என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Foods"

    • தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
    • வாழ்வியல் முறையை மாற்ற வேண்டும்.

    உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மாவுச்சத்து, சர்க்கரை சத்து அதிமாக உள்ள உணவுப்பொருட்கள், அசைவ உணவுகள் குறிப்பாக இறைச்சியை தவிர்க்க வேண்டும். மதுப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்.

    தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தேவையான அளவு ஓய்வு எடுக்க வேண்டும். வாழ்வியல் முறையை மாற்ற வேண்டும்.

    உடம்பில் எங்காவது புற்றுநோய் இருந்தாலும், சிறுநீரகப் பிரச்சனை இருந்தாலும், தொடர்ந்து நீண்ட நேரம் விரதம் இருந்தாலும், இனிப்பு பண்டங்கள் அதிகமாக சாப்பிட்டாலும் யூரிக் அமிலம் அதிகமாகலாம்.

    தினமும் போதுமான அளவு உடற்பயிற்சி செய்தல், ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல் போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.

    பாகற்காய், பீர்க்கங்காய், மஞ்சள் பூசணிக்காய், புடலங்காய், கேரட், புரோக்கோலி, வாழைப்பழம், வெள்ளரிக்காய், எலுமிச்சைச் சாறு, ஆரஞ்சுப் பழம், அன்னாசி, சாத்துக்குடி போன்றவற்றை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.

    • டோபமைன் நமது மனநிலையை உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.
    • நன்றி சொல்லும் போது டோபமைனை மூளை அதிக அளவில் வெளியிடுகிறது.

    டோபமைன் என்பது மூளையில் உற்பத்தியாகும் ஒரு ரசாயனம். இது நமது மனநிலையை உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. இது உடல் இயக்கம், நினைவாற்றல், மகிழ்ச்சிகரமான மனநிலை, ஊக்கம், நடத்தை, அறிவாற்றல், தூக்கம், உற்சாகம் மற்றும் கற்றல் ஆகிய மனநிலைகளுக்கு உதவுகிறது.

    ஒருவருக்கு டோபமைன் அளவு குறைவாக இருந்தால் அவர் சோர்வாக, ஊக்கமில்லாத மனதுடன், மகிழ்ச்சியற்றவராக, மனம் உறுதியான முடிவெடுக்கும் தன்மை இல்லாதவராக இருப்பார். தூக்கமின்மை பிரச்சனைகளும் இருக்கும்.

    உடலில் இயற்கையாக டோபமைனை அதிகரிக்கும் உணவு முறைகள்:

    1) டோபமைனை உருவாக்க நமது உடலுக்கு டைரோசின் என்கிற அமிலோ அமிலம் தேவைப்படுகிறது. அது பாலாடைக்கட்டி, மீன், இறைச்சி, தானியங்கள், பால், பீன்ஸ், சோயா போன்றவற்றில் அதிகம் உள்ளது. மேலும் காபின் அதிகம் உள்ள காபி மற்றும் சாக்லேட் போன்றவை டோபமைன் சுரப்பை அதிகரிக்கும்.

    பாதாம், வால்நட், ஆப்பிள், வெண்ணெய், அவகோடா, வாழைப்பழம், சாக்லேட், பச்சை இலைக் காய்கறிகள், பச்சை தேயிலை, பீன்ஸ், ஓட்ஸ், ஆரஞ்சு, பட்டாணி, எள் மற்றும் பூசணி விதைகள், தக்காளி, மஞ்சள், தர்பூசணி மற்றும் கோதுமை ஆகியவை டோபமைனை அதிகரிக்கும் உணவுகள் ஆகும்.

    2) ஒரு இலக்கை நிர்ணயித்து அதற்காக உழைத்து அதில் வெற்றி காணும்போது நமது உடல் அதிக டோபமைனை வெளியிடுகிறது. புதிய விஷயங்களை ஆர்வமாகக் கற்றுக்கொள்ளும் போதும் டோபமைன் அதிகரிக்கிறது.

    3) மிதமான சூரிய ஒளியில் 20 நிமிடம் தினமும் செலவிடும்போது டோபமைன் சுரப்பு அதிகரிக்கிறது.

    4) ஆழ்ந்த சுவாசம், பிரணாயாமம், மூச்சுப் பயிற்சி இவை டோபமைன் அளவை அதிகரிக்கும். மூச்சை உள்ளிழுத்து சிறிது நேரம் வைத்து, பின்பு அதை வெளியே விடவும். உடனடியாக டோபமைன் அளவு அதிகரிப்பதைப் பார்க்கலாம்.

    5) தியானம், உடற்பயிற்சி, யோகா, மசாஜ், நடப்பது, புத்தகம் படிப்பது போன்றவை டோபமைன் அளவை அதிகரிக்க உதவுகிறது.

