என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Foreign traders"
- நூலிழை ஆடை உற்பத்தியிலும் முத்திரை பதித்துள்ளதை வெளிநாட்டு வர்த்தகர்கள் கண்காட்சி வாயிலாக உணர்ந்தனர்.
- புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைத்த ஆயத்த ஆடைகள், குழந்தைகள் ஆடைகள், விளையாட்டு சீருடைகள் வரவேற்பு அதிகரித்துள்ளது.
திருப்பூர் :
இந்திய பின்னலாடை கண்காட்சி சங்கம்(ஐ.கே.எப்.,), திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஆகியன சார்பில் திருப்பூரில் 49வது இந்தியா சர்வதேச பின்னலாடை கண்காட்சி கடந்த மாதம் நடந்தது.கண்காட்சி, கருத்தரங்கு மற்றும் பேஷன் ேஷா அனைத்தும், செயற்கை நூலிழை ஆடை மற்றும் மறுசுழற்சி முறை ஆடைகளை மையப்படுத்தியே அமைந்திருந்தது. தூக்கி எறியும் பெட் பாட்டில் களில் இருந்து, பாலியஸ்டர் நூல் தயாரித்து, அதிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லாமல் சாயமேற்றி புதிய தொழில்நுட்பத்தில் தயாரித்த ஆடைகள் பெரும் வரவேற்பை பெற்றன.
அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள், உகாண்டா, பிரான்ஸ், இத்தாலி, கனடா, வங்கதேசம், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள், வர்த்தக நிறுவனத்தினர் கண்காட்சியை பார்வையிட்டனர். அத்துடன் டெல்லி, பெங்களூரு வில் உள்ள பிராண்டட் ஆயத்த ஆடை வர்த்தக நிறுவனங்களும் பங்கேற்றன. பருத்தி நூலிழை ஆடைகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் மட்டும் கவனம் செலுத்தி வந்த திருப்பூர், செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியிலும் முத்திரை பதித்துள்ளதை வெளிநாட்டு வர்த்தகர்கள் கண்காட்சி வாயிலாக உணர்ந்தனர். திருப்பூரின் நீடித்த நிலையான சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய உற்பத்தி திறமையை கண்டு பெரிதும் வியப்பில் ஆழ்ந்தனர்.
கண்காட்சி நிறைவடைந்து 10 நாட்களான நிலையில் திருப்பூரின் சூழலியல் பாதுகாப்பு தனிச்சிறப்புகள், வெளிநாட்டு வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.
ஜீரோ டிஸ்சார்ஜ் , சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி, மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு ஆகிய நீடித்த நிலையான பசுமை இயக்க பணிகள் குறித்த தகவல்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து இந்திய பின்னலாடைக் கண்காட்சி தலைவர் சக்திவேல் கூறியதாவது:-
கண்காட்சி வாயிலாக முக்கிய நாடுகளில் திருப்பூரின் தனிச்சிறப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காட்சிப்படுத்தியிருந்த செயற்கை நூலிழை துணிகள், புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைத்த ஆயத்த ஆடைகள், குழந்தைகள் ஆடைகள், விளையாட்டு சீருடைகள் குறித்தும் வரவேற்பு அதிகரித்துள்ளது.
சர்வதேச பசுமை கொள்கை, திருப்பூர் நிறுவனங்களால் பின்பற்றப்படுவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு வர்த்தகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதால் 50வது கண்காட்சியை அக்டோபர் மாதம் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.
