்பட்டு வந்தன. எனினும், ஸ்மார்ட்போனின் சில யூனிட்கள் பொது வெளியில் கசிந்துள்ளது," என குபா வொசைசௌஸ்கி தெரிவித்து இருக்கிறார். சியோமி 13 சீரிஸ் வெளியீட்டு பணிகளில் சியோமி தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறது. புதிய 13 சீரிசில்- சியோமி, 13 மற்றும் சியோமி 13 ப்ரோ மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. இவை முதலில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படுகின்றன.

இரு புதிய ஸ்மார்ட்போன்களில் சியோமி 13 ப்ரோ விவரங்களை டிப்ஸ்டர் யோகேஷ் ரார் வெளியிட்டு இருந்தார். அதில், புதிய சியோமி 13 ப்ரோ மாடலில் 6.7 இனஅச் E6 LTPO டிஸ்ப்ளே, 2K ரெசல்யூஷன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
சியோமி 13 ப்ரோ மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், எம்ஐயுஐ 14, 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 50MP டெலிபோட்டோ லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா சென்சார்கள் லெய்கா பிராண்டிங் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
Photo Courtesy: Onleaks
- ஒப்போ நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது.
- ஒப்போ நிறுவனத்தின் இன்னோ டே 2022 சிறப்பு நிகழ்வு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது.
ஒப்போ நிறுவனம் "2022 இன்னோ டே" நிகழ்வை அடுத்த மாதம் நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில் ஒப்போ நிறுவனம் தனது அடுத்த தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் தெரிவித்து இருக்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி 2021 இன்னோ டே நிகவ்வு நடைபெற்றது. இதில் ஒப்போ நிறுவனம் ஏராளமான புது தொழில்நுட்பங்கள் - மரிசிலிகான் X NPU, ஒப்போ ஏர் கிலாஸ், ஒப்போ ஃபைண்ட் N மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உள்ளிட்டவைகளை அறிவித்தது. கடந்த ஆண்டை போன்றே இந்த முறையும் ஒப்போ புதிய தொழில்நுட்பங்களை தனது 2022 இன்னோ டே நிகழ்வில் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் தனது வெய்போவில் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஒப்போ இன்னோ டே 2022 நிகழ்வு டிசம்பர் மாத மத்தியில் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் ஏராளமான புது சாதனங்கள் அறிவிக்கப்படும். இதே நிகழ்வில் ஃபைண்ட் N2, ஃபைண்ட் N2 ஃப்ளிப் போன்ற மடிக்கக்கூடிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒப்போ ஃபைண்ட் N2 மாடலில் 7.1 இன்ச் அளவில் உள்புறமாக மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே, 5.5 இன்ச் OLED கவர் டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 4520 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 32MP செல்ஃபி கேமரா, உள்புறத்தில் 32MP கேமரா, 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஃபோல்டபில் ஸ்மார்ட்போனின் எடை 240 கிராம்களுக்கும் குறைவாக இருக்கும் என்றும் இது பிளாக், வைட் மற்றும் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
- ஒப்போ நிறுவனத்தின் புதிய தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- புதிய ஒப்போ போல்டபில் ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
ஒப்போ நிறுவனம் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒப்போ இன்னோ டே நிகழ்வில் தனது முதல் போல்டபில் சாதனத்தை அறிமுகம் செய்தது. ஒப்போ ஃபைண்ட் N பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட சாதனத்தின் மேம்பட்ட வெர்ஷன் இம்மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மாடல் ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் என அழைக்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில், புதிய ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடல் hands-on வீடியோ வெய்போ தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது. அறிமுகம் செய்யப்படாத டெஸ்ட் சாதனங்களை போன்றே ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடலிலும் பாதுகாப்பிற்கு கேஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் சிறிய இன்னர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