    6) சக மனிதர்களுக்கும், கடவுளுக்கும் நன்றி சொல்லும் போது டோபமைனை மூளை அதிக அளவில் வெளியிடுகிறது. எனவே, சிறிய அளவு நன்மை கிடைத்தாலும் அதற்காக நன்றி சொல்வது உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

    சித்த மருத்துவம்:

    1) நெல்லிக்காய் லேகியம்: காலை 5 கிராம், இரவு 5 கிராம் வீதம் உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.

    2) அசுவகந்தா லேகியம்: காலை, இரவு ஐந்து கிராம் வீதம் உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்

    3) பிரம்மி மாத்திரை: காலை, இரவு ஒரு மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும்.

    4) வல்லாரை மாத்திரை: காலை, இரவு ஒரு மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும்.

    • மன உணர்வுகள் அதிகரித்து, தாம்பத்ய குறைபாடு நீங்கும்.
    • மனதுக்கும் உற்சாகத்தை தரும்.

    தாம்பத்திய குறைபாடு என்பது நரம்பு, ஹார்மோன், உடல் நலன் மற்றும் உளவியல் காரணிகளை அடிப்படையாக கொண்டது. இந்த பிரச்சனை நீங்க என்ன உணவுகள், பழக்கவழக்கங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

    எல்-ஆர்ஜினின், எல்-கார்னிடைன், எல்.சிட்ருலின், எல்.டைரோசின் ஆகிய அமினோ அமிலங்கள், புரோமிலென் என்ற என்சைம், லைக்கோபீன், ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் உங்களுக்கு பயன்தரும். அந்த சத்துக்கள் நிறைந்த உணவுகள்:-


    காய்கறிகள்:

    தக்காளி, கேரட், பீட்ரூட், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, முருங்கைக்காய், தூதுவளை கீரை, தாளிக்கீரை, பசலைக்கீரை


    பழங்கள்:

    நேந்திரன் வாழை, செவ்வாழை, பேரிச்சை, அத்திப்பழம், மாதுளம்பழம், மாம்பழம், பலாப்பழம், துரியன் பழம், தர்பூசணி, ஆரஞ்சு, எலுமிச்சை.


    விதைகள்:

    பூசணி விதைகள், எள், சோயாபீன்ஸ், வேர்க்கடலை, பட்டர் பீன்ஸ், பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு, கடற்பாசிகள். சாக்லேட்டுகள், கருப்பு திராட்சை


    அசைவ உணவுகள்:

    கோழி இறைச்சி, வான்கோழி, சிகப்பு இறைச்சி வகைகள், மத்திச்சாளை, சூரை மீன், கணவாய், இறால், நண்டு, முட்டை, பால்


    அரிசி:

    சிவப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா, கறுப்பு கவுனி அரிசி

    மூலிகைகள்:

    சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் மூலிகைகளில், நெருஞ்சில், இந்தியன் ஜின்செங் என்றழைக்கப்படும் அமுக்கராக் கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, பால் மிதப்பன் கிழங்கு, வாலுழுவை, பூமி சர்க்கரைக் கிழங்கு, நிலப்பனைக் கிழங்கு, மதனகாமப் பூ, குங்குமப் பூ, பூனைக்காலி விதை போன்றவை நரம்புக்கு நல்ல வலுவைத் தந்து தாம்பத்தியத்தில் திருப்தியைத் தரும்.

    சித்த மருந்துகளில் மதன காமேஸ்வர லேகியம், சாலாமிசிறி லேகியம் ஆகியவற்றை தலா 1-2 கிராம் வீதம் காலை, இரவு இரு வேளை சாப்பிட வேண்டும்.

    மேலே குறிப்பிட்டுள்ள உணவு வகைகள், மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் உற்சாகம் பெருகும். ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராகும். மன உணர்வுகள் அதிகரித்து, தாம்பத்ய குறைபாடு நீக்கி உடலுக்கும், மனதுக்கும் உற்சாகத்தை தரும்.

    • பெண்களின் அன்றாட நடைமுறைகளை சீர்குலைக்கும்.
    • வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மாதவிடாய் வலியை நீக்க உதவுகின்றன.

    மாதவிடாய் காலமம் சங்கடமான நேரமாக இருக்கலாம். மாதவிடாய் பல விரும்பத்தகாத அறிகுறிகளுக்கு வழிவகுக்கும், மேலும் மாதவிடாய் கால வலி என்பது மிகவும் பொதுவான ஒன்றாகும். அது பெண்களின் அன்றாட நடைமுறைகளை சீர்குலைக்கும்.


    மாதவிடாய் வலியை குறைக்க மருந்துகள் அல்லது வெப்பமூட்டும் பட்டைகள் போன்றவை உதவுகின்றன. மாதவிடாய் காலங்களில் நாம் உண்ணும் உணவுகள் மூலமாக கூட வலியை நீக்க முடியும். மாதவிடாய் காலத்தில் என்ன சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம்.


