என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Foreign Students"

    • பல்கலைக்கழகம், கல்லூரிகள் யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
    • பிரத்யேக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    திருப்பூர் :

    வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் பல்கலைக்கழகம், கல்லூரிகள் கட்டாயம் உரிய விவரங்களை யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அகில இந்திய கல்விக்க வுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

    பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இந்தியாவில் உயர்கல்வி பயில்கின்றனர். அவ்வாறு பல்கலைக்கழகம், கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் முழு விவரங்களை சேர்க்கையின் போதே educationindia.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் மாணவர்களும் இணையத ளத்தில் உரிய விவரங்களை உள்ளீடு செய்து பிரத்யேக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும். இது குறித்து கலை, அறிவியல், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், சட்ட பல்கலைக்கழக கல்லூரிகளில் ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என அகில இந்திய கல்விக்கவுன்சில் அறிவுறுத்தி யுள்ளது.

    • அறையை பயன்படுத்தி வந்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
    • அதிகாரிகள் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரிடம் ஆலோசனை.

    குஜராத் பல்கலைக்கழக தங்கும் விடுதியில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளை சேர்ந்த ஆறு மாணவர்கள் அறையை காலி செய்ய வலியுறுத்தப்பட்டு இருப்பதாக பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தங்குவதற்கான அவகாசம் முடிந்த பிறகும், அறையை பயன்படுத்தி வந்ததால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    முன்னதாக தங்கும் விடுதியில் நமாஸ் செய்த மாணவர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மார்ச் 16 ஆம் தேதி நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆப்கன் மற்றும் காம்பியாவை சேர்ந்த அதிகாரிகள் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரிடம் ஆலோசனை நடத்தினர்.

    "தங்குவதற்கான கால அவகாசம் முடிந்த பிறகும், தங்கும் விடுதியை பயன்படுத்தி வந்த ஆறு ஆப்கன் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க மாணவர்கள் அறையை காலி செய்ய வலியுறுத்தப்பட்டனர். இவர்கள் படிப்பை நிறைவு செய்துவிட்டனர். எனினும், அலுவல் பணிகள் முழுமை பெறாததால் தங்கும் விடுதியை பயன்படுத்தி வந்தனர்," என்று துனை வேந்தர் நீரஜ் குப்தா தெரிவித்தார்.

    "அவர்களுக்கான அலுவல் பணிகள் முழுமை பெற்ற நிலையில், அவர்கள் பாதுகாப்பாக அவர்களது நாட்டிற்கு செல்ல முடியும். முன்னாள் மாணவர்கள் யாரையும் தங்கும் விடுதியில் தங்க வைக்க நாங்கள் விரும்பவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் மாணவர்களிடம் விடுதியை காலி செய்ய அறிவுறுத்தி உள்ளனர்," என்று அவர் மேலும் தெரிவித்தார். 

    • இந்திய அதிகாரிகளைக் கனடா அரசு உளவு பார்த்தாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
    • இந்தியா - கனடா உறவில் விரிசல் விழுந்துள்ளது.

    கனடாவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு உள்ளதாக கனடா குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இருநாட்டு தலைவர்களும் தூதர்களை வெளியேற்றினர்.

    இதற்கிடையே, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளைக் குறிவைத்து வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டதாகக் கனடா வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மாரிசன் குற்றம்சாட்டினார். இதை கண்டித்து மாரிசனுக்கு எதிராக இந்தியா சம்மன் அனுப்பியது.

    மேலும் இந்திய அதிகாரிகளைக் கனடா அரசு உளவு பார்த்தாக மத்திய அரசு நேற்றைய தினம் புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. ஆடியோ மற்றும் வீடியோ மூலம் கனடா அரசால் இந்திய தூதரக அதிகாரிகள் உளவு பார்க்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கனடா, தங்களின் பாதுகாப்பாகவே அவர்கள் கண்காணிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.

    இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து கனடா வரும் மாணவர்கள் விரைவில் விசா பெற உதவும் Direct Stream Program (SDS) என்ற திட்டத்தை திடீரென கனடா அரசு ரத்து செய்துள்ளது.

    இந்தியா, சீனா உட்பட 14 நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கான விசா செயல்முறையை எளிதாக்கும் SDS திட்டம், 2018 ஆண்டு கொண்டு வரப்பட்டது.

    கனடாவில் உள்ள தற்காலிக குடியிருப்பாளர்களின் அளவைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    SDS திட்டத்தின் மூலம், குறைந்தது 2 வாரங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கிடைக்கும். இதுவே சாதாரண முறையில் விசா பெற வேண்டும் என்றால் குறைந்தது 8 வாரங்கள் வரை ஆகும். இதனால் கனடா சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் இனி நீண்ட நாட்கள் விசாவுக்காக காத்திருக்க நேரிடும்.

    ×