இதுதவிர பன்ச் ஹோல் ரக கட்-அவுட், 32MP செல்ஃபி கேமரா, 6.8 இன்ச் ஃபோல்டிங் டிஸ்ப்ளே, பக்கவாட்டில் கைரேகை சென்சார், வலது புறத்தில் வால்யூம் பட்டன்கள் வழங்கப்படுகின்றன. இதன் வெளிப்புற டிஸ்ப்ளே மற்ற ஃப்ளிப் ரக போல்டபில் போனை விட பெரியதாக காட்சியளிக்கிறது. அதன்படி புது மாடலில் 3.26 இன்ச் அளவில் கவர் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிகிறது.
வெளிப்புற டிஸ்ப்ளே அருகில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ் காணப்படுகிறது. முந்தைய தகவல்களின் படி ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000+ பிராசஸர், 4300 எம்ஏஹெச் பேட்டரி, 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
- கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
- கடந்த சில ஆண்டுகளாகவே கூகுள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக கூறப்பட்டு வருகிறது.
கூகுள் நிறுவனத்தன் பிக்சல் ஃபோல்டு வெளியீடு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். கூகுள் ஃபெலிக்ஸ் (Felix) எனும் குறியீட்டு பெயர் கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி உள்ளது. இதன் மூலம் புதிய கூகுள் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தெரிகிறது. தற்போது இந்த மாடலின் டெஸ்டிங் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
ஃபெலிக்ஸ் எனும் குறியீட்டு பெயர் கொண்ட ஸ்மார்ட்போன் பிக்சல் 7 ப்ரோ பெயரிலும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய பிக்சல் ஃபோல்டு மற்றும் பிக்சல் 7 ப்ரோ என இரு மாடல்களிலும் டென்சார் G2 பிராசஸர் மற்றும் 12 ஜிபி ரேம் வழங்கப்படும் என கூறப்பட்டு வருகிறது. கீக்பென்ச் புள்ளிகளின் படி புது ஸ்மார்ட்போன் அம்சங்கள் பிக்சல் 7 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

கூகுள் பிக்சல் ஃபோல்டு மாடல் தோற்றத்தில் பிக்சல் 7 ப்ரோ போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. இதில் டூயல் கிளாஸ் பேனல்கள், ஸ்டீல் ஃபிரேம் உள்ளது. இத்துடன் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம். பிக்சல் ஃபோல்டு மாடலில் 8 இன்ச் உள்புற டிஸ்ப்ளே, 6.19 இனஅச் கவர் டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது. இத்துடன் 9.5MP செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விலை 1800 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 410 என நிர்ணயம் செய்யப்படலாம். தற்போதைய தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் நடைபெற இருக்கும் கூகுள் I/O நிகழ்வில் நடைபெறும் என கூறப்படுகிறது.
- ஒப்போ நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது.
- கடந்த ஆண்டு ஒப்போவின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக ஃபைண்ட் N அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.
ஒப்போ நிறுவனம் தனது ஃபைண்ட் N2 சீரிஸ் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி டிசம்பர் 15 ஆம் தேதி புதிய ஒப்போ ஃபைண்ட் N2 சீரிஸ் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில் ஃபைண்ட் N2 மற்றும் ஃபைண்ட் N2 ஃப்ளிப் என இரு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. இதில் ஃபைண்ட் N2 மாடல் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
இந்த ஆண்டு ஃபைண்ட் N2 மாடலுடன் தனது முதல் ஃப்ளிப் போனை ஒப்போ அறிமுகம் செய்து இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களை உறுதிப்படுத்தும் வகையில் டீசர் வீடியோவை ஒப்போ வெளியிட்டு உள்ளது. அதன்படி ஒப்போ ஃபைண்ட் N2 மாடலில் டூயல் E6 AMOLED டிஸ்ப்ளே, மடிக்கக்கூடிய ஸ்கிரீன்களில் முற்றிலும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஜீரோ கிரீஸ் கொண்ட ஹின்ஜ் வழங்கப்படுகிறது.