    பழங்கள்

    பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மாதவிடாய் வலியை நீக்க உதவுகின்றன அவை:

    * பெர்ரி

    * வாழைப்பழங்கள்

    * தர்பூசணிகள்

    * பப்பாளிகள்

    * ஆப்பிள்கள்

    * அத்திப்பழம்

    * ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள்


    காய்கறிகள்

    வீக்கத்தை நிர்வகிக்க காய்கறிகள் சிறந்தவை. அவற்றின் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் இதற்கு காரணமாக திகழ்கிறது. மாதவிடாய் வலியைக் குறைக்க உதவும் சில காய்கறிகள்:

    * ப்ரோக்கோலி

    * சர்க்கரை வள்ளிக்கிழங்கு

    * காலிஃபிளவர்

    நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

    நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மாதவிடாய் வலியை நேரடியாகத் தடுக்காது என்றாலும், அவை மாதவிடாயின் போது ஏற்படும் செரிமான அறிகுறிகளில் இருந்து வலியைப் போக்க உதவும்.

    * முழு தானியங்கள்

    * பீன்ஸ்

    * நட்ஸ்

    * விதைகள்

    கொழுப்பு மீன்

    கொழுப்பு நிறைந்த மீன் உடலில் வீக்கத்தைக் குறைத்து மாதவிடாய் அறிகுறிகளை மேம்படுத்தும். இதற்கு அதன் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் தான் காரணம்.

    * சால்மன் மீன்

    * சூரை மீன்

    * மத்தி மீன்கள்

    * கானாங்கெளுத்தி

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடலின் ஆரோக்கிய சமநிலையை பராமரிப்பது மிகவும் அவசியமான ஒன்று.
    • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்ண வேண்டியது அவசியம்.

    உடலின் ஆரோக்கிய சமநிலையை பராமரிப்பது மிகவும் அவசியமான ஒன்று. அதை செய்ய சில முக்கிய எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்ண வேண்டியது அவசியம். இதில் கவனிக்க வேண்டிய ஒன்று உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறைகளில் மட்டுமே அதிகரிக்க முடியும் என்பது.


    இயற்கையான முறை என்றால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இரு வழிகள் மட்டுமே உள்ளது. ஒன்று உடற்பயிற்சி மற்றொன்று இயற்கையாக உள்ள உணவுகளை உண்ணுவது.

    நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தி உடலை பாதிக்கக்கூடிய கிருமிகளை எதிர்த்துப் போராடும் வகையில் இருந்தால் பெரும்பாலான நோய்களைத் தவிர்த்துவிடலாம். உடம்பின் நோய் எதிர்ப்பு வலுவாக இருக்கும் போது, ஹார்மோன் மற்றும் எதிர்மறை அணுக்களை கட்டுப்படுத்தும் திறன் அதிமாக இருக்கும்.

    இந்த குறிப்பிட்ட உணவுகளை உண்ணுவது ஆரோக்கியமாகவும், நோய்களின்றியும் வாழ சிறந்த வழியாகும். சரி வாங்க இந்த நோயெதிர்ப்பு சக்தியைத் தரும் 15 விதமான உணவுகளைப் பார்க்கலாம்.


    பூண்டு:

    பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும் உதவும். எதிர்ப்பு சக்தியைப் பொறுத்த விஷயத்தில் பூண்டின் பங்கு மிகவும் அருமையானது. இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும், தொற்றுக்களையும் கொல்லவல்லது.


    இஞ்சி:

    நுண்ணுயிர்களுக்கு எதிராகப் போராடும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இதில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் எனப்படும் உடலை காக்கும் பொருள் நிறைந்துள்ளது.


    தயிர்:

    தயிரில் உடலுக்கு நல்லது செய்யும் நுண்ணுயிர்கள் நிறைந்துள்ளன. இந்த நல்ல நுண்ணுயிர்கள் செரிமான உறுப்புகளை குறிப்பாக குடல்பகுதியை நல்ல நிலையில் வைக்க உதவுகின்றன. ஆரோக்கியமன செரிமான மண்டலம் ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்யும்.