திருப்பூரில் வடிவமைத்த செயற்கை நூலிழை ஆடைகளை காட்சிப்படுத்திய பேஷன் ேஷா , வெளிநாட்டு வர்த்தகர்களை கவர்ந்துவிட்டது.அதுதொட ர்பான வர்த்தக விசாரணை வேகமெடுத்துள்ளது. பருத்தி நூலிழை பின்னலாடைக்கான நகரம் என்ற பெயர் மாறி செயற்கை நூலிழை ஆடையிலும் திருப்பூர் முக்கிய இடத்தை பிடிக்கப்போ கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
சர்வதேச அளவில் அமெரிக்க டாலர் மதிப்பின் அடிப்படை யில் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் நடக்கிறது. டாலர் மதிப்பை குறைக்கவும் மற்ற நாட்டு பணமதிப்பின் அடிப்படையில் வர்த்தகம் செய்யவும், ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.சர்வதேச அளவில் இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் வர்த்தகம் செய்ய பல்வேறு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன; அதன்படி மத்திய ரிசர்வ் வங்கி 18 நாடுகளுக்கு அனுமதி அளித்துள்ளது. ஜெர்மனி, பிரிட்டன், கென்யா, இஸ்ரேல், மலேஷியா, மொரீசியஸ், மியான்மர், நியூசிலாந்து, ஓமன், ரஷ்யா, சிங்கப்பூர், இலங்கை, தான்சானியா, உகாண்டா உட்பட, 18 நாடுகள் அனுமதி பெற்றுள்ளன.இவற்றில் ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள், இந்திய ரூபாய் அடிப்படையில் வர்த்தகம் செய்ய துவங்கியுள்ளன. விருப்பம் தெரிவித்துள்ள நாடுகள் இந்திய வங்கியில் 'வோஸ்த்ரோ' கணக்கு துவக்க வேண்டும். அதன்படி, 'யூனியன் பாங்க் ஆப் இந்தியா' வங்கியில் வோஸ்த்ரோ கணக்கு துவங்கிய மலேசியா இந்திய ரூபாய் மதிப்பில் வர்த்தகம் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், இந்தியா - மலேசியா இடையே 1.59 லட்சம் கோடி ரூபாய் (19.4 பில்லியன் டாலர்) அளவுக்கு வர்த்தகம் நடந்து வருகிறது. இந்திய ரூபாயின் அடிப்படையில் வர்த்தகம் செய்ய மலேசியா முன்வந்துள்ளது. ரஷ்யா, அரபு நாடுகளை தொடர்ந்து மலேசியாவும் இதில் இணைந்துள்ளது. விருப்பம் தெரிவித்துள்ள நாடுகள் ரூபாயை சர்வதேச கரன்சியாக பயன்படுத்தும் போது பின்னலாடை ஏற்றுமதியும் அதிகரிக்கும். இந்தியாவின் பொருளாதாரம் உயரும். மலேசியாவுக்கு செயற்கை நூலிழை ஆடைகள் ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றனர்.
- புதுவை ராஜ்பவன் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் வக்கீல் ராம்முனுசாமி முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார்.
- புதுவைக்கு வரி ஈட்டித்தரும் புதுவை வணிகர்களின் வியாபாரம் அதிக அளவில் பாதிக்கப்படுவது வருந்தத்த க்கது.
புதுச்சேரி:
புதுவை ராஜ்பவன் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் வக்கீல் ராம்முனுசாமி முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் பண்டிகைக்காலங்களில் அண்டை மாநிலங்களில் இருந்து புதுவை திருமண மண்டபங்களில் ஒரு வாரம், 10 நாட்கள் சிறப்பு தள்ளுபடி என்ற பெயரில் வியாபாரம் செய்யும் நபர்களால் புதுவை மக்களை நம்பி ஆண்டுமுழுதும் வியாபாரம் செய்யும் புதுவை வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் புதுவை மக்களுக்கு வேலைவாய்ப்பளித்து, புதுவைக்கு வரி ஈட்டித்தரும் புதுவை வணிகர்களின் வியாபாரம் அதிக அளவில் பாதிக்கப்படுவது வருந்தத்த க்கது. பண்டிகைகாலங்களில் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் கடைவிரிக்கும் நிறுவனங்கள் தனிநபர்களின் துணிவகைகள் மற்றும் இதரபொருட்கள் பகட்டாக இருந்தாலும், பொருட்களின் தரம் மலிவானதாக உள்ளது.
பயன்படுத்திய சில நாட்களிலேயே அவற்றின் சாயம் வெளுக்கும்போது, முறையிட அவர்களின் கடை இருப்பதில்லை. வெகுசில நாட்களில் அவர்கள் தமது சொந்த மாநிலங்களுக்கு திரும்பிவிடுகின்றனர். இதனால் நமது மாநில மக்கள் தாங்கள் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை இழந்து, ஏமாற்றமடைந்து நிற்கும் நிலை ஆண்டுதோறும் தொடர்கதையாகி வருகிறது.
