search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Forestry Forest Extension Center"

    • விழுப்புரம் மாவட்டத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
    • விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளார்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில், பசுமை தமிழகம் உருவாக்குதல் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 23.69 சதவீதம் உள்ள பசுமை போர்வையை 33 சதவீதமாக உயர்த்த வேண்டி மாவட்டம் முழுவதும் 2022 & 2022-ம்வருட நிதியாண்டில் 5 லட்சம் மரக்கன்று நடவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தை அனைத்து அரசு துறைகள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை வனவியல் வனவிரிவாக்க மைய விளம்பர அலுவலர்முருகானந்தன் வசம் 94884 72656 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளார்.

    ×