    பார்லி-ஓட்ஸ்:

    பார்லியும் ஓட்சும் ஒரு முக்கியமான நார்ச்சத்தான பீட்டா-குளூக்கன் எனப்படும் நுண்ணுயிர் கொல்லும் மற்றும் உடலைக் காக்கும் குணங்களைக் கொண்டுள்ளன. இவை மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

    சர்க்கரைவள்ளிக் கிழங்கு:

    பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படும் இந்த கிழங்கு இணைப்புத் திசுக்களின் உற்பத்திக்கு உதவும். வைட்டமின் ஏ சத்தை அதிகம் கொண்டுள்ளது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடல் சருமத்தை தொற்று மற்றும் நுண்ணுயிர் தாக்குதலில் இருந்து காக்கிறது. உங்கள் சருமம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


    காளான்கள்:

    உடலில் நோய்களோடு போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான ரத்த அணுக்கள் வளர்ச்சிக்கு காளான்கள் உதவுகின்றன. காளான்கள் துத்தநாகம் எனப்படும் ஜிங்க் சத்து மற்றும் பிற ஆரோக்கியம் தொடர்பான பல நன்மைகளையும் கொண்டுள்ளன.

    முட்டை:

    நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் உணவுகளில் அடுத்ததாக வருவது முட்டை. இவற்றில் பல வைட்டமின்கள், குறிப்பாக நோய்களுடன் போராடும் வைட்டமின் டி, பாலுணர்வைத் தூண்டும் மற்றும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் பண்புகள் கொண்டது.


    காபி-டீ

    இவற்றில் வைட்டமின் பி1, சி, ஏ மற்றும் உலோகச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், உலகிலேயே மிக ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. இது மேலும் உணவுப்பாதையை இயற்கையாகவே சுத்திகரிக்க வல்லது. டீ மற்றும் காபி ஆகிய இரண்டுமே முளையை சுறுசுறுப்படையச் செய்யும் குணம் கொண்டவை. உண்மையில், காபியும் டீயும் பல கொடுமையான மனச் சூழ்நிலைகளை தடுக்க வல்லவை.


    தேங்காய்:

    தேங்காய் எண்ணெயும் தேங்காயும் பெருமளவு ஆரோக்கியமான பண்புகளைக் கொண்டவை. இதிலுள்ள லாரிக் அமிலம் உடலில் சென்று மோனோலாரினாக மாற்றமடைந்து விடும். நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கவில்லை என்றால், மோனோலாரின் என்ற பொருள் தாய்ப்பாலில் அதிகம் உள்ளதுடன் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் வலுப்படுத்த உதவுகிறது.


    பெர்ரி பழங்கள்:

    பெர்ரி பழங்கள் இல்லாமல் சத்தான உணவு என்பது முழுமையடையாது. புளூபெர்ரி மற்றும் ராஸ்ப்பெர்ரிப் பழங்கள், உடலைக் காக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே வலுப்பெறச்செய்கிறது. புளூபெர்ரிப் பழங்கள் மற்ற பழங்களைக் காட்டிலும் குறைந்த சர்க்கரை அளவை கொண்டுள்ளதால், இவை ஆரோக்கியமானவையாக உள்ளன. இதில் அதிகம் உள்ள குளூட்டாமின் அமினோ அமிலங்களுக்கு நன்மை பயப்பதோடு, உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டது.


    எலுமிச்சை:

    எலுமிச்சையில் அதிக அளவு வைட்டமின் சி சத்து காணப்படுகிறது. இதில் காணப்படும் பிற சத்துக்களும் இணைந்து நோய் எதிர்ப்பு சக்திக்கு உந்துதலை அளிக்கிறது. பச்சை நிறக் கீரைகள் மற்றும் காய்கறிகள், வைட்டமின் பி1, ஏ மற்றும் சி சத்துக்களைக் அதிகம் கொண்டவை. இவற்றில் துத்தநாகச் சத்தும் அதிகம் உள்ளது.


    பச்சைக் காய்கறிகள்-கீரைகள்:

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், இந்த பச்சைக் காய்கறி மற்றும் கீரைகள் ஒரு சிறந்த உணவாகத் திகழ்கின்றன. எனவே மேற்கூறப்பட்ட உணவுகளை தவறாமல் உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொண்டு நோய் வந்தபின் அவதியுறுவதை விட வருமுன் காப்பவர்களாக, புத்திசாலிகளாக இருங்கள்.

    • நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க மருந்து மாத்திரைகள் தேவையில்லை.
    • உணவுகளின் மூலமே நோய் எதிர்ப்பு காரணிகளை உடலில் உருவாக்கலாம்.

    உடலில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க மருந்து மாத்திரைகள் தேவையில்லை. நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவுகளின் மூலமே நோய் எதிர்ப்பு காரணிகளை உடலில் உருவாக்கலாம்.

    இயற்கையில் விளைந்த பழங்களிலும், காய்கறிகளிலும், மூலிகைகளிலும் கொட்டிகிடக்கிறது ஊட்டசத்துக்கள். உடலில் தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முதலிடம் வகிப்பது வைட்டமின் சி, அடுத்தது வைட்டமின் ஏ மற்றும் பி.


