search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Football world cup"

    • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • 2வது பாதியில் இங்கிலாந்து வீரர் 2 கோல்கள் அடித்தார்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு நடைபெற்ற பி பிரிவு ஆட்டம் ஒன்றில் வேல்ஸ் - இங்கிலாந்து அணிகள் மோதின. முதல் பாதியில் எந்த அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    2வது பாதி ஆட்டத்தின் 50 வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் மார்கஸ் ராஷ்போர்டு தமது அணிக்கான முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 51வது நிமிடத்தில் மற்றொரு வீரர் பில் போடன் ஒரு கோல் அடித்து வெற்றி வாய்ப்பை உறுதி செய்தார்.

    68வது நிமிடத்தில் மார்கஸ் ராஷ்போர்டு மீண்டும் ஒரு கோல் அடிக்க, ஆட்ட நேர முடிவில் 3-0 என்ற கோல்கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பி பிரிவில் 7 புள்ளிகளுடம் அந்த அணி முதலிடம் பிடித்தது.

    உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நாளை நடக்கவுள்ள 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியம்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றனர். #FIFA2018 #fifa2018 #England #Belgium
    செயின்ட் பீட்டர்ஸ்பர்க்:

    21-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த கால்பந்து திருவிழா முடிய இன்னும் 2 ஆட்டங்களே எஞ்சியுள்ளன.

    இறுதிப்போட்டி வருகிற 15-ந்தேதி நடக்கிறது. இதில் 1998-ம் சாம்பியனான பிரான்ஸ்- குரோஷியா அணிகள் மோதுகின்றன.

    அதற்கு முன்னதாக 3-வது இடத்துக்கான ஆட்டம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி நாளை (14-ந்தேதி) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    இதில் பெல்ஜியம்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. எந்த அணி 3-வது இடத்தை வெல்லபோகிறது? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெல்ஜியம்- இங்கிலாந்து அணிகள் இந்த உலகக்கோப்பையில் மோதுவது இது 2-வது முறையாகும். ‘லீக்’ ஆட்டத்தில் பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று இருந்தது. 16 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே அணிகள் 2-வது முறையாக மோதுகின்றன. 2002-ல் பிரேசில்- துருக்கி அணிகள் 2 தடவை மோதின.

    இந்தப்போட்டி தொடரில் சிறப்பாக விளையாடிய பெல்ஜியம் அதிர்ஷ்டம் இல்லாமல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. அரை இறுதியில் 0-1 என்ற கணக்கில் பிரான்சிடம் தோற்றது.

    பெல்ஜியம் அணி 1986-ல் 4-வது இடத்தை பிடித்தே சிறந்த நிலையாக இருக்கிறது. தற்போது அதில் இருந்து முன்னேற்றம் காண இங்கிலாந்தை வீழ்த்தி 3-வது இடத்தை பிடிக்கும் ஆர்வத்துடன் உள்ளது.

    பெல்ஜியம் அணியில் ஈடன் ஹசாட், லுகாகு, டுபுரு யன், பெலானி போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

    1966-ம் ஆண்டு சாம்பியான அந்த அணி இதற்கு முன்பு 1990-ல் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இத்தாலியிடம் தோற்று இருந்தது. தற்போது அதே மாதிரி நடந்துவிடாமல் இருக்க வெற்றி பெற போராடும். இங்கிலாந்து அணியில் ஹாரிகேன், லிங்கார்டு, ஸ்டெர்லிங் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகளும் 21 முறை மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 15-ல், பெல்ஜியம் 1-ல் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டம் ‘டிரா’ ஆனது.

    இங்கிலாந்து அணி அரை இறுதியில் குரோஷியாவிடம் தோற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. #FIFA2018 #fifa2018 #England #Belgium
    உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #FIFA2018 #WorldCup2018 #france #belgium
    செயின்ட் பீட்டர்ஸ்பர்க்:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இந்த போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. லீக், ‘நாக்-அவுட்’ மற்றும் கால்இறுதி சுற்று ஆட்டங்கள் முடிவில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா ஆகிய 4 அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.

    இதில் முதலாவது அரைஇறுதிப்போட்டி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்திய நேரப்படி நள்ளிரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணி, 3-வது இடத்தில் இருக்கும் பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.

    1998-ம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ் அணி 3-வது முறையாக உலக கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் உத்வேகத்துடன் உள்ளது. அந்த அணி 2006-ம் ஆண்டில் 2-வது இடம் பெற்று இருந்தது.

    பெல்ஜியம் அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் தாகத்துடன் உள்ளது. 1986-ம் ஆண்டு உலக கோப்பையில் 4-வது இடம் பெற்றதே அந்த அணியின் சிறந்த நிலையாக உள்ளது.

    பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் நடப்பு உலக கோப்பை போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காமல் அரைஇறுதிக்குள் தடம் பதித்து இருக்கின்றன. பிரான்ஸ் அணி லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா (2-1), பெரு (1-0) அணிகளை வென்றது. டென்மார்க் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல் எதுவுமின்றி டிரா கண்டது. 2-வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவை (4-3) வெளி யேற்றியது. கால் இறுதியில் 2 முறை சாம்பியனான உருகுவே (2-0) அணியை வீழ்த்தியது.

    பெல்ஜியம் அணி லீக் ஆட்டங்களில் பனாமா (3-0), துனிசியா (5-2), இங்கிலாந்து (1-0) அணிகளை தோற்கடித்தது. 2-வது சுற்று ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீட்டுக்கு அனுப்பியது. கால்இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் 5 முறை சாம்பியனான பிரேசிலை சாய்த்தது. பெல்ஜியம் அணி தனது முதல் 5 ஆட்டங்களில் 14 கோல்கள் அடித்து முன்னிலை வகிக்கிறது.

    பெல்ஜியம் அணியில் ரோம்லு லுகாகு (4 கோல்), கேப்டன் எடன் ஹசார்ட் (2 கோல்), கெவின் டி புருனே, நாசெர் சாட்லி, மரோன் பெல்லாய்னி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். அந்த அணியின் கோல் கீப்பர் கோர்ட்டோஸ் தடுப்பு அரணாக செயல்படுவதில் வல்லவர். அவரது சிறப்பான செயல்பாடு தான் கால்இறுதியில் வலுவான பிரேசில் அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தது.

    பிரான்ஸ் அணியில் கைலியன் பாப்பே (3 கோல்), அன்டோன் கிரிஸ்மான் (3 கோல்), பால் போக்பா, ஆலிவர் ஜீருட் ஆகியோர் நட்சத்திர வீரர்களாக ஜொலிக்கிறார்கள். இரு அணிகளின் தாக்குதல் ஆட்டமும், தடுப்பு ஆட்டமும் சிறப்பாக இருந்து வருகிறது. எனவே இந்த ஆட்டத்தில் வெற்றியை ருசிக்க போவது யார்? என்பதை கணிப்பது எளிதான காரியம் அல்ல. எந்த அணி முதலில் கோல் அடிக்கிறதோ? அந்த அணியே வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

    உலக கோப்பை போட்டியில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் இதுவரை 2 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இந்த 2 ஆட்டங்களிலும் பிரான்ஸ் அணி தான் வென்றுள்ளது. அதாவது பிரான்ஸ் அணி 1938-ம் ஆண்டில் முதல் சுற்று ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கிலும், 1986-ம் ஆண்டில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கிலும் வென்று இருந்தது. தற்போது 3-வது முறையாக உலக கோப்பையில் சந்திக்கின்றன. இறுதிப் போட்டியில் நுழைய இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் நிச்சயம் கால்பந்து ரசிகர்களுக்கு அருமையான விருந்தாக இருக் கும் என்பதில் அய்யமில்லை.

    இன்றைய போட்டி குறித்து பிரான்ஸ் அணியின் தடுப்பு ஆட்டக்காரர் ரபெல் வரானே கருத்து தெரிவிக்கையில், ‘பெல்ஜியம் அணி இளம் வீரர்களை அதிகம் கொண்டது. இருப்பினும் அவர்கள் முதிர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறார்கள். இந்த ஆட்டம் கடினமானது என்பது எங்களுக்கு தெரியும். தரமான வீரரான ரோம்லு லுகாகு உடல் ரீதியாக எந்தவொரு அணியின் தடுப்பு ஆட்டத்துக்கும் பிரச்சினை அளிப்பார். அவரது இந்த முயற்சிக்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். எடன் ஹசார்ட் பந்தை நன்றாக கடத்தி செல்லக்கூடியவர். அவருக்கு நாங்கள் இடம் அளிக்காத வகையில் விளையாடுவோம். அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம்’ என்றார்.

    பெல்ஜியம் அணியின் நடுகள வீரர் கெவின் டி புருனே அளித்த பேட்டியில், ‘உலக கோப்பை போட்டியில் அரைஇறுதி ஆட்டத்துக்குள் வந்த பிறகு ஒருபோதும் சாதாரண எதிரணியை எதிர்பார்க்க முடியாது. பிரான்ஸ் அணிக்கு எதிராக நாங்கள் கடுமையாக மல்லுக்கட்டுவோம். அந்த அணிக்கு எதிராக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம். முடிவில் களத்தில் யார் எல்லா வகையிலும் சிறப்பாக செயல்படுகிறார்களோ? அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். அது தான் கால்பந்து ஆட்டம்’ என்று தெரிவித்தார். #FIFA2018 #WorldCup2018 #france #belgium
    ஸ்பெயின் அணியின் தோல்வி எதிரொலியாக அந்த அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ ஹியரோ பதவி விலகியுள்ளார். #fernandohierro #spain #worldcup2018
    மாட்ரிட்:

    உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஸ்பெயின் அணியின் பயிற்சியாளராக ஜூலென் லோப்டெகு இருந்தார். ரியல் மாட்ரிட் கிளப்பின் பயிற்சியாளர் பொறுப்புக்கு அவர் பேச்சுவார்த்தை நடத்தியதை அறிந்த ஸ்பெயின் கால்பந்து சங்கம் அவரை அதிரடியாக நீக்கியது. உலக கோப்பை போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாள் இந்த சலசலப்பு அரங்கேறியது. உடனடியாக ஸ்பெயின் அணியின் புதிய பயிற்சியாளராக அந்த நாட்டின் முன்னாள் வீரர் பெர்னாண்டோ ஹியரோ நியமிக்கப்பட்டார்.

    உலக கோப்பை போட்டியில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணியின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. 2-வது சுற்றில் ரஷியாவிடம் பெனால்டி ஷூட்-அவுட்டில் வீழ்ந்து மூட்டையை கட்டியது. இந்த நிலையில் தோல்வி எதிரொலியாக பயிற்சியாளர் பதவியில் இருந்து 50 வயதான பெர்னாண்டோ ஹியரோ நேற்று விலகினார். ஏற்கனவே கவனித்து வந்த ஸ்போர்ட்டிங் இயக்குனர் பதவிக்கு திரும்பமாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் ஸ்பெயின் அணிக்கு புதிய பயிற்சியாளரை தேட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. #fernandohierro #spain #worldcup2018
    உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடக்கும் முக்கியமான ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி ஆப்பிரிக்க அணியான நைஜீரியாவை எதிர்கொள்கிறது. #FIFA2018 #Argentina #Messi #Nigeria

    ‘சி’ பிரிவில் முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் அணி 2 வெற்றிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்டது. இந்த பிரிவில் அடுத்த சுற்றை எட்டும் இன்னொரு அணி எது என்பது இன்று இரவு தெரிந்து விடும். 4 புள்ளிகளுடன் உள்ள டென்மார்க் அணி பிரான்சுடன் டிரா செய்தாலே நாக்-அவுட் சுற்றை அடைந்து விடலாம். அதே சமயம் ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அதிக கோல்கள் வித்தியாசத்தில் பெருவை வீழ்த்த வேண்டும், பிரான்ஸ் அணி, டென்மார்க்கை சாய்க்க வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் ஆஸ்திரேலியா, டென்மார்க் தலா 4 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போது கோல் விகிதாச்சாரம் அடிப்படையில் ஒரு அணிக்கு அதிர்ஷ்டம் கிட்டும்.

    ‘டி’ பிரிவில் முக்கியமான ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி, ஆப்பிரிக்க அணியான நைஜீரியாவை எதிர்கொள்கிறது. ஐஸ்லாந்துடன் டிரா கண்டு, குரோஷியாவுடன் படுதோல்வி அடைந்த அர்ஜென்டினா (1 புள்ளி) இன்றைய தனது கடைசி லீக்கில் கட்டாயம் வென்றாக வேண்டிய உச்சக்கட்ட நெருக்கடியில் உள்ளது. அப்போது தான் அடுத்த சுற்று வாய்ப்பு பற்றி நினைத்து பார்க்க முடியும். முதல் இரு ஆட்டங்களிலும் சொதப்பிய அர்ஜென்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லயோனல் மெஸ்சி இந்த ஆட்டத்திலாவது ஜொலிப்பாரா? என்ற ஏக்கத்துடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். தங்கள் அணியை அவர் வெற்றிகரமாக கரைசேர்க்க தவறினால் இத்துடன் அவரது சர்வதேச கால்பந்து வாழ்க்கை முடிந்து போகும் ஆபத்து கூட இருக்கிறது. அதே சமயம் அர்ஜென்டினாவுக்கு ‘ஆப்பு’ வைத்து அடுத்த சுற்றுக்குள் நுழைவதில் நைஜீரியா இளம் படையினரும் கங்கணம் கட்டி நிற்பதால் இந்த ஆட்டத்தில் அனல்பறக்கும் என்று நம்பலாம்.

    ஏற்கனவே 2-வது சுற்றை உறுதி செய்து விட்ட பலம் வாய்ந்த குரோஷியா அணி, கடைசி லீக்கில் ஐஸ்லாந்துடன் மோதுகிறது. இதில் குரோஷியா எளிதில் வெற்றி காணும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஒரு வேளை ஐஸ்லாந்து அதிர்ச்சி அளித்தால், அர்ஜென்டினாவுக்கு சிக்கல் உருவாகும். #FIFA2018 #Argentina #Messi #Nigeria
    ×