எனவே ஆண்டு முழுவதும் புதுவை மக்களை நம்பி புதுவை மக்களால் வணிகம் செய்துவரும் வியாபாரி களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வெளிமாநில வியாபாரி களுக்கு தடைவிதித்து புதுவை வியாபாரிகளின் வாழ்வாதாரம் சிறக்க உதவ வேண்டும்.
இவ்வாறு அதில் கூறினார்.
- ஏற்றுமதி வர்த்தகத்தில் பில் ஆப் லேடிங்'(பி.எல்.,) என்ற ஆவணம் முக்கியமானது.
- இறக்குமதியாளர் ஆடைக்கான தொகையை வங்கியில் செலுத்தி பி.எல்., ஆவணத்தை பெறவேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் உலகளாவிய வர்த்தகர்களிடம் ஆர்டர் பெற்று பின்னலாடைகளை தயாரித்து அனுப்புகின்றன. ஏற்றுமதி வர்த்தகத்தில் பில் ஆப் லேடிங்'(பி.எல்.,) என்ற ஆவணம் முக்கியமானது. ஏற்றுமதி நிறுவனம் ஆர்டர் சார்ந்த முழு விவரங்கள் அடங்கிய பி.எல்., ஆவண தொகுப்பை வங்கியில் ஒப்படைக்கிறது.
இறக்குமதியாளர் ஆடைக்கான தொகையை வங்கியில் செலுத்தி பி.எல்., ஆவணத்தை பெறவேண்டும். ஆவணத்தை வழங்கினால் மட்டுமே கப்பல் சரக்கு கையாளும் நிறுவனம் ஏற்றுமதியாளர் அனுப்பிய சரக்குகளை இறக்குமதியாளர் வசம் ஒப்படைக்கவேண்டும் என்பது விதிமுறை.
இது குறித்து திருப்பூர் ஆர்பிட்ரேசன் கவுன்சில் தலைவர் கருணாநிதி, உறுப்பினர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-
சில கப்பல் சரக்கு முகமை நிறுவனங்கள், ஆவண விதிகளை மீறுகின்றன. தொகை செலுத்திய விவரங்களுடன் கூடிய பி.எல்., ஆவணத்தை பெறாமலேயே ஆடைகளை இறக்குமதியாளரிடம் வழங்கி விடுகின்றன. சரக்கு கையாளும் நிறுவனமும் வெளிநாட்டு வர்த்தகர்களும் கூட்டணி சேர்ந்தால் மட்டுமே இத்தகைய மோசடிகள் சாத்தியம்.
திருப்பூரில் 10 ஏற்றுமதி நிறுவனங்கள் அனுப்பிய மொத்தம் 5 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகளை, பி.எல்., ஆவணமின்றி அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி நாட்டு வர்த்தகர்கள் கைப்பற்றியது தெரியவந்துள்ளது. இதில் பல்லடத்தை சேர்ந்த ஒரே ஏற்றுமதி நிறுவனம் மட்டும் 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகளை பறிகொடுத்துள்ளது. ஆவணமின்றி ஆடைகளை கைப்பற்றிக்கொள்ளும் வெளிநாட்டு வர்த்தகர்கள், தொகையை வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்.
ஏற்கனவே ஆய்வுக்கு உட்படுத்தி அனுப்பியபோதும், தரம் சரியில்லை என சாக்குபோக்கு கூறி, விலையை குறைக்கின்றனர். இதனால், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது.சட்டரீதியாக போராடி, வெளிநாட்டு வர்த்தகர்களிடம் இருந்து தொகையை பெறுவதற்குள் நிறுவனம் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்.
ஏற்றுமதி நிறுவனங்களுக்கு உரிய தொகையை பெற்றுத்தருவதற்காக ஆர்பிட்ரேசன் கவுன்சில் மூலம் சரக்கு கையாளும் நிறுவனங்கள் வெளிநாட்டு வர்த்தகர்கள் மற்றும் உள்ளூரில் இயங்கும் வர்த்தக முகமை நிறுவனத்தினரிடம் பேச்சு நடத்திவருகிறோம்.பின்னலாடை ஏற்றுமதியாளர் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். ஆர்டர்களுக்கு தவறாமல் இ.சி.ஜி.சி., எனப்படும் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்