    வைட்டமின் சி பெரிய நெல்லிக்காய், கொய்யாப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, குடைமிளகாய், போன்றவற்றில் வைட்டமின் சி அதிகமாக காணப்படுகிறது. புற்று நோயை கூட கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. திசுக்களின் வளர்ச்சிக்கும், உயிரணுக்களை பாதுகாக்கவும் பயன்படுகிறது.

    வைட்டமி சி

    வைட்டமின் சி அடங்கிய எலுமிச்சை பழச்சாறு நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்க உதவுகிறது. அமிலத்தன்மை வாய்ந்த சூழ்நிலையில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வேகமாக வளர்ச்சியுறும்.

    மேலும் நன்மை செய்யும் பாக்டீரிக்கள் வாழ்வதற்கு வெப்பமான சூழ்நிலையை பராமரிக்க எலுமிச்சைபழச்சாறு உதவுகிறது. சாலட், அசைவ உணவுகள் போன்றவற்றில் எலுமிச்சை பழச்சாறு கலந்து எடுத்துக்கொள்ளலாம்.


    கொய்யாப்பழம், சுலபமாக எல்லோராலூம் வாங்கக்கூடிய பழம். ஆனால் அளப்பறிய வைட்டமின்களை தன்னகத்தே கொண்டது. வைட்டமின் பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், போன்ற ஊட்டச்சத்துக்களை நிறைந்துள்ளது.

    எலும்புகள் வளர்ச்சிக்கும், உடலுக்கு உறுதியையும் தருகிறது. பொட்டாசியம் சத்து கொய்யப்பழத்தில் அதிகம் உள்ளது. கொய்யாப்பழத்திலிருக்கும் மெக்னீஷியம் பிற உணவுகளிலிருந்து சத்துக்களை உறிஞ்சு எடுத்து உடலுக்கு அளிக்கிறது.

    இதன் காரணமாக நாம் உண்ணும் உணவுகளில் உள்ள முழு ஊட்டச்சத்தும் உடலுக்கு சென்றடைகிறது. நோய் காரணிகளை எதிர்த்து போராடுவதோடு, நோய் தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.

    வைட்டமின் ஏ

    வைட்டமின் ஏ அகத்தி கீரை, பொன்னாங்கன்னி கீரை, முருங்கைகீரை, கேரட், சக்கரை வள்ளி கிழங்கு, முட்டை, பப்பாளி பழம், மாம்பழம், பசலைக்கீரை, ஆட்டிறைச்சி, கோழி, மாட்டிறைச்சி இவற்றின் ஈரல், வெண்ணெய், நெய் ஆகிவற்றில் உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.


    வைட்டமின் பி

    வைட்டமின் பி- நோய் எதிர்ப்பு மண்டலத்தின் உயிரி ரசாயன விளைவுகளுக்கு உதவுகிறது. பாதாம், புரோக்கோலி, பால், முட்டை, சிறு தானியங்கள், கீரை வகைகளில் அதிகம் காணப்படுகிறது.

    ஒமேகா 3

    ஓமேகா 3 பாலி அன்ச்சாச்சுரேட் கொழுப்பு அமிலங்கள் இதயத்தின் வளர்ச்சிதை மாற்றம், அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற திறனை மேம்படுத்துகிறது. சால்மன் மீன், ஆளிவிதை, அவகேடோ, வால்நட், முட்டை, ஆலிவ் ஆயில் ஆகியவற்றில் நிறைந்துள்ளது. பூசணி விதைகளில் ஆளிவிதைகளுக்கு அடுத்தபடியாக ஓமேகா 3 உள்ளது. இதனையும் சாலட் போன்ற உணவுகளோடு சேர்த்து எடுத்து கொள்ளலாம்.


    தயிர்

    தயிரிலுள்ள நல்ல பாக்டிரியாக்கள் (புரோபயாடிக்) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, உடலுக்கு நல்ல சக்தியையும் அளிக்கிறது. தயிராக இல்லாமல் மோராக தினமும் எடுத்துக்கொள்ளலாம். உடல்எடையை குறைப்பதிலும், உடலை குளிர்ச்சியாக வைப்பதிலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதிலும் மிக முக்கிய இடம் வகிக்கிறது மோர்.

    மக்னீஷயம், சிறுநீரகச் செயல்பாட்டிற்கும், ஒவ்வொரு உறுப்புகளின் செயல்பாட்டிற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் அவசியமானது. நட்ஸ், கீரைகள், கோதுமை, விதைகள் இவற்றில் காணப்படுகிறது. துத்தநாகம்-பீன்ஸ், தேங்காய், கடலை பருப்பு, சிப்பி வகை மீன்கள், பருப்புக்கள், எள், தயிர், பால்பொருட்கள் இவற்றில் காணப்படுகிறது.

