என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Footsteps"
- திருப்பூர் மாநகர் அதிக அளவிலான தொழிலாளர்கள் நிறைந்த பகுதி.
- குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெரும்பாலும் அரசு நகர பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகர் அதிக அளவிலான தொழிலாளர்கள் நிறைந்த பகுதி இவர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெரும்பாலும் அரசு நகர பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர். மாணவர்களும் இலவச பேருந்து பயண அட்டை பெற்றுள்ளதால் அரசு பேருந்தில் செ ல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் திருப்பூர் ஊத்துக்குளி சாலை வழியாக திருப்பூர் வரும் அரசு நகர பேருந்தில் பள்ளி மாணவர்கள் படியில் தோன்றியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்வதை கண்ட நபர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது பெற்றோர் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல ஒரு சில பேருந்துகள் மட்டுமே இருக்கும் காரணத்தால் அந்த நேரத்தில் பள்ளிக்கு தாமதம் ஏற்படும் என ஒரே பேருந்தில் ஏராளமான மாணவர்கள் பயணம் செய்கின்றனர். இதனால் பேருந்துகளில் போதிய இடவசதி இல்லாமல் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான வழித்தடத்தில் மாணவர்கள் இதுபோன்று படியில் தொங்கி பயணம் செய்யும் நிலை உள்ளதாகவும் குறிப்பிட்ட பள்ளி நேரத்தில் அதிக அளவிலான அரசு பேருந்துகளை இயக்கி மாணவர்கள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதுடன் பாதுகாப்பான பயணத்தி னை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.