என் மலர்
நீங்கள் தேடியது "Food distribution"
- பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமாரின் தந்தை மற்றும் பழைய குருவிநத்தம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராமநாதன் மறைவையொட்டி 3-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி குருவிநத்தத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
- மேலும் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தி.மு.க. மற்றும் ஆர்.ஆர். பேரவை சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் சபாநாயகர் மற்றும் முன்னாள் எம்.பி ராதாகிருஷ்ணன், பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமாரின் தந்தை மற்றும் பழைய குருவிநத்தம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராமநாதன் மறைவையொட்டி 3-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி குருவிநத்தத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இதில் புதுவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ராமநாதன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அப்பகுதியில் அன்னதானம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, தி.மு.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள் பாகூர் தொகுதி பிரதிநிதிகள், அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து குருவிநத்தம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம் வழங்கப்பட்டது.
மேலும் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தி.மு.க. மற்றும் ஆர்.ஆர். பேரவை சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. முன்னாள் சபாநாயகர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- நாராயணசாமி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்றது.
- மணவாளன், நாகராஜ், கோவிந்தன், சதீஷ், முகுந்தன், குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பிறந்தநாளை முன்னிட்டு முத்தியால்பேட்டை வட்டார காங்கிரஸ் சார்பில் வட்டார காங்கிரஸ் தலைவர் கே. கிருஷ்ணராஜ் தலைமையில் புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னிலையில் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப் பட்டது.
விழாவில் மாநில பொதுச் செயலாளர் இளையராஜா, மாநில செயலாளர் தாண்டவன், மாவட்ட நிர்வாகிகள் செல்வம், சீதாராமன், அகிலன், புகழேந்தி, மணவாளன், நாகராஜ், கோவிந்தன், சதீஷ், முகுந்தன், குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- கோவையில் தயாரான ஒரு டன் உணவு பொருட்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஹெலிகாப்டர்களில் ஸ்ரீ வைகுண்டம் சென்றனர்.
- உணவு வினியோகம் மற்றும் மீட்பு பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களுக்கு உதவுவதற்காக முப்படைகளும் களம் இறக்கப்பட்டு உள்ளன.
சூலூர் விமானப்படை தளம், மண்டபம், கொச்சி கடற்படை தளங்களில் இருந்து 6 ஹெலிகாப்டர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கோவையில் தயாரான ஒரு டன் உணவு பொருட்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஹெலிகாப்டர்களில் ஸ்ரீ வைகுண்டம் சென்றனர்.
காலை 10.15 மணியளவில் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் உணவு பொட்டலங்களை போட்டனர். அதில் பிஸ்கட், உலர் பழங்கள், பால் பவுடர், தண்ணீர் பாட்டில்கள் இருந்தன.
மற்ற 5 ஹெலிகாப்டர்களும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீரில் சிக்கி உள்ளவர்களுக்கு உணவு பொட்டலங்களை வினியோகித்தது.
இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பல பகுதிகளில் வினியோகிக்கப்படுகிறது.
விமானப்படை தரப்பில் கூறும்போது, உணவு வினியோகம் மற்றும் மீட்பு பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் தெரி விக்கப்படும் இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் செயல்படுத்தப்படுகிறது என்றனர்.