    புராக்கோலியில் மினரல்ஸ், வைட்டமின் சி, ஏ அடங்கியுள்ளது. இதனை வாரத்தில் இரண்டு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மஞ்சள், இஞ்சி, சோம்பு, மிளகு இவை போன்ற மூலிகைகள் பல்வேறுவகையான நோய்களை அண்டவிடாமல் ஆரம்பத்திலே அழிக்கிறது.

    பச்சை பட்டாணியில் வைட்டமின் ஏ,சி,பி1,பி6 போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாய் உள்ளது கராட்டினாய்டுகள், பினோலிக் அமிலங்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளது. இந்த சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.



    வைட்டமின் ஈ அடங்கிய பாதாம் அதிக நோய் எதிர்ப்பு சக்தியையும் ஆரோக்கியத்தையும் தரக் கூடியது. இரும்பு சத்து, கால்சியம், நார்ச்சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது. புரதமும், நார் சத்துக்களும் நிறைந்த பருப்புக்களை உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.

    துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, சுண்டல் வகைகள், தானியங்கள் இவற்றில் எதேனும் ஒன்றை தினமும் எடுத்து கொள்ளலாம். நாளொன்றிற்கு முப்பது கிராம் வரை பருப்புகளை சேர்த்து கொள்ள வேண்டும்.

    தண்ணீர், காலையில் வெறும் வயிற்றில் காபி, தேநீர் குடிப்பதை தவிர்த்து, தண்ணீரை குடிக்க வேண்டும். ரத்த ஓட்டம் சீராகி, நச்சுக்கள் அகற்றபட்டு, உடல் ஆரோக்கியம் பெறும். நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பதில் இயற்கை உணவுகள், இயற்கையில் விளைந்த பழங்கள், காய்கறிகள் இவற்றிற்கே முதலிடம்.

    இயற்கை உணவுகளினால் உடலுக்கு முழுமையான வைட்டமின்கள், தாதுஉப்புகள், ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. எனவே ரெடிமேட் உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.

    உணவுகள் மட்டுமே ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுத்துவிடாது. போதுமான அளவு உடற்பயிற்சியும் அவசியம். இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது.

    உணவு இடைவெளியே இல்லாமல் சாப்பிட்டு கொண்டே இருக்கக்கூடாது. உணவு நன்றாக செரிமானம் அடைந்த பிறகே, செரிமானம் அடைவதற்கு இடைவெளி தந்து, அடுத்தவேளை உணவை உண்ண வேண்டும். இவ்வாறு பழக்கமாக்கிக் கொண்டால், உடலுக்கு வேறெந்த மருந்தும் தேவையே இல்லை. 

    நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் வைட்டமின்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அவை நிறைந்திருக்கும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம்.
    நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் வைட்டமின்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அவை நிறைந்திருக்கும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம்.

    * வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு ரத்தத்தில் ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவி செய்யும். நோய் பாதிப்பின்போதும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வழிவகை செய்யும். எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை பழம், ஸ்ட்ராபெர்ரி, ப்ராக்கோலி, கீரை, தக்காளி போன்றவற்றில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. அத்தகைய உணவுகளை முறையாக சாப்பிட்டு வருவதன் மூலம் ஆரோக்கிய வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.

    * வைட்டமின் பி6, பி 12 ஆகியவைகளும் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவை. வைட்டமின் பி 12 மாமிச உணவு வகைகளில் அதிகமாக இருக்கும். அசைவ பிரியர்கள் முட்டை, இறைச்சி, மீன் வகைகளை ருசிக்கலாம். பால் மற்றும் பால் பொருட்களிலும் பி 12 சத்து இருக்கிறது. அவை நோய் தடுப்பு ஊக்க மருந்தாக செயல்படும். தானிய வகைகள், பச்சைக்காய்கறிகளில் பி 6 சத்து உள்ளது.

    * வைட்டமின் ஈ, நோய் தொற்றுக்களை எதிர்த்து போராட உதவும். பல்வேறு வகை பாக்டீரியாக்கள், வைரஸ்களை எதிர்த்து போராடி வலிமையான நோய் எதிர்ப்பு அமைப்பை உருவாக்குவதில் அது முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பு அணுக்கள் உருவாக்கத்திற்கும் உதவுகிறது. பாதாம், வேர்க்கடலை, சோயா எண்ணெய், கோதுமை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றிலும் வைட்டமின் ஈ நிறைந்திருக்கிறது.

    * ஆப்பிள் வினிகரையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் போன்றவற்றை சீராக பராமரிக்க உதவும்.

    * உடலில் இருந்து நச்சுத்தன்மையை அகற்றுவதற்கு சீரான இடைவெளியில் தண்ணீர் பருகி வருவது அவசியமானது. அதுவும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

    * பூண்டுவை சமையலில் சேர்த்து வருவதும் நோய் தொற்றை எதிர்த்து போராட உதவும். இஞ்சியையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    * 6 முதல் 8 மணி நேரம் தூங்கும் வழக்கத்தை முறையாக கடைப்பிடித்து வருவதும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
    உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதன் மூலம் பருவகால காய்ச்சல் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிடலாம். காய்ச்சலை நெருங்கவிடாமல் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் உணவுகளை பார்க்கலாம்.

    உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதன் மூலம் பருவகால காய்ச்சல் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிடலாம். காய்ச்சலை நெருங்கவிடாமல் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் உணவுகளின் பட்டியல்:

    ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி போன்ற பழங்களில் வைட்டமின் சி நிறைந்திருக்கும். இவற்றில் ஆன்டி ஆக்சிடெண்ட் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மிளகையும் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அதிலும் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது.

    மழை காலத்தில் வழக்கமான டீ, காபியை தவிர்த்துவிட்டு இஞ்சி டீ பருகுவது நல்லது. இது உடலுக்கு புத்துணர்ச்சி வழங்குவதோடு காய்ச்சல், மார்பு சளி போன்ற பாதிப்புகளை கட்டுப்படுத்தும். இஞ்சியை சமையலிலும் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

    நோய் தொற்றுகளுக்கு எதிராக போராடுவதில் பூண்டுவுக்கு முக்கிய பங்கு உண்டு. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அது அதிகரிக்க செய்யும். ரத்த அழுத்தம், தமனிகளின் செயல்பாடுகளை சீராக பராமரிக்கும் தன்மையும் பூண்டுவுக்கு உண்டு.

    முட்டை கோஸ், கீரை போன்ற பச்சைக்காய்கறிகளில் வைட்டமின் சி, இ மட்டுமின்றி ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. பிராக்கோலி, பீன்ஸ், புடலங்காய், பட்டாணி போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பப்பெற்றவை. அவைகளை தவறாமல் சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    தயிர், மோர், லசி போன்ற பால் பொருட்கள் எளிதில் ஜீரணமாக உதவி புரிபவை. அவை குடலுக்கு நலம் சேர்ப்பவை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு நோய் தொற்றுகள், வீக்கம் போன்ற பாதிப்புகளையும் தடுக்கும் தன்மை கொண்டவை. வளர்சிதை மாற்றத்தையும் ஒழுங்குபடுத்துபவை.

    மஞ்சள், கிராம்பு, லவங்கப்பட்டை போன்ற மசாலா பொருட்களும் ஆன்டி ஆக்சிடெண்ட் அதிகம் கொண்டவை. ரோஸ்மேரி, துளசி, ஓமம் போன்ற மூலிகைகள் காய்ச்சல் அறிகுறிகளை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டவை.

    மூலிகை டீ பருகி வருவதும் நல்லது. அது நோய்கிருமிகள் மற்றும் நோய்களுக்கு எதிராக போராட உதவும்.

    சளி முதல் புற்றுநோய் வரை அனைத்துவிதமான வியாதிகளிலும் இருந்து உடல் நலனை பாதுகாப்பதில் மஞ்சளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

    இரும்பு சத்து குறைபாடு கொண்டவர்கள் சிவப்பு குடமிளகாயை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். அதிலும் நோய் எதிர்ப்பு நிறைந்துள்ளது.
    தலைவலிக்கும் நேரத்தில் சில உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அப்படி தலைவலி இருக்கும்போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று இங்கே பார்ப்போம்.
    சிலருக்கு மன அழுத்தம், வேலைப்பளு ஆகியவற்றின் காரணமாக, அடிக்கடி தலை வலிக்கும். உடனே எல்லோரும் செய்கின்ற முதல் விஷயம் நல்ல ஸ்டிராங்கான காபி குடிக்க வேண்டும் என்பது தான். அதேபோல், சில சமயம் நல்ல பசியுடன் சாப்பிடாமல் இருந்தால் கூட சிலருக்கு தலை வலிக்கும். இப்படி தலைவலிக்கும் நேரத்தில் சில உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அப்படி தலைவலி இருக்கும்போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று இங்கே பார்ப்போம்.

    * நம்மில் பலரும் தலைவலி வந்ததும் முதலில் தாவுவது ஸ்டிராங்கான காபிக்கு தான். காபி குடித்தவுடன் தலைவலி காணாமல் போனதுபோல் நினைத்துக் கொள்வோம். ஆனால் உண்மை அது இல்லை. சில சமயங்களில் மிக ஸ்டிராங்கான காபியை நீங்கள் குடிப்பது உங்களுடைய தலைவலியைத் தூண்டிவிட்டு, அதிகரிக்கவே செய்யும். அதனால் காபி பிரியர்கள் தலைவலிக்கும் போது அதைக் குடித்துவிடாதீர்கள்.

