search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "food department"

    • வங்கிக்கு சென்று ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்த வேண்டும்.
    • ஆதார் எண் விவரங்களை கேட்கவோ, ஆதார் நகலை பெறவோ கூடாது.

    ரேஷன் அட்டைதாரர்களில் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் புதிய வங்கிக் கணக்கை தொடங்க தேவையான அறிவுறுத்தல்களை வழங்குமாறும் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை சார்பில் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அதில் ரேசன் அட்டை தாரர்களிடம் ஆதார் எண்ணை இணைக்க சொன்னால் மட்டும் போதும் என்று அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டிருந்தது

    இந்த நிலையில் இன்று உணவுத்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையில், வங்கிக் கணக்கு இல்லாத ரேசன் அட்டைதாரர்கள், புதிய வங்கி கணக்கு தொடங்க அருகில் உள்ள கூட்டுறவு வங்கியின் விண்ணப்பத்தை நியாய விலைக் கடையில் பெற்றுக் கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    அதே சமயம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே வங்கிக் கணக்கு உள்ளது என்றால், அந்த வங்கிக்கு சென்று அவர்களது ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு இல்லையென்றால், அருகில் உள்ள கூட்டுறவு வங்கி அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் புதிய கணக்கு தொடங்கி அதை ஆதார் எண்ணுடன் இணைத்து, அந்த விவரங்களை அவரவர் ரேஷன் கடைகளில் தெரிவிக்க அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    ரேஷன் அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணம் கொண்டு கேட்கவோ, ஆதார் நகலை பெறவோ கூடாது என சார் நிலை அலுவலர்களை அறிவுறுத்துமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வங்கிக் கணக்குகளை பெறுவது தொடர்பாக வெளியிடப்பட்ட கடிதத்திற்கு மாற்றாக இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும் எனவும் உணவுத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பூச்சி பண்ணைகளை ஏற்படுத்துவதை ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஊக்குவித்து வருகிறது.
    • பூச்சிகளை நேரடியாகவோ, அல்லது எண்னையில் பொரித்தோ சாப்பிட முடியும் என்று அங்குள்ள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளவும், கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கவும் அனுமதி அளிப்பது தொடர்பாக உணவு மற்றும் கால்நடை தீவன தொழில் துறையிடம் சிங்கப்பூர் அரசு கருத்து கோரியுள்ளது.

    இதற்கு அனுமதி கிடைத்தால் வண்டுகள், அந்துப் பூச்சிகள், தேனிக்கள் போன்ற இனங்களை சிங்கப்பூரில் வசிக்கும் மனிதர்கள் உணவாக உட்கொள்ள முடியும். இந்த பூச்சிகளை நேரடியாகவோ, அல்லது எண்னையில் பொரித்தோ சாப்பிட முடியும் என்று அங்குள்ள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

    பூச்சிகளை உனவாக உட்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளிடம் இருந்து இது தொடர்பான நடைமுறைகளை சிங்கப்பூர் உணவுத்துறை பெற்றுள்ளது.

    முழுமையான அறிவியல் பூர்வ ஆய்வை மேற்கொண்டு சில குறிப்பிட்ட பூச்சி இனங்களை உணவாக உட்கொள்ள அனுமதிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் உணவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    சமீபகாலமாக மனிதர்கள் உணவாக உட்கொள்வதற்காகவும், கால்நடை தீவனத்துக்காகவும் வணிகரீதியான பூச்சி பண்ணைகளை ஏற்படுத்துவதை ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஊக்குவித்து வருகிறது.

    ×