இத்துடன் மிக குறைந்த எடை கொண்ட கார்பன் ஃபைபர் ஃபிரேம், இண்டகிரேட் மார்டைஸ் மற்றும் டெனான் டிசைன், மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. ஃபைண்ட் N2 மாடல் மிக குறைந்த எடை கொண்ட ஃபோல்டபில் போன் என்ற பெருமையை பெறும் என தெரிகிறது.
இதன் எடை 233 கிராம் ஆகும். ஸ்மார்ட்போனின் பாகங்களை மறு கட்டமைப்பு செய்து, புதுமையான பொருட்களை கொண்டு இந்த நிலையை எட்டியதாக ஒப்போ தெரிவித்து இருக்கிறது. முன்னதாக ஹானர் மேஜிக் Vs மாடல் 261 கிராம் எடையுடன் மிகவும் எடை குறைந்த ஃபோல்டபில் போன் என்ற பெருமையை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
- கூகுள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
- கூகுள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.
கூகுள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் களமிறங்க இருப்பதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் கூகுள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்களும் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் வெளியாகி இருக்கிறது.
புதிய பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டிசைன் பிக்சல் 7 சீரிஸ் மாடல்களை தழுவியே உருவாக்கப்பட்டு இருக்கும் என தற்போதைய டீசர்களில் தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. மேலும் இதன் ஒட்டுமொத்த தோற்றம் ஒப்போ ஃபைண்ட் N போன்றே காட்சியளிக்கிறது.

அளவீடுகளை பொருத்தவரை பிக்சல் ஃபோல்டு மாடல் 158.7 x 139.7 x 5.7mm அளவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் 8.3mm அளவில் கேமரா பம்ப் உள்ளது. திறக்கப்பட்ட நிலையில் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் 7.69 இன்ச் அளவில் உள்ளது. இதன் உள்புற டிஸ்ப்ளேவில் தடிமனான பெசல்கள், பன்ச் ஹோல் ரக கேமரா, 5.79 இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் மத்தியில் பன்ச் ஹோல் ரக செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனில் டென்சார் G2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சில்வர் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதன் விலை 1799 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 809 வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்டைலஸ் வசதியும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
Photo Courtesy: OnLeaks @ HOWTOISOLVE
- விவோ நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் விவரங்களை டிப்ஸ்டர் ஒருவர் வெளியிட்டு இருக்கிறார்.
- புது ஸ்மார்ட்போன் கிளாம்ஷெல் ரக மடிக்கக்கூடிய ஸ்கிரீன் கொண்ட மாடல் ஆகும்.
விவோ நிறுவனம் விரைவில் கிளாம்ஷெல் ரக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் விவோ நிறுவனம் விரைவில் விவோ X ஃப்ளிப் கிளாம்ஷெல் போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இதோடு இந்த ஸ்மார்ட்போனின் ஸ்கீமேடிக்-ஐ வெளியிட்டு இருக்கிறது. இதில் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
இது மட்டுமின்றி புதிய விவோ X ஃப்ளிப் ஸ்மார்ட்போனின் படத்தையும் வெளியிட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போனின் ஸ்கீமேடிக் மற்றும் ரெண்டர்களில் விவோ X ஃப்ளிப் மாடலின் பின்புறம் வட்ட வடிவம் கொண்ட கேமரா மாட்யுல், மூன்று கேமரா சென்சார்கள், வலது புறத்தில் மூன்று எல்இடி ஃபிளாஷ், ZEISS லோகோ இடம்பெற்று இருக்கிறது. கேமரா மாட்யுலின் கீழ் செவ்வக வடிவம் கொண்ட கவர் டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போனின் மற்றொரு பாதியில் விவோ லோகோ இடம்பெற்று இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் வலது புறத்தில் வால்யும் ராக்கர் மற்றும் பவர் பட்டன் உள்ளது. சிப்செட் தவிர இந்த ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. புதிய விவோ X ஃப்ளிப் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். வரும் நாட்களில் விவோ X ஃப்ளிப் பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.
எனினும், சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும் என்பது மர்மமாகவே உள்ளது. இது தவிர விவோ நிறுவனம் விரைவில் விவோ S16e, S16 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இவற்றில் எக்சைனோஸ் 1080, ஸ்னாப்டிராகன் 870 மற்றும் டிமென்சிட்டி 8200 சிப்செட்கள் வழங்கப்பட உள்ளன.
Photo Courtesy: Digital Chat Station
- கூகுள் நிறுவனம் பிக்சல் ஃபோல்டு பெயரில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- புதிய பிக்சல் ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உற்பத்தி பற்றி புது தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
கூகுள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக நீண்ட காலமாக தகவல் வெளியாகி வருகின்றன. பிக்சல் ஃபோல்டு பெயரில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புது தகவல்களின் படி கூகுள் நிறுவன மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சாம்சங் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.
வினியோக பிரிவு சார்ந்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி பிக்சல் ஃபோல்டு உற்பத்தி பணிகள் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டு வாக்கில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு ஆகும். சாம்சங் டிஸ்ப்ளே வெளியிட்டு இருக்கும் தகவல்களில் கேலக்ஸி Z ஃபோல்டு 5 மற்றும் கூகுள் பிக்சல் ஃபோல்டு மாடல்களுக்கான முன்பதிவு கிடைத்திருப்பதாக தெரிவித்து இருக்கிறது.

பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனில் 7.57 இன்ச் OLED பிரைமரி டிஸ்ப்ளே, 5.6 இன்ச் கவர் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போனின் உற்பத்தி பணிகள் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாத வாக்கில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் வெளியீடு கேலக்ஸி Z ஃபோல்டு 5 மாடலை தொடர்ந்து அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி உற்பத்தியாளராக சாம்சங் விளங்குகிறது.
அந்த வகையில், கூகுள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சாம்சங் மாடல்களிடம் கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். மேலும் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை தொடர்ந்து வெளியாகும் போது பிக்சல் ஃபோல்டு விற்பனை பெருமளவு பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. பிக்சல் ஃபோல்டு பற்றிய விவரங்கள் மர்மமாக இருக்கும் நிலையில், இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 14L ஒஎஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
- டெக்னோ நிறுவனத்தின் புதிய கான்செப்ட் போன் ஸ்லைடிங் ஸ்கிரீன், மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது.
- கான்செப்ட் போன் என்பதால் உண்மையில் இது எப்போது விற்பனைக்கு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
டெக்னோ ஃபேண்டம் விஷன் வி கான்செப்ட் போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. எனினும், இது வழக்கமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் இருந்து வித்தியாசமானதாக இருக்கிறது. ரோலபில் ஸ்லைடிங் ஸ்கிரீன் இருப்பதே இதன் முக்கிய அம்சமாக உள்ளது. மேலும் இது கான்செப்ட் மாடல் என்பதால், எப்போது வர்த்தக ரீதியாக அறிமுகமாகும் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
புது கான்செப்ட் போன் குறித்து வெளியாகி இருக்கும் வீடியோவில் ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. மேலும் மெல்லிய பெசல்கள், வளைந்த எட்ஜ் கொண்டிருக்கிறது. இதன் பின்புறம் மூன்று கேமரா சென்சார்கள், குவாட் எல்இடி ஃபிலாஷ் உள்ளது. இதன் கேமரா செட்டப் கீழ் சிறிய டிஸ்ப்ளே உள்ளது. இது நோட்டிஃபிகேஷன், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, ரிமைண்டர் உள்ளிட்டவைகளை வழங்குகிறது.

இந்த சாதனம் ஏரோஸ்பேஸ் கிரேடு டைட்டானியம் அலாய் கேசிங், டியுரபில் ஹின்ஜ் மற்றும் காப்புரிமை பெற்ற டிசைன் கொண்டுள்ளது. மடிக்கப்பட்ட நிலையில், இந்த சாதனம் சாதாரன ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கிறது. இதன் உள்புற டிஸ்ப்ளே 10.1 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. புது கான்செப்ட் மாடல் பற்றி டெக்னோ சார்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை.
2023 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வு அடுத்த மாத இறுதியில் துவங்க இருக்கிறது. இந்த நிகழ்வில் பல்வேறு ஸ்மார்ட்போன் பிராண்டுகள் தங்களின் புது சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம். எனினும், டெக்னோ தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை 2023 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகம் செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
Photo Courtesy: GSMArena