    * சிலருக்கு பால் சம்பந்தப்பட்ட பொருள்கள் என்றாலே அலர்ஜியாக இருக்கும். தலைவலி இருக்கும்போது சீஸ் சேர்க்கப்பட்ட உணவுப் பொருள்கள் ஏதாவது சாப்பிட்டால், ஒற்றைத் தலைவலி அதிக நேரம் உங்களை விடாது.

    * சிலருக்கு மது அருந்தியவுடன் மூன்று மணி நேரத்துக்குள்ளாக ஒற்றைத் தலைவலி வர ஆரம்பித்துவிடும். ஒரு ஆய்வின் முடிவின் படி, மது அருந்துபவர்களில் கிட்டதட்ட 29 முதல் 36 சதவீதம் வரையிலானவர்களுக்கு ஒற்றைத் தலைவலி பாதிப்பு இருக்கிறது.

    * நாமே வாங்கி, சுத்தம் செய்வதை விட தற்போது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை மிக அதிக அளவில் சாப்பிடுகிறோம். பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அடிக்கடி சாப்பிடுகிறவர்களுக்கு 5 சதவீதம் பேருக்கு அதிகபட்சமாக சாப்பிட்டு ஒரு மணி நேரத்திலும் குறைந்த அளவாக சாப்பிட்ட நிமிடம் முதலே ஒற்றைத் தலைவலி உருவாக ஆரம்பித்து விடுகிறது. அதிலுள்ள அதிக அளவிலாக நைட்ரேட் ஒற்றைத் தலைவலியை உண்டாக்குகிறது.



    * நூடுல்ஸ், பாஸ்தா போன்ற சைனீஸ் உணவுகளும் உங்களுடைய ஒற்றைத் தலைவலியை அதிகரிக்கச் செய்யும் காரணியாக இருக்கும்.

    * சர்க்கரை உடலுக்குக் கேடு என்பதால் சிலர் செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால் நாம் பயன்படுத்தும் செயற்கை இனிப்புகள் நம்முடைய ஒற்றைத் தலைவலிக்கு காரணமாக இருப்பதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

    * சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மிக அதிக அளவில் இருக்கிறது. அது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். நச்சுக்களை நீக்கும் என்பதெல்லாம் உண்மை தான். ஆனால் ஒற்றைத் தலைவலி உண்டாவதற்கு 11 சதவீதம் சிட்ரஸ் பழங்கள் தான் காரணமாக இருக்கின்றன என சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

    * டார்க் சாக்லேட் உடம்புக்கு நல்லது தான். ஆனாலும் 2 முதல் 22 சதவீதம் வரையிலாக மக்களுக்கு சாக்லெட் சாப்பிடுவதால் ஏற்படும் சென்சிடிவால் தலைவலி பிரச்சனை உண்டாகிறதாம்.

    * குல்டன் என்னும் சத்துக்கள் அடங்கிய கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் அதிகமாக எடுத்துக் கொண்டாலும் அதை சிலருடைய உடல் ஒத்துழைக்காமல் போகும்போது, ஒற்றைத் தலைவலி உண்டாகும்.
    மனிதர்கள் உண்ணும் உணவில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுகின்றன என்ற அதிர்ச்சித் தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கின்றனர்.
    மனிதர்கள் உண்ணும் உணவில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுகின்றன என்ற அதிர்ச்சித் தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கின்றனர்.

    தங்களால் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட ஒவ்வொரு மாதிரியிலும், ஒன்பது வெவ்வேறு வகை பிளாஸ்டிக் பொருட்களின் சிறிய துகள்கள் காணப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

    உணவின் மூலம் குடலுக்குள் செல்லும் பிளாஸ்டிக் துகள்கள், உடலின் நோய் எதிர்ப்புக் கட்டமைப்பைப் பாதிப்பதோடு, தீங்கு விளைவிக்கக்கூடிய வைரஸ்களை விருத்தி செய்வதற்கும் வழிவகுக்கின்றன.

    டுனா எனப்படும் சூறை மீன், லாப்ஸ்டர் மற்றும் இறால் உணவுகளில் அதிக அளவிலான பிளாஸ்டிக் காணப்பட்டதை முந்தைய ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன.

    உலகில் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் 5 சதவீதம் கடலில் போய்ச் சேருகிறது என்றும், அங்கு அது படிப்படியாக உடைந்து கடல்வாழ் உயிரினங்களின் உணவுடன் கலக்கிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

    உணவுகள் அடைக்கப்பட்டுவரும் பாக்கெட்டுகளின் மூலமாகவோ உணவை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் நுட்பங்கள் மூலமாகவோ உணவில் பிளாஸ்டிக் சேருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    உலகெங்கும் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு கடிவாளம் போடப்பட்டு வருகிறது. அந்த நடவடிக்கைகள் இன்னும் வேகம் பிடிக்க வேண்டும்!
    ×