search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Football Stadium"

    • சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கால்பந்து விளையாட்டுத் திடல்கள் தனியாருக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
    • சென்னை மாநகராட்சியின் இந்த முடிவிற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கால்பந்து செயற்கைப் புல் விளையாட்டு திடல்களை, தனியார் பராமரிப்புக்கு வழங்கி கட்டணம் நிர்ணயம் செய்ய நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மாநகராட்சி திரும்ப பெற்றுள்ளது.

    சென்னையில் சைதாப்பேட்டை, வியாசர்பாடி , திரு விக நகர் உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான செயற்கை புல்தரை கால்பந்து விளையாட்டுத் திடல்கள் தனியாருக்கு ஒப்படைக்கப்படும் என்றும், இனி அங்கு விளையாடச் செல்லும் இளைஞர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 120 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சென்னை மாநகராட்சியின் இந்த முடிவிற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த முடிவை திரும்ப பெறுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    • மைதானத்திற்குள் ரசிகர்களில் சிலர் பட்டாசுகளை கொளுத்தி தூக்கிப் போட்டனர்.
    • இதனால் அங்கு ரசிகர்களிடையே வன்முறை உருவானது.

    அங்காரா:

    துருக்கி நாட்டில் உள்ள பர்சா நகரில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் குர்து இன மக்கள் அதிகம் வாழும் பகுதியைச் சேர்ந்த அணி பங்கேற்று விளையாடியது. அந்த அணிக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்த்தரப்பினர் கோஷங்களை எழுப்பினர்.

    தொடர்ந்து ரசிகர்களிடையே மோதல் வெடித்த நிலையில், மைதானத்திற்குள் சிலர் பட்டாசுகளைக் கொளுத்தி தூக்கிப் போட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களையும் மைதானத்திற்குள் வீசி எறிந்தனர். இதனால் அங்கு ரசிகர்களிடையே வன்முறை உருவானது.

    இதையடுத்து போலீசார் விரைந்